அக்னிப்புரட்சி (18.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது.
மே 18 தொடங்கி மே 31 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்.
முடிதிருத்த நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களைத் திறப்பதற்கு தடை.
சலூன்களை திறக்க மே 31ம் தேதி வரை தடையை நீடித்து தமிழக அரசு அறிவிப்பு.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.01 லட்சமாக உயர்வு.
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,58,047ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,16,651ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,169 ஆக உயர்வு.
நாடு முழுவதும் இதுவரை 3,029 பேர் உயிரிழப்பு.
36,824, பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
ஒரே நாளில் 5,242 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.
நாட்டிலேயே அதிக பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடம்.
*தமிழகத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,776 ஆக அதிகரிப்பு.
சென்னையில் மட்டும் இன்று 364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7117 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 78 லிருந்து 81 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்துள்ள நிலையில், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 4,406 ஆக அதிகரிப்பு.
*சென்னையில் அத்தியாவசிய, அவசரப்பணி மற்றும் 50% அரசு ஊழியர்களுக்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கப்படும்.
தேவை ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு.
- மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன்.
*சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,041, திரு.வி.க. நகர் மண்டலத்தில் 790 பேருக்கு கொரோனா உறுதி.
- சென்னை மாநகராட்சி.
*ராமேஸ்வரம், தங்கச்சிமடம்,பாம்பன், மண்டபம் துறைமுக பகுதிகளில் நள்ளிரவில் சூறைக்காற்று வீசியதால் நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகு கள் சுமார் 30 க்கும் மேற்பட்டவை சேதம்.
சூறைக்காற்றால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப் பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
*அம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது மிக அதி தீவிர புயலாக மாறியது அம்பன் - வானிலை ஆய்வு மையம்.
சென்னைக்கு கிழக்கே 650 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல். கடல் கொந்தளிப்புடன் இருக்கும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.
*டாஸ்மாக்கில் இரவு 7 மணி வரை மது விற்பனை..!:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை என இருந்த நிலையில், இரவு 7 மணி வரை மதுவிற்கலாம் என அறிவிப்பு.
*10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
தேர்வு நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை. ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்.
ஜூன் 1 முதல் 12 வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.
*ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.6.05 கோடி வசூல்.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4.88 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு; 4 லட்சம் வாகனங்கள் பறிமுதல். தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 4.60 லட்சம் வழக்குகள் பதிவு. - காவல்துறை.
*திருப்பூர்: அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம் அடிக்கல். திருப்பூர் அருகே நல்லூர் கிராமத்தில் ₹336.96 கோடி மதிப்பில் கல்லூரி கட்டப்பட உள்ளது.
*மேட்டூர் அணை திறப்பு - முதல்வர் ஆலோசனை:
சேலம் மேட்டூர் அணையை ஜூன் 12இல் திறப்பது குறித்து காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.
*கொரோனாவை தடுக்க அலட்சியமாக இருந்தது போல் 10ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதிலும் அவசரம் காட்டுகிறது தமிழக அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைத்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின் உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும். - மு.க.ஸ்டாலின்.
*விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம். விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும் - முதல்வர் பழனிசாமி.
*சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு:
சைதாப்பேட்டை ஆயுதப்படை காவலருக்கு கொரோனா உறுதி.
கொத்தவால்சாவடி நுண்ணறிவு பிரிவு காவலருக்கு நோய் தொற்று உறுதியானது.
*விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்:
மானியம் வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு.
மத்திய அரசின் புதிய பொருளாதார திட்டங்கள் வளர்ச்சிக்கு வித்திடும் என நம்புகிறேன். மாநில அரசின் கடன் வரம்பு குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்- முதலமைச்சர்.
*உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் அம்பன் புயல்-பிரதமர் மோடி அவசர ஆலோசனை.
உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை.
அம்பன் புயல் மே 20ம் தேதி மேற்கு வங்கம், வங்க தேசம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு.
*சினிமா பணிகளுக்கு முழுவதும் அனுமதி கொடுக்க கோரிக்கை.
அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு.
படப்பிடிப்பு, திரையரங்கு உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
*ஊரடங்கு வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு.
ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது.
மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்.
தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம்.
*தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரிசி பைக்குள் வைத்து டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது செய்யபட்டனர். நூதன முறையில் மதுபாட்டில்களை கடத்தியவர்களை திருக்கனுர் போலீசார் கைது செய்தனர்.
*கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில், பொது போக்குவரத்துக்கு அனுமதி.
மாநிலத்தில் ஞாயிற்று கிழமை மட்டும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் எனவும் அறிவிப்பு. திரையரங்குகள், மால் தவிர அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் திறக்க அனுமதி.
*ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு.
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. நடப்பாண்டில் சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.
குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும்.
*நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு.
ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு.
காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு. தேர்வர்கள் சானிடைசர்கள் கொண்டு வர அறிவுறுத்தல்.
மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும்.
*மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிப்பு- தமிழக அரசு. வழக்கறிஞர் ராஜசேகர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
*புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது புதுச்சேரி அரசு முடிவு.
புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிப்பு.
தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் மது வாங்க அனுமதி இல்லை.
*தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் - தமிழக அரசு.
தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
*புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கம்.- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரிக்குள் தனிமனித இடைவெளியுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.
மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கம் புதுச்சேரியில் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
*ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்கலாம். - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி. முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து உத்தரவு.
சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை.
பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுரை.
முடி திருத்தும் நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயம். அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம் என - முதலமைச்சர் தனது உத்தரவில் கூறினார்.
*பிரதமர், நிதியமைச்சர் அறிவித்த பொருளாதார நிதித்தொகை ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடிதான்; இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் - ப.சிதம்பரம் ட்வீட்.
No comments:
Post a Comment