அக்னிப்புரட்சி (19.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.40 லட்சமாக உயர்வு.
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,07,371ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,20,130ஆக உயர்வு.
*இந்தியாவில் லட்சத்தை கடந்தது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,139 ஆக உயர்வு.
நாடு முழுவதும் இதுவரை 3,163 பேர் உயிரிழப்பு.
39,184 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிக பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடம்.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 688 பேர் கொரோனா பாதிப்பு இன்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரிப்பு.
இன்று சென்னையில் மட்டும் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு இதோடு சென்னையில் மட்டும் 7,672 ஆக அதிகரிப்பு. இன்று உயிரிழந்தோர் 3 பேர் இதோடு சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரிப்பு.
இன்று குணம்மடைந்தோர் 489 பேர் இதோடு சேர்த்து 4,895 குணம் மடைத்துள்ளனர் 7,466 பேர் சிகிச்சையில் உள்ளனர்
*தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,92,981 பேர் கைது.
4,65,241 வழக்குகள் பதிவு - 4,03,777 வாகனங்கள் பறிமுதல்.
ஊரடங்கு விதிகளை மீறியதற்காக ரூ.6.39 கோடி அபராதம் விதிப்பு.
*சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிப்பு.
பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டோர் கூடவும் தடை விதிப்பு - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
சென்னையில் 144 தடை உத்தரவை மே.31 வரை நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆணை.
*கேரளாவில் ஏ.சி. வசதியின்றி நிபந்தனைகளுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதி. சுழற்சி முறையில் 50% ஊழியர்களுடன் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி - முதலமைச்சர் பினராயி விஜயன்.
*தெலங்கானாவில் மாஸ்க் அணியாவிடில் ரூ.1,000 அபராதம்.
தெலங்கானாவில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்; உத்தரவை மீறினால் ரூ.1,000 அபராதம்- முதல்வர் சந்திரசேகர் ராவ்.
*கந்தர்வகோட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்.
தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. தண்ணீர் எடுக்க சென்ற சிறுமியை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் குளக்கரைக்கு சென்றபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
வன்முறை செய்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.
*சூப்பர் புயலாக உருவெடுத்து இருக்கும் ஆம்பன் புயல் மிக மோசமான சேதத்தை விளைவிக்கும்-இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது 195 கிமீ வேகத்தை கூட எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.
*என்எல்சி விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு.
கடலூர்: நெய்வேலி என்.எல்.சியின் 2 ஆவது அனல்மின் நிலையத்தில் கடந்த 7ம் தேதி பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்த 8 பேரில், ஒப்பந்த தொழிலாளி அன்புராஜா(47) என்பவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு. ஏற்கனவே 4 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு.
*தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்கு. தற்போது சிறையில் உள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளில் கைது. தணிகாசலம் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
No comments:
Post a Comment