அக்னிப்புரட்சி (15.05.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (15.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (15.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகளவில் 3 லட்சத்தை தாண்டியது  கொரோனா உயிரிழப்பு.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220 ஆக அதிகரிப்பு.

உலகளவில் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003லிருந்து 81,970ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  26,235லிருந்து 27,920ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,549லிருந்து 2,649ஆக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 434. பேர் தமிழகத்தில் இதுவரை 10,108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 பேர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 359 பேர் டிஸ்சார்ஜ் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,599-ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5 பேர் உயிரிழப்பு, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு. - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.

*சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மண்டலங்கள் அதிகபாதிப்பு:

ராயபுரம் மண்டலத்தில் 971 பேருக்கு கொரோனா தொற்று.

895 பாதிப்புடன் கோடம்பாக்கம் 2வது இடத்திலும், 699 பேருடன் திரு.வி.க.நகர் 3ம் இடத்திலும் உள்ளது.

தேனாம்பேட்டை- 608, அண்ணா நகர்- 468, வளசரவாக்கம்- 461.

தண்டையார்பேட்டை- 437, அடையாறு- 276, திருவொற்றியூர்- 127.

மாதவரம்-85, மணலி- 75, பெருங்குடி- 72, ஆலந்தூர்- 67, சோழிங்கநல்லூர்- 64.

*ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை- டாஸ்மாக் நிர்வாகம்.
சமூக வலைத்தளங்களில் மதுபான விற்பனை தொடர்பாக வரும் ‘லிங்க்’ போலியானது. மதுவிற்பனை குறித்து வந்த போலி டாஸ்மாக் ‘லிங்க்’ தடை செய்யப்பட்டுவிட்டதாக சென்னை காவல்துறை தகவல்.

*திருச்சியில் கொரோனா பணியில் ஈடுபட்டு வீடு திரும்பும் போது கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த சம்பவம்:
உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

கடந்த 13ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் குமார் உயிரிழந்தார். உயிரிழந்த குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் அறிவிப்பு.

*தொடக்க கல்வித்துறை இயக்குனர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு:
வரும் திங்கள் கிழமை முதல் பணிக்கு திரும்ப வேண்டும். - தொடக்க கல்வித்துறை உத்தரவு.

*சென்னை: கோயம்பேடு கொரோனா பரவல் குறித்து அமைச்சர் விளக்கம்.

3 இடங்களில் சந்தையை பிரித்து வைக்குமாறு கூறினோம்.
வியாபாரிகள் பிரதிநிதிகளுடன் துணை முதல்வரும் பேசினார்.
கோயம்பேடு சந்தையை 5 நாட்களில் மாற்றினோம். கொரோனோ தொற்று ஏற்பட்டதும் துரிதமாக தமிழக அரசு செயல்பட்டது. கோயம்பேடு சந்தையை உடனடியாக மூட முடியாது என தெரியும்.
அனைத்து தரப்பினரின் நலனையும் ஆய்வு செய்து எடுத்த நல்ல முடிவு.

*கொரோனா நோயாளி தப்பியோட்டம்:
சென்னையில் மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்.

ராஜீவ்காந்தி அரசு மருத்து வமனையில் இருந்து தப்பியவரை தேடும் பணி தீவிரம். கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய 43 வயது நபருக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா உறுதியானது.
நோயாளி வீடு அமைந்துள்ள சின்மயா நகர் பகுதியில் தேடும் பணி தீவிரம்.

*கல்லூரி திறப்பு எப்போது? - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்.

தமிழகத்தில் கல்லூரி திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர்விளக்கம்.
கொரோனா முழுவதும் முடிந்த பிறகே கல்லூரிகள் திறப்பு.

கல்லூரிகளில் தற்போது கொரோனா முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் விளக்கம்.
கல்லூரிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பிறகே திறக்கப்படும்.

*மருத்துவ பரிசோதனைக்கு பயந்து 19 பேர் தப்பியோட்டம்:

சிவகங்கை: மானாமதுரையில் மருத்துவ பரிசோதனைக்கு பயந்து 19 பேர் தப்பியோட்டம். கொல்கத்தாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை. பரிசோதனைக்கு பயந்து ஓடும் பேருந்தில் இருந்து 19 பேர் தப்பியோட்டம்.

*ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து தொழில்துறையினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை.

இயந்திரங்களை பராமரிக்க தொழில் துறைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தொழில் துறையினர் விழிப்புணர்வுடன் இருந்து நோய் பரவலை தடுக்க வேண்டும்.

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.101 கோடி அளவிற்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் துறை மேம்பாட்டுக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

*'தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெயில். தருமபுரி, வேலூர், கோவை, மதுரை உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்தது வெயில்.

*மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் 10 வகுப்பு தேர்வு மையங்களாக மாற்றம்.

ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப் படுவார்கள்.
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர்.
12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாறுகின்றன.

*அரசு மதுக்கடைகள் நாளை முதல் திறப்பு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.

சென்னை காவல் எல்லை மற்றும் திருவள்ளூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது. மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன் மட்டுமே வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும். டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

*கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது சேலம்.
கொரோனா பாதித்த 35 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதால் நோய் பாதிப்பு இல்லாத மாவட்டமானது சேலம். சேலம் அரசு மருத்துவமனை யில்  சிகிச்சை பெற்று வந்த 3 பேர் கடைசியாக குணமடைந்து வீடு திரும்பினர்.

*புகையிலை விற்பனையை தடை செய்யுங்கள்.- மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

கொரோனா பரவாமலிருக்க புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages