அக்னிப்புரட்சி (23.05.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (23.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (23.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52,23,488 ஆக அதிகரிப்பு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 22,56,565ஆக உயர்வு.

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,30,789 ஆக உயர்வு,

அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98,230 ஆக அதிகரிப்பு.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,447லிருந்து 1,25,101ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534லிருந்து 51,784ஆக உயர்வு.
சிகிச்சையில் உள்ளோர் 65,597 பேர்

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583லிருந்து 3,720ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா உறுதி. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512.

சென்னையில் மட்டும் இன்று 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 5 பேர் உயிரிழப்பு - மொத்தம் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 363 பேர் குணமடைந்துள்ளனர் - இதுவரை 7,491 பேர் குணமடைந்துள்ளனர்.

*சென்னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி.

சென்னை தவிர பிற பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன் கடைகள் செயல்பட அனுமதி. தடை செய்யப்பட்ட பகுதிகளில் முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை.

*சென்னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி.
சென்னை தவிர பிற பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி.

*ஏ.சி. வசதி உள்ள கடைகளில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது.

*ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நிர்வாக தோல்வியை திசை திருப்ப அதிமுக அரசு முயற்சி.

பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வரும் இயக்கம், திமுக.

பொய் வழக்குகளின் மிரட்டல்களுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது.
சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது.

கொரோனா கால ஊழல், நிர்வாக தோல்வியை திசை திருப்ப குரோத எண்ணத்துடன் ஆர்.எஸ்.பாரதி கைது.
தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை கைது.

*சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நபர் தப்பியோட்டம். மருத்துமனையில் இருந்து தப்பிச்சென்ற அயனாவரத்தை சேர்ந்த 55 வயதான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

*ஆர்.எஸ்.பாரதி கைது - பாஜக வரவேற்பு!

திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் டிவீட்டர் பதிவு!

*சென்னையில் கைதான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

*பெங்களூர் போனால் 7 நாள்கள் தனிமை!

தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலிருந்து கர்நாடகாவிற்கு, உள்ளூர் விமானங்களில் வரும் பயணிகள் 7 நாட்கள் கொரோனா முகாம்களில் தனிமைமைப்படுத்தப்படுவார்கள்!” - கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தகவல்!

*தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112 எண்களை அழைக்கலாம். - காவல்துறை.

*நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் என தகவல்.
தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு - ஜனநாயக விரோத கைது குறித்து ஆலோசனை என ஸ்டாலின் அறிவிப்பு.

*மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம்.

8 வருடங்களுக்கு பிறகு சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நடராஜன் நியமனம்.

இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும்.

திருவேற்காட்டில் கருமாரி அம்மன் கோயில்யில் பணியாற்றும் செல்லத்துரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பணியிட மாற்றம்.

*ஆர்.எஸ்.பாரதி குறித்த ஸ்டாலின் அறிக்கை வேடிக்கையானது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில்

ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார் கண்டிக்கத்தக்கது
ஆர்.எஸ்.பாரதி குறித்த ஸ்டாலின் அறிக்கை வேடிக்கையானது
புகாரின் பெயரில் சட்டப்படி போலீஸ் கைது நடவடிக்கை

இதற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் என்ன சம்மந்தம்? ஸ்டாலின் அறிக்கைக்கு - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில்

*ஏப்.17 இல் அறிவிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் ரத்து. - தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன்.

புதிய தேர்தல் அட்டவணை கடிதம் வாட்ஸ் அப் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் செப்.30 வரை அவகாசம் தந்த நிலையில் தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

*திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு  மீதான வழக்கில் மே 29 வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது.

தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உத்தரவு.

*துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages