அக்னிப்புரட்சி இன்றைய (28.05.2020)
முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,88,782ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,97,593ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,57,425ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333ஆக உயர்வு:
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆக உயர்வு. - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரிப்பு.
அனுமதிக்கப்பட்டவர்களில் 55 சதவிகிதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1,159 குழந்தைகள் குணப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10,548 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று ஒரு நாளில் 12 பேர் கொரோனா வுக்கு உயிரிழப்பு, தமிழகத்தில் உயிரி ழந்தவர்கள் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் பெருநகரங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகக்குறைவு. - சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
*2 நாசா வீரர்களை கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் இன்று விண்ணுக்கு ஏவப்படவில்லை.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்கள் விண்ணுக்கு ஏவப்படுவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படவில்லை.
*தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு.
மேடக் மாவட்டம் போச்சனபள்ளி கிராமத்தில் நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்தான், 3 வயது சிறுவன் சாய் வரதன். 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டனர்.
*சென்னையில் அண்ணாநகர் மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது:
சென்னையில் 6 மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ராயபுரம் - 2252 பேர், கோடம்பாக்கம் - 1559 பேர், திரு.வி.க நகர் - 1325 பேர் பாதிப்பு.
தேனாம்பேட்டை - 1317 பேர், தண்டையார்பேட்டை - 1262 பேர், அண்ணாநகர் - 1046 பேர் பாதிப்பு.
*திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் இன்று நடக்கிறது
காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கோயில் சொத்து விற்பனை குறித்து ஆலோசனை.
கோயில் திறக்கப்பட இருப்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.
தான சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட சேகர் ரெட்டி கோரிக்கை.
தமிழக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கோரிக்கை குறித்தும் ஆலோசனை.
*அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி ஜூன் 15ல் தொடங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
*கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். சலூன் கடைகளை திறக்க கோரிய வழக்கு, ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.
*வெளிநாடு வாழ் உறவினர்களிடம் வாட்ஸ் அப் மூலம் நளினி, முருகன் பேச அனுமதிக்க முடியாது-சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு திட்டவட்டம்.ஸஇந்தியாவுக்குள் பேச அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்- சிறைத்துறை.
*மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டத்தில் கைது.
சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்- சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரிக்கை.
*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு, ஒரு சவரன் ரூ.35,808க்கு விற்பனையாகிறது.
*வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம்.
நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.
ளமதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம்.
*சென்னை: தெற்கு ரயில்வேயில் வேலை செய்யும் மூத்த அதிகாரிகள் இருவருக்கு கொரோனோ உறுதி:
சென்னை சென்ட்ரலில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படையினர் 15க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு.
தமிழக ரயில்வே போலீசார் 20க்கும் மேற்பட்டோருக்கும் ஏற்கனவே நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
*பெங்களூருவில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்ததில் நூற்றுக்கணக் கான மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், பீன்யா, யஷ்வந்த்பூர், ஹென்னூர், கிருஷ்ணராஜபுரம், மாரத்தஹள்ளி, கெங்கேரி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
*உணவுப்பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. இதுவரை சந்திக்காத சூழலை சந்தித்து கொண்டிருக்கிறோம் -உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.
*புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது-புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு.
ரயில் கட்டண செலவை மாநிலங்களே பகிர்ந்து கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களே உணவு, தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
*அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதில்.
எதிர்க்கட்சிகளின் செயல்களை பாராட்ட வேண்டாம் - இப்படி குற்றம் சாட்டலாமா?
சிக்கலான சூழ்நிலையில் அரசு செய்ய வேண்டிய பணிகளை எதிர்க்கட்சி மேற்கொள்கிறது.
தி.மு.க. செயல் திட்டங்களை வரவேற்க வேண்டும். நோயின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது - ஏப்ரல் வரை நடவடிக்கை இல்லை.
இந்த அளவிற்காவது தமிழக அரசு செயல்படுகிறதே என்று எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
தி.மு.க. செயல் திட்டங்களை வரவேற்க வேண்டும் அரசு சரியாக செய்து இருந்தால் மக்கள் எங்களை ஏன் அணுகுகிறார்கள்?
தி.மு.க. கொடுத்த மனுக்களை வைத்து ஒரு சில ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்-அமைச்சர் காமராஜ் இன்று கூறியது தவறு.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிராகரித்தது.
நீங்கள் மதுக்கடைகளை மூடிவிட்டால் எங்கள் கட்சியினர் மது ஆலைகளை மூடி விடுவார்கள்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதே தி.மு.க. தலைவரின் நோக்கம்.எங்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்திருப்பதை வரவேற்கிறோம்.
*புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு.
மது பானங்களைத் தொடர்ந்து பெட்ரோல் டீசலுக்கும் கொரோனா வரி.
பெட்ரோல் மீது 5.75 சதவீதமும் டீசலுக்கு 3.65 சதவீதமும் வரி உயர்த்தப்பட் டுள்ளது.
* மதுரை, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
*திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலங்களை விற்பனை செய்ய கூடாது-இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு.
மத்திய, மாநில அரசுகள் அனுமதித்த பிறகே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி.
*தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இல்லை என மு.க.ஸ்டாலின் அறிக்கை.
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு கவனம் தேவை.
வீடு வீடாக கொரோனா பரிசோதனை கள் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா நோய்ப்பரவல் கட்டுக்குள் இல்லை, கட்டுக்குள் அடங்காமல்தான் இருக்கிறது. எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்.
வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு இரையாகி விட வேண்டாம் - அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை.
*பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியீடு
வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை.
வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதலாம்.
வெளியூரில் இருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும்.
மாணவர் விடுதிகளை ஜூன் 11ஆம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மறுசுழற்சி முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்.
*மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு, தேவையான மதுபான வகைகளை ஆன்லைன் மற்றும் டோர் டெலிவரி செய்ய அனுமதிக்க உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி: மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
*பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது - யூஜிசி எச்சரிக்கை.பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதாக புகார் வந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
*50% இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி திமுக சார்பில் வழக்கு.ஸ2020 ஆம் ஆண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் திமுக மனு.
*பொதுமுடக்கம் மற்றும் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களிடமும் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
No comments:
Post a Comment