பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள். 5 வது கட்டமாக புதிய அறிவிப்புகளை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார் - Agnipuratchi

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள். 5 வது கட்டமாக புதிய அறிவிப்புகளை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்

Share This

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள். 5 வது கட்டமாக புதிய அறிவிப்புகளை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

*மிக சிக்கலான ஒரு காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். சுய சார்பு பாரதம் திட்டத்தை வலுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

*சரக்குகளை கையாளுவதில் உள்ள சிரமங்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

*நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி உள்ளோம்.

*பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழைகள் நேரடியாக பயன்பெற முடியும்.

*8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் செலுத்தி உள்ளோம்.

*தனித்துவம் மிக்க இந்தியாவை உருவாக்க இந்த திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

*வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ.3660 கோடி வழங்கப்பட்டுள்ளது.

*6.8 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

*2.20 கோடி கட்டுமான தொழிலாளர் களுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ.3950 கோடி நிதி ஒதுக்கீடு.

*2 மாதங்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

*உஜ்வாலா திட்டத்தின் கீழ் விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

*20 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம்  ரூ.10 கோடி அளவிற்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டுள்ளது.

*தற்போதைய சவால்கள் மேலும் வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கும்.

*10025 கோடி ஜன்தன் கணக்குகள் மூலம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

*ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்பட உள்ளன.

*பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

*ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.
இ-பாடசாலை திட்டத்தின் கீழ் மேலும் 200 பாடப் புத்தகங்கள் சேர்ப்பு.

*ஏற்கனவே 3 கல்விச் சேனல்கள் உள்ள நிலையில் மேலும் 12 புதிய கல்விச் சேனல்கள் தொடங்கப்படும்.

*புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களுக்காக தனியார் டி.டி.எச் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

*ஊரடங்கு முடிவடைந்த பிறகு தொழில்துறை சந்திக்க இருக்கும் சவால்கள் குறித்த சீர்திருத்த அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

*நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, சட்டம் உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி உள்ளோம்.

*இக்கட்டான சூழலாக இருந்தாலும், இது ஒரு நல்ல வாய்ப்பு என பிரதமர் கூறி இருக்கிறார்.

*100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், கல்வி மற்றும் சுகாதாரம், வணிகம்.
பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசுகள், எளிமையாக தொழில் துவ​ங்குவது.ஸநிறுவன சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட 7 அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன.

*கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்க 15.000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

*மருத்துவம், சுகாதார பணியாளர் விளையாட்டுகளின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

*மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன,

*மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை 51 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது.

*4113 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

*இன்றைய 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கானது.

*இதுவரை 87 லட்சம் N95 முகக் கவசங்களும், 11 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.

*மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்க 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

*சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த நிதி உதவும்.

*ஊரக, நகர பகுதிகளில் சுகாதார நல மையங்கள் மேம்படுத்தப்படும்.
சுகாதார துறையில் பொது செலவின தொகை அதிகரிக்கப்படும்.

*மக்கள் சுகாதார பரிசோதனை மையங்கள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்படும்.

*ஐ.சி.எம்.ஆர் மூலம் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

*சுகாதார திட்டங்களுக்கான செலவினங்கள் மேலும் அதிகரிக்கப்படும்.

*கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தொழில்நுட்ப உதவியுடன் கல்வித்துறையை வலுப்படுத்த பிரதமர் இ-வித்யா திட்டம்.

*டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வழி கல்வி கற்பித்தல் உடனடியாக செயல்படுத்தப்படும்.

*திக்‌ஷா என்ற பெயரில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே தேசம் ஒரே கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும்.

*100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வசதி இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்தப்படும்.

*பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணையவழி கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும்.

*மனோதர்பன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

*தொடக்கக் கல்வியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திறன் மேம்பாடு வரைவு திட்டங்கள் வகுக்கப்படும்.

*ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான தொழில்துறைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் செய்வதை எளிமையாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

*கொரோனா வைரஸ் காரணமாக திருப்பி செலுத்தப்படாத சிறுகுறு நிறுவனங்களின் கடன் வாராக் கடனாக எடுத்துக் கொள்ளப்படாது.

*நிறுவன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டமாக அமலுக்கு வரும்.

*பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து எளிதாக தொழில் செய்ய நடவடிக்கை.
தொழில் தொடங்கும் முறைகள் மேலும் எளிமையாக்கப்படும்.

*சிறு நிறுவனங்கள், தனிநபர் நிறுவனங்களுக்கு வாராக்கடன்களுக்கு குறைந்தபட்ச அபராதம் வசூலிக்கப்படும்.

*திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்பதற்கு புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும்.

*வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி காலக்கெடுவை நீட்டித்து கொள்ளலாம்.

*பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படும்.
தனியார் பங்களிப்பு இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தொடரும்.

*சில முக்கியமான துறைகளில் பொதுத்துறை  நிறுவனங்களின் பங்குகள் குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்குமாறு அனுமதிக்கப்படும்.

*கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மாநில அரசின் வருவாய் பெருமளவு குறைந்துள்ளது.

*இக்கட்டான நேரத்தில் மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

*வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறித்த காலத்தில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.

*வருவாய் பற்றாக்குறை நிதியாக மாநில அரசுகளுக்கு 12,390 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

*சில முக்கியமான துறைகளில் பொதுத்துறை  நிறுவனங்களின் பங்குகள் குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்குமாறு அனுமதிக்கப்படும்.

*மாநில அரசுகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பில் 14 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.ஸஇன்னும் 86 சதவீத வரம்புகளை மாநில அரசுகள் பயன்படுத்தாமல் உள்ளது.

*மாநில அரசுகளின் கடன் வாங்கும் வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பு.ஸமாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

*இதன் மூலம் மாநில அரசுகளுக்கு கூடுதலாக 4.28 லட்சம் கோடி நிதி கிடைக்கும்.

*மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகங்களுக்கு 90 ஆயிரம் கோடி.

*புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்க 3500 கோடி.

*முத்ரா கடனுதவி திட்டங்களுக்கு 1.500 கோடி.

*சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்க 5000 கோடி.

*உணவுப் பொருள் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி.

*நபார்டு வங்கிகளுக்கு 30 ஆயிரம் கோடி.

*மாநிலங்களுக்கான கடன் வரம்பு உயர்வில் 3.5 சதவீதம் வரை எந்த நிபந்தனையும் கிடையாது.

*மீதமுள்ள 1.5 சதவீதம் சில குறிப்பிட்ட திட்டங்கள், சீர்திருத்தங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages