அக்னிப்புரட்சி (21.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,82,660 லட்சமாக உயர்வு.
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,20,157ஆக உயர்வு. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,29,294ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,06,750லிருந்து 1,12,359ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298லிருந்து 45,300ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303லிருந்து 3,435ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் 567 பதிப்பு.
ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வெருவி பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் குணம் மடைந்து வீடுகளுக்கு சென்றவர்கள் 400 பேர் இவர்களோடு சேர்த்து தமிழ்நாட்டில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 6,282 ஆக உயர்வு.
*அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல்.
ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்.
*ஜூன் 1 முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் பட்டியல் வெளியீடு.
200 ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு மே 21 முதல் தொடங்கும்.
*உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகள் வெளியீடு.
பயணிகளும், அதிகாரிகளும் விமான நிலையம் வர போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.
விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.
பயணிகள் பயண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாகவே விமான நிலையம் வந்தடைய வேண்டும்.
ஆரோக்கிய சேது பயன்பாடு 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமில்லை.
*திருப்பூர் பேருந்து நிலையம் இடிப்பு!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தை இடித்து அதிநவீன பேருந்து நிலையம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
218 கடைகள் கொண்ட பேருந்து நிலையத்தை தங்களுக்கு தகவல் அளிக்காமல் இடிக்கும் பணியை துவக்கியதாகவும், தங்கள் பொருட்களை காணவில்லை எனவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
*ஆந்திராவில் பேருந்துகள் இயங்க துவங்கியது! மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
*சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி.
தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது.
பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும்.
படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்க கூடாது.
* 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்!சென்னை வானிலை ஆய்வு மையம்.
வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும்.
பகல் 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம். - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்.
*நாளை முதல் நாடு முழுவதும் உள்ள 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும்.
அடுத்து 2-3 நாட்களில் ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது- மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.
*ஒரு கோடி நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய்.1.06 கோடி கல்வி அமைச்சரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.1,06,51,977 தொகைக்கான "காசோலையை" அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வழங்கினர்.
*திருமழிசையில் புதிய பேருந்து நிலையம்!
திருமழிசையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான திட்டப்பணிகள் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
*பந்தர் தெரு வியாபாரிகள் போர்க்கொடி!
சென்னை பாரிமுனையில் கடைகளை திறப்பதில் பாகுபாடு காட்டுவதாகக் கூறி, வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பந்தர் தெருவில் உள்ள கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். வியாபாரிகளின் போராட்டத்தை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், அனைத்து கடைகளையும் மூட சொல்லி அறிவுறுத்தினர்.
*செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு:
அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது. மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முடிவு.
அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்.
நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி.
மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை.
சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி.
மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி.
*பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்:
அச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும்
கொரோனாவால் விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டதில் அச்சு ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
*தமிழக அரசின் பல்வேறு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை. கொரோனாவால் ஏற்பட்ட செலவினங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு முடிவு. கருணை அடிப்படையிலான பணிகளை தொடர்ந்து நிரப்பலாம் எனவும் அறிவிப்பு.
*கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித்துறை பதில். கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கூடாது என மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.
*திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி விடுவிப்பு - திமுக.
வி.பி.துரைசாமிக்கு பதிலாக திமுக துணைப் பொதுச்செயலராக அந்தியூர் செல்வராஜ் எம்.பி நியமனம் - திமுக.
*ரம்ஜானையொட்டி மே 25-ல் மதுரை பள்ளிவாசல்களில் 2 மணி நேரம் தொழுகை நடத்த அனுமதி கோரி வழக்கு:
காலை 9 மணி முதல் 11 மணி வரை தொழுகை நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்.
மதுரையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை.
*தேர்வறையில் சமூக இடைவெளியுடன் 10 மாணவர்கள்-படிக்கும் பள்ளிகளி லேயே தேர்வு மையங்கள். 9.7 லட்சம் மாணவர்களுக்கு 12,690 தேர்வு மையங்கள்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 46.37 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும்.
நோய்கட்டுப்பாட்டு பகுதி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள்.
No comments:
Post a Comment