அக்னிப்புரட்சி (22.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலக அளவில் 51.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,89,488 ஆக அதிகரிப்பு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,78,561ஆக உயர்வு.
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,20,767 ஆக உயர்வு,
அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96,314 ஆக அதிகரிப்பு.
*இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்வு.
நாடு முழுவதும் 48,534 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 3,583 ஆக உயர்வு.
*தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதுவரை தமிழகத்தில் 14753 பேர் பாதிப்பு.
சென்னையில் மட்டும் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
தமிழகத்தில் இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த 7,128 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் மேலும் 4 பேர் பலி; உயிரிழப்பு 98 ஆக உயர்வு.
* திருவாரூர் மாவட்டம் எடையூர் பகுதியை சேர்ந்த இருவருக்கும், நன்னிலம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 பேரும் மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பணியாற்றி சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
*ஈரோட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு.
ஈரோட்டில் 37 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 37 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்தது ஈரோடு.
*சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைப்பு:
தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 774 இருந்து 655 ஆக குறைந்துள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் 164 ஆக இருந்த தெருக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைப்பு.
திரு.வி.க.நகர் மண்டலம் - 124ல் இருந்து 105 ஆக குறைப்புதனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 86 பகுதிகள் விடுவிப்பு. தனிமைப்படுத் தப்பட்ட பகுதிகளில் இருந்து 86 பகுதிகள் விடுவிப்பு.
*பா.ஜ.க.-வில் இணைந்தார் வி.பி.துரைசாமி.
வி.பி.துரைசாமியிடம் இருந்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பதவி நேற்று பறிப்பு. கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் முருகன் முன்னிலையில் இணைந்தார் வி.பி.துரைசாமி.
*வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம்.
ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம். மே 25 முதல், சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.
*சென்னையில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு போலீசார் ரூ.500 அபராதம்: அண்ணா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறை முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்;காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு வருகிறார்.
*அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட கொல்கத்தா விமான நிலையம் வந்தார் பிரதமர் மோடி.
*திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சாதாரண, நடுத்தர ரக மதுவகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
உயர்தர மதுபான வகைகள் மட்டுமே இருப்பு உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல்.
திறக்கப்படாத 1600 டாஸ்மாக் கடைகளில் உள்ள குறைந்த விலை மதுபானங்களை, திறந்துள்ள கடைகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவு.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.103 கோடிக்கு மது விற்பனை.
*ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு:
தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மத ரீதியான வழிபாடுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது - நீதிபதிகள்.
*நாளை முதல் நிபந்தனைகளுடன் ஆட்டோ இயக்க அனுமதி சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி.
ஒரே ஒரு பயணியுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அனுமதி இல்லை.
*அமைதியாக போராடிய மக்களை கலைக்க வன்முறையை விதைத்து 13 பேரை பலிகொண்ட நாள் இன்று..!V2 ஆண்டுகளில் ரத்தம் காய்ந்துவிட்டாலும், காயங்கள் ஆறினாலும் வடு மட்டும் மாறவில்லை. - மு.க.ஸ்டாலின்.
*தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் - வானிலை மையம் தகவல்:
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அனல்காற்று வீசுவதால் பகல் 11 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளிய செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெப்பச்சலனம், மேலடுக்கு சூழற்சியால் தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
*தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா? - கனிமொழி எம்.பி. ட்வீட் .
*மே 26 இல் கருப்புக்கொடி போராட்டம் - காங்கிரஸ்.
விவசாயத்துக்கான இலவச மின்சாரம் பறிக்கப்படுவதை கண்டித்து மே 26 இல் கருப்புக்கொடி போராட்டம். அரசு அலுவலகங்கள் முன்பு சமூக விலகலைக் கடைபிடித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்- கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ்.
*'மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,003 கனஅடியாக குறைந்தது' சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,593 கனஅடியில் இருந்து 3,003 கனஅடியாக குறைந்துள்ளது.
*மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி நிதி.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும். புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் பிரதமர் மோடி பேட்டி.
*தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*முன்ளாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக்க அவசர சட்டம். ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை அரசு வசம் எடுத்துக் கொள்ள அவசரச் சட்டம் பிறப்பிப்பு. ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை நினைவில்லமாக்க நடவடிக்கை.
*‘ரூ.2,609 கோடியை வழங்க வேண்டும் - அமைச்சர் காமராஜ்’
தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் நடைபெற்ற ஆலோசனையில் - அமைச்சர் காமராஜ் கோரிக்கை.
*தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த நிலையில், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தருவது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் -அமைச்சர் கடம்பூர் ராஜூ.
*காவிரி டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை கண்காணிக்கவும், தூர்வாரும் பணிகளை விரைவுப்படுத்தவும் சிறப்பு அதிகாரிகள் நியமனம்.
குடிமராமத்து பணிகளை விரைவுபடுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்:
தஞ்சை - ககன்தீப் சிங் பேடி
திருவாரூர் - ராஜேஷ் லக்கானி
நாகை - சந்திரமோகன்
கரூர் - கோபால்
திருச்சி - கார்த்திக்
அரியலூர் - விஜயராஜ்குமார்
புதுக்கோட்டை - அபூர்வா
*பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது.
கராச்சி விமான நிலையத்திற்கு அருகே விபத்து நடந்ததாக தகவல்.
லாகூரிலிருந்து கராச்சி சென்றபோது நடுவானில் விபத்துக்குள்ளானது விமானம்.
*உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு.
34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்.
ஆண்டுக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும்.
3 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார், உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு இந்த குழு பரிந்துரை வழங்கும்.
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவர் பொறுப்பை ஏற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன். காணொலி காட்சி மூலம் பதவியேற்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
*தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம்(22.05.2020).
044- 46100100, 044- 71200100 ஆகிய புதிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல். 100, 112 ஆகிய எண்களுக்கு பதிலாக புதிய எண்கள் அறிவிப்பு. தொலைதொடர்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றம்.
*தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம். சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் உத்தரவு. விழுப்புரம், சிவகங்கை, கடலூர், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளும் இடமாற்றம்.
*ஆம்பன் புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக அறிவிக்க 22 எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல்.
சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
No comments:
Post a Comment