அக்னிப்புரட்சி (17.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.
உலக நாடுகளை சேர்ந்த 3,18,321 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால்47,26,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18,97,297 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 45,008 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியது:
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை - 94,791. ஆக அதிகரிப்பு
34,109 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர்.
2,887 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
*தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரிப்பு.
சென்னையில் மட்டும் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 74 லிருந்து 78 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்துள்ள நிலையில், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 4,172 ஆக அதிகரிப்பு.
*மிக அதி தீவிர புயலாக மாற உள்ள அம்பன். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான அம்பன் வடமேற்கு திசையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்.
வங்கக்கடலில் அம்பன் புயல் உருவாகி உள்ளதால் கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
*மதுரை : மேலூர் அருகே அன்புநாதன், ஆயம்மாள் ஆகிய இருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை.
*தமிழகத்தில் நேற்று, டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை.
*தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த மாணவர்கள் பொதுத்தேர்வு மையங்களில் தேர்வு எழுதக் கூடாது.
100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்-கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு.
தனிமைப்படுத்த பகுதிகளுக்கு அங்கேயே சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும்- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அறிவுறுத்தல்.
*10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இபாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி https://tnepass.tnega.org/#/user/pass என்ற லிங்க் மூலம் மாணவர்கள்,ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இபாஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
*பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். - நடுவண் அரசு
மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மதத்துடன் இயக்கலாம்.
அனைத்து விதமான பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
மெட்ரோ ரயில் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமலில் இருக்கும்.
விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி, பார்வையாளர் களுக்கு அனுமதி இல்லை.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் , சிவப்பு மண்டலங்கள் குறித்து மாநிலங்களே முடிவு செய்யலாம்.
வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்.
அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம்.
மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நடமாட்டத்தை தடுக்க கூடாது.
சரக்கு வாகனங்கள் மாநிலங்கள் இடையே வந்து செல்ல தடை இல்லை.
இரு மாநிலங்களும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கு இடையில் பேருந்து, ஊர்திகள் போக்குவரத்தை அனுமதிக்கலாம்.
முடி திருத்தகம், அழகு நிலையங்களை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. - நடுவண் அரசு
No comments:
Post a Comment