அக்னிப்புரட்சி (20.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,00,295 லட்சமாக உயர்வு.
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,70,680 ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,25, லட்சமாக உயர்வு.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750ஆக உயர்வு:
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163லிருந்து 3,303ஆக உயர்வு. - மத்திய சுகாதார அமைச்சகம்.
*மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 9,639ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325ஆக உயர்வு.
* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. இன்று மட்டும் கொரோனா தொற்றால் மேலும் 743 பேர் பாதிப்பு.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,191 ஆக உயர்வு.
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 557 பேர் பாதிப்பு. சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,228 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு.
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 987.
மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்பிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 83 பேர்.
*அம்பன் புயல் பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.
அம்பன் புயல் மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது. புயல் காரணமாக ஒடிசாவில் 106 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.
*’பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் நிவாரணம்’
நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும். - முதல்வர் பழனிசாமி.
*வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவு மீண்டும் 30 விநாடிகள் வரை நீட்டிப்பு
*ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை 15 விநாடிகளில் இருந்து 30 விநாடிகளாக மீண்டும் உயர்த்தியுள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்தால் இந்த புதிய நேர அளவை பயன்படுத்தலாம்
*ஜூன் 1ம் தேதி முதல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயில்களில் வழிபடலாம்.
*Amphan- தமிழகத்திற்கு பாதிப்பில்லை.
- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
வங்கக்கடலில் உருவான Amphan புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு.
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
*சலூன் கடைகளை திறக்க உத்தரவிடக் கோரி வழக்கு!
தங்கள் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முடித் திருத்துவோர் சங்கம் சார்பில் முனுசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒரு வார காலத்திற்கு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு!
*மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடத்திக் கொள்ளுங்கள்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி முகமது அயூப் வேண்டுகோள்.
கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் ஆயத்தம்!
மூன்று அடுக்கு உயர்ரக மருந்துகளை தெளிக்கும் பணிகளை துவக்கியது சிஎம்டிஏ!
*அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்.
15% வரை இட ஒதுக்கீடு அளிக்கலாம் என பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு.
விசாரணை முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.
அரசின் ஒப்புதலுக்குப்பின், வரும் கல்வியாண்டில் தனி இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என எதிர்பார்ப்பு.
*புயல் எச்சரிக்கையால் மேற்கு வங்கத்தில் மேலும் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு.
ஒடிஷாவில் 1,58,640 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு.
ஃபானி புயலின் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை-என்.டி.ஆர்.எஃப்.
*கொரோனா : 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்.
*கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
*மே 25 முதல் படிப்படியாக உள்நாட்டு விமான சேவை-விமான நிறுவனங்கள் தயராக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்.
விமான நிலையங்களிலும் முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவு.
விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
கொரோனா : 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
*மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவிப்பு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.
மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக ரூ.46 ஆயிரம் கோடியை விடுவித்தது மத்திய அரசு.
*தமிழகத்திற்கு ரூ.295 கோடி ஒதுக்கீடு. -மத்திய அரசு.
*ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி ஒதுக்கீடு
15 ஆவது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
*முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி. - மத்திய அரசு.
முத்ரா திட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு-
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரம் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
*முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி.
விரிவான பதில் மனுவை 27ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் - நீதிபதிகள்.
பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் - நீதிபதிகள்.
*கொரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. - அமைச்சர் விஜயபாஸ்கர்.
தொற்று பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில் சாதாரண காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் இருப்பார்கள்.
5.5 லட்சம் கபசுர குடிநீர் பாக்கெட், வைட்டமின் மாத்திரைகள் விநியோகம் - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*பெங்களூர் நகரம் முழுக்க எதிரொலித்த பேரொலி: திடீரென கிளம்பிய வெடி சத்தத்தால் பெங்களூர் மக்கள் பீதி.
பெங்களூர் சத்தத்தின் பின்னணிக்கு பூகம்பம் காரணம் இல்லை- தேசிய பேரிடர் மையம் அறிவிப்பு.
வளிமண்டல வெடிப்பு காரணமாக பெங்களூரில் பெரும் ஒலி எழுந்திருக்கலாம் என நிபுணர்கள் கருத்து.
*சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.
10ஆம் வகுப்பு தேர்வை ஜூலை மாதம் ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த நிலையில் சந்திப்பு.
கொரோனா பாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தப்பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
No comments:
Post a Comment