தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி - 15 - Agnipuratchi

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி - 15

Share This

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி - 15

கல்வியில் மாற்றம் வேண்டுமென பா.ம.க சார்பில் முன்னெடுத்த முக்கியமான சில மட்டும்...
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே, காலத்திற்கேற்றவாறு கல்வியில் மாற்றங்கள் வரவேண்டுமென்று பா.ம.க சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம்.அதன் தேவைகளும் நடைமுறைப்படுத்தப்படும் முன்மாதிரியும் கூட சுட்டிக்காட்டி வருகின்றோம்.

முதலமைச்சர் அம்மையார் அவர்கள்: மிஸ்டர் மணி,நீங்கள் கல்வியைப் பற்றி அடிக்கடி நிறைய சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.நான் மறுக்கவில்லை. ஆனால் காலத்திற்கேற்ப வளர்ச்சி வேண்டு மென்பதற்காகவே "அறிவியல் தமிழ்" என்ற புதிய பாடத்தை நான் தான் அறிமுகம் செய்தேன். தற்போது நடந்துகொண்டிருக்கின்றது அதை தெரியாமலே பேசுகின்றீர்.

ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே, "அறிவியல் தமிழ் " என்ற பாடம் இருந்தால் அது தமிழ்நாடு முழுவதும் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கவேண்டும். அதற்கு பாடப்புத்தகம், பாடவேளை (PERIOD), தனி ஆசிரியர்,தேர்வு எல்லாம் இருக்க வேண்டுமே.அப்படி இல்லை. முதலமைச்சர் அவர்களுக்கு தவறான தகவல்களை யாரோ கொடுத்திருக்கிறார்கள் என்று கருதுகின்றேன்.
 
முதலமைச்சர் அவர்கள்: மிஸ்டர் ஜி.கே.மணி அவர்களே,நீங்கள்தான் தவறாகப் பேசுகிறீர்கள்.நான் உங்களுக்கு ஆதாரத்தோடு காண்பிக்கிறேன்.
 
முதலமைச்சர் அவர்கள்:(மீண்டும் ஒருநாள்) "அறிவியல் தமிழ்" என்ற புத்தகத்தையும்,ஒரு வினாத்தாளையும் காண்பித்து மிஸ்டர் ஜி.கே.மணி நீங்கள் இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங் கள். நான்தான் மிகப் பெரிய மாறுதல் களை கொண்டு வந்திருக்கின்றேன்.
 
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,நீங்கள் மாற்றத்தைக் கொண்டு வந்தால் நான் அதை வரவேற்கின்றேன்.அதுதான் தேவை. ஆனால் நீங்கள் காண்பிப்பது எந்தப் பள்ளியின் வினாத்தாள்? இதுமாதிரி தமிழ்நாடு முழுவதும் இல்லையே.
( இதுகுறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது )
தற்போதைய நடைமுறை மாணவ_ மாணவிகளை கசக்கி பிழிந்து மனப்பாடம் செய்வதாகவே உள்ளது. குழந்தைகளின் சிந்தனையை தூண்டி,திறனை மேம்படுத்தி மனம், உடல், வாழ்க்கை, வளர்ச்சி ஆகியவற்றை முன்னெடுப்பதாக அமைய வேண்டும். "ஏட்டுச் சுறைக்காய் கறிக்கு உதவாது" .கல்வித் திறன் பெற்ற நாடே சிறந்த நாடு.செழித்த நாடு திறன் மேம்பாடு முக்கியம்.
 
ஜி.கே.மணி:முதல் அமைச்சர் அவர்களே,தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் தனியார் கலை_ அறிவியல் கல்லூரிகள்,தனியார் பொறியியல் கல்லூரிகள்,தனியார் தொழில்நுட்பப் பயிலகம் (POLYTECHNIC) வியாபித்துள்ளன. ஏழைக் குடும்பத்து மாணவ மாணவிகள் கட்டணம் செலுத்தி படிக்க மிக மிக அவதிப்பட்டு வருகின்றனர்.அரசுக் கல்லூரிகள் நீண்ட காலமாக துவங்குவதே இல்லை.ஏன் இந்த நிலை?
 
முதலமைச்சர் அவர்கள்:நண்பர் மணி அவர்களே,உங்கள் பகுதியில் நீங்கள் கல்லூரி துவங்குங்கள். உடனே அனுமதி வழங்குகிறோம்.
 
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே, நான் கல்லூரி துவங்கும் அளவுக்கு பணம் படைத்தவனும் அல்ல.அது எனது நோக்கமும் அல்ல.
 
அமைச்சர்: ஜி.கே.மணி அவர்களே, உங்களிடம் போதிய பணவசதி இல்லையென்றால்,யாராவது வசதி படைத்தவர்களை சேர்த்துக்கொண்டு கல்லூரி துவங்குங்கள்.உங்கள் பகுதி மாணவர்களை சேர்த்து கல்வி கொடுங்கள்.
 
ஜி.கே.மணி:அமைச்சர் அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் தெரிவிக்க விரும்புவது .நானோ தனியாரோ கல்லூரி துவங்குவதற்காக அல்ல.நாங்களே கல்லூரி துவங்கினா லும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.ஆனால் கட்டணம் இல்லாமல் இலவசமாக மேற்படிக்கு அரசு கல்லூரி துவங்க வேண்டு மென்பதுதான் எங்கள் நோக்கம்.அரசு கல்லூரி துவங்குங்கள்.நல்ல அறிவிப்பை வெளியிடுங்கள்.
 
முதலமைச்சர் அவர்கள்:ஜி.கே.மணி உங்களுக்கு எத்தனைமுறை பதில் சொல்லியிருக்கிறேன்.எங்களையே குறை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். இது நான் செய்த குறையில்லை. எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலே கொண்டு வந்தது. (உணர்ச்சி வசப்பட்டு).
 
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே, எத்தனை ஆண்டு காலம் எம்.ஜி.ஆர் செய்தார், எம்.ஜி.ஆர் செய்தார் என்றே சொல்லப்போகிறீர்கள்.அதை மாற்றி இதே சட்டமன்ற அவையில் கொள்கை முடிவாகவோ, சட்டமாகவோ  கொண்டு வர முடியாதா ? ஏழை மாணவ மாணவிகள் கல்வி நலன் கருதி அரசு கலை_அறிவியல் கல்லூரிகள்,அரசு பொறியியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்று ஒரு வரி தீர்மானத்தில் உடனே முடிவெடுக்கலாமே! இதை பா.ம.க உறுப்பினர்களும் மற்ற கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினோம்
 
முதலமைச்சர் அவர்கள்: ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற அரசின் சார்பில் கல்லூரிகள் துவங்கப்படும்.முதலில் மணி அவர்களின் தொகுதி மேட்டூர் மற்றும் வால்பாறை உள்ளிட்ட 5 இடங்களில் கலை_அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு முதலே துவங்கப்படும்.மற்ற இடங்களில் பின்னர் படிப்படியாக துவங்கப்படும் (என்று அறிவித்தார்).
 
ஜி.கே.மணி:கோரிக்கையை ஏற்று புதிய கல்லூரிகள் துவங்க அறிவித்த முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு நன்றி.மேலும் அரசு பொறியியல் கல்லூரிகள் துவங்க வேண்டுமென்று வலியுறுத்தி கொண்டிருக்கின்றோமே அதையும் துவங்குங்கள்.
 
முதலமைச்சர் அவர்கள்:ஜி.கே.மணி, உங்கள் திண்டிவனம்,பண்ருட்டி, விழுப்புரம்,அரியலூர் போன்ற ஐந்து இடங்களில் பொறியியல் கல்லூரிகள் துவங்கப்படும்.மற்ற இடங்களில் படிப்படியாக பின்னர் துவங்கப்படும் (என்று அறிவித்தார்). இவ்வாறு எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் அப்போது மேட்டூர்,வால்பாறை, குளித்தலை, பெண்ணாகரம், ஒரத்தநாடு, வேதாரண்யம், புதுக்கோட்டை, தேனி,சுரண்டை ஆகிய 14 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகளும்,
அதேபோல் திண்டிவனம்,விழுப்புரம், பண்ருட்டி,அரியலூர், திருவண்ணாமலை, திருக்குவளை (கலைஞர் சொந்த ஊர்),தஞ்சாவூர், திண்டுக்கல்,காஞ்சிபுரம்,தூத்துக்குடி, கன்னியாகுமரி,இராமநாதபுரம் ஆகிய இடங்களில் 12 பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டன. அன்று முதல் தற்போதும் தொடர்ந்து அரசு கலை_ அறிவியல் கல்லூரிகளும்,அரசு பொறியியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு வருகின்றன.
  
ஜி.கே.மணி:தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசமாக கிடைத்திட மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அரசு கொள்கை முடிவெடுத்து துவங்க வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கின்ற எங்கள் மருத்துவர் அன்புமணி அவர்கள் மத்திய அரசின் சார்பில் ஒப்புதல் அளிக்க ஆர்வமாக உள்ளார் என்றும் முதலில் தர்மபுரியில் துவங்க வேண்டுமென வற்புறுத்தி,வாதாடி அப்போது வரிசையாக தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருவாரூர்,சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில்  மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. (தற்போதும் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன). அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள் கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் துவங்கப்பட்டன.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகமும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு வேலூரில் திருவள்ளூவர் பல்கலைக் கழகமும் துவங்கப்பட்டன.பழமையான பிரசித்தி பெற்ற சென்னை பல்கலைக்கழகம் மேலும் மேம்படுத்தப்பட்டன.
 
கிராமப்புற ஏழை,எளிய குடும்பத்து குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி இலவசமாக படிக்க தனி இட ஒதுக்கீடு வேண்டுமென தொடர்ந்து வாதாடி வந்ததன் அடிப்படையில் 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.இதனால் ஏராளமான கிராமத்து மாணவர்கள் பயன்பெற்றனர்.அது பின்னர் 25% ஆக உயர்த்தப்பட்டு,நீதிமன்றம் மூலமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
 
தனியார் பள்ளிகள்,கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகின் றனர். கட்டணங்கள் வரையறுக்க வேண்டும்.உரியவாறு நிர்ணயிக்க வேண்டுமென தொடர்ந்து வாதாடி வந்தோம். அதை ஏற்றுக்கொண்டு, அதன் பிறகு ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கட்டணங்களை ஆய்வு நடத்தி பள்ளி,கல்லூரியின் அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டன. (இந்த நடைமுறை தற்போதும் தொடர்ந்து நீடித்து வருகின்றன ).
  
கல்வி கட்டணமில்லாமல்,மிகுந்த தரத்துடன்,விளையாட்டுடன் கூடியதாக இருக்க வேண்டும். பள்ளி கல்லூரி களில் நீதிபோதனை வகுப்பு, விளையாட்டு, யோகா கட்டாயம் இருக்க வேண்டுமெனவலியுறுத்தினோம்.அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. பா.ம.க கல்விக்காக தொடர்ந்து முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு சாதனைகள் படைத்துள்ளது. "சமச்சீர் கல்வி " யின் நடவடிக்கை நீண்டது. பின்னர் குறிப்பிடுகின்றேன்.

மற்றவை அடுத்து பகுதி-15 ல் வரும்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages