அக்னிப்புரட்சி ( 27.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 56,78,026 பேருக்கு பாதிப்பு.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 3,51,668 பேர் உயிரிழப்பு.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 24,26,560 பேர் குணம் அடைந்தனர்.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,75,155 பேர் கொரோனாவால் பாதிப்பு.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,580.
பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,549.
உலகிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1027 பேர் பலி.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,767 ஆக உயர்வு.
குணமடைந்தோர் - 64,426. உயிரிழப்பு- 4,337.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54,758 பேர் பாதிப்பு. உயிரிழப்பு -1,792.
*தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 18,545ஆக உயர்வு.
சென்னையில் புதிதாக 558 பேருக்கு கொரோனா தொற்று.
சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,198 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 567 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை 9909 ஆக உயர்வு.
சிகிச்சை பெற்று வருவோர் 8,500 பேர் கொரோனாவால் உயிர்ழந்தோர் 133 ஆக அதிகரிப்பு. -தமிழக சுகாதார துறை தகவல்.
*ஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்காத விவசாயிகள் முறையாக வழங்க வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
ஆதார் அட்டையில் உள்ளபடி பிரதம மந்திரி கிஸான் வலைதளத்தில் பெயர்திருத்தம் செய்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவிபெறாத விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
*இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மரணம். உடல் நலக்குறைவால் கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழப்பு.
*கர்நாடகாவில் மே 31ஆம் தேதிக்கு பின் கோவில், மசூதி, தேவாலயங்கள் திறக்கப்படும். - முதல்வர் எடியூரப்பா.
*ஜூன் 1 முதல் வழிபாட்டுதலம் திறப்பு என அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் கூறிய நிலையில், எடியூரப்பா அறிவிப்பு.
*குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாத அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி ரேஷன்கடையில் வழங்கப்படும்.ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் பெற்றுக் கொள்ளலாம்.
29ம் தேதி முதல் 31ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே டோக்கன் வழங்கப்படும். ஜூன் 1ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
*4ஆம் தலைமுறையான அதிநவீன தேஜஸ் போர் விமானம் கோவை சூலூர் விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது
இந்திய விமானப்படையின் 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் அதிநவீன தேஜஸ் போர் விமானம் சேர்ப்பு.
*போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது?சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி. தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.
ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைக்க வேண்டும். 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
*தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது- அமைச்சர் செங்கோட்டையன்.
ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை. ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவ தால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைப்பு.ஸகுழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்.
*பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம். முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பு.
*ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது- அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்துவது கூடாது. ஆன்லைன் வகுப்பிற்கு தடை என அறிவித்த சிறிது நேரத்தில் அமைச்சர் அடுத்த அறிவிப்பு.
* http://epass.py.gov.in புதுச்சேரி அரசு இந்த இணையதளம் மூலம் EPASS விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறார்கள்.
இதன் மூலம் மட்டுமே இனி EPASS வழங்கபடும். திருமணம், இறப்பு, மருத்துவம், பணியில் மீண்டும் சேர, பிர அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம். ID Proof கட்டாயம்.
*கொரோனா தடுப்பு பணி- 675 புதிய மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்.
ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க முடிவு. மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்கள் அழைப்பு.
உடனடியாக பணி சேர வேண்டுகோள் - 3 மாத காலத்திற்கு பின், தேவைக் கேற்ப பணி நீட்டிப்பு.ஸதேசிய நலவாழ்வு இயக்ககத்தின் மூலம் நியமிக்க சுகாதார துறை உத்தரவு.
*ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு. டி20 உலகக்கோப்பை இந்தாண்டு அக்.18 முதல் நவ.15 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஒத்திவைப்பு பற்றி ஐசிசி இதுவரை அதிகாரப்பூர் வமாக அறிவிக்கவில்லை.
*தமிழகத்தில் பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன?
தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல - நீதிபதிகள்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது- நீதிபதிகள்.
வழக்கு விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
*தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா?-தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.
அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றனவா?
மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா?
ஜூன் 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்-டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
*அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக, ஜூன் 5ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்.
இதற்கு பதிலாக ஜூன் 19-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.
*புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உயர்வு. இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளார்கள்.
*கொரோனா தடுப்பு மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ஆம் தேதி காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை. ஏற்கனவே மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்த நிலையில் ஆட்சியர்களுடன் ஆலோசிக்கிறார்.
*சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை. புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி பழனி தற்கொலை.
*இந்தியா - சீனா இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்.- அமெரிக்க அதிபர் டிரம்ப்.
லடாக் எல்லைப் பிரச்னையில் இந்தியா - சீனா இடையே மத்தியஸ்தம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாக இந்தியா, சீனாவுக்கு தெரிவித்து விட்டோம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்.
*இந்தியா - சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம் - சீன தூதர் சன் வெய்டாங்.
இரு தரப்பு பேதங்களை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்.
கொரோனா வைரசை எதிர்த்து போராட வேண்டியது தான் இரு நாடுகளின் முக்கிய நோக்கம்.
இந்தியா - சீனா இடையிலான உறவினை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் - சீன தூதர் சன் வெய்டாங். போர் மேகம் சூழ்ந்த நிலையில் இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் விளக்கம்.
*10,12-ம் வகுப்பு தேர்வு எழுதும் சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம்: மத்திய மனிதவளத்துறை.
10,12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம் என மத்திய மனிதவளத்துறை அறிவித்துள்ளது. பொது முடக்கத்தால் சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் தேர்வு எழுத வேறு ஊருக்கு செல்ல தேவையில்லை எனவும் கூறியுள்ளது.
*சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருப்பது, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.
ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நாங்களே வாரிசு என்பது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது - ஜெ.தீபா.
*மருத்துவப்படிப்புகளுக்கான நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. அரசியல் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாத்திட கோரி பிரதமரை வலியுறுத்துகிறேன் - திமுக தலைவர் ஸ்டாலின்..
No comments:
Post a Comment