அக்னிப்புரட்சி இன்றைய (29.05.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60,81,782ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,97,593ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,87,420ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,333ஆக உயர்வு:
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70,692ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,861ஆக உயர்வு. - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கொரோனா தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்வு.
சென்னையில் மேலும் 618 பேருக்கு கொரோனா தொற்று - வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,362 ஆக உயர்வு.
கொரோனா சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 8,776 பேர் குணமடைந்தோர் எண்ணிக்கை11,313 ஆக அதிகரிப்பு.
இன்று மேலும் 9 பேர் உயிரிழப்பு இதோடு சேர்த்து 154 பேர் உயிரிழப்பு.
என இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது சுகாதார துறை.
*ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்:
31ஆம் தேதி ஞாயிறு அன்று மாலை 4.30 மணிக்கு தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம் கொரோனா தடுப்பில் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை. மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் விவகாரம் குறித்தும் ஆலோசனை.
*சேலத்தில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக, கைதான அழகுக் கலை நிறுவன உரிமையாளருக்கு கொரோனா:
கைதான லோகநாதனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 25 பேரை தனிமைப்படுத்த முடிவு.
*‘தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்னென்ன தளவுகள் அளிக்கலாம்?- நாளை ஆலோசனை’ கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்; பொதுமுடக்கம் தொடர்பாக மருத்துவக்குழு நிபுணர்களுடன் நாளை மீண்டும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.
*சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க முடிவு:
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஆசிரியர்களையே தேர்வு பணிக்கு பயன்படுத்தவும் திட்டம்.
*தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது: - இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் என கூறியிருந்த நிலையில் அறிவிப்பு.
நாளை மறுநாள் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
*மத்திய கிழக்கு,வடமேற்கு, தென்கிழக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். - வானிலை மையம்.
*சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெற வில்லை. - வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
சீனா விவகாரத்தில் மோடி அதிருப்தியாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில் அதிகாரிகள் விளக்கம்.
*ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் ரூ.8.61 கோடி அபராதம் வசூல்:
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,47,649 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு; இதுவரை 4,30,206 வாகனங்கள் பறிமுதல்; 5,13,048 வழக்குகள் பதிவாகின. - காவல்துறை.
*சென்னையில் 6 மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது:
அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிப்பு.
கோடம்பாக்கம் - 1646 பேர், தேனாம்பேட்டை - 1412 பேர் பாதிப்பு.
திரு.வி.க நகர் - 1393 பேர், தண்டையார்பேட்டை - 1322 பேர், அண்ணாநகர் - 1089 பேர் பாதிப்பு.
*சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ திட்டவட்டம்.ஸஉணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க கோரி வழக்கு. சி.எம்.டி.ஏ பதிலுக்கு பின் ஜூன் 5ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு.
*புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்.
மின்துறை தனியார் மயமாக்கத்தை புதுச்சேரி அரசு அனுமதிக்காது- முதல்வர் நாராயணசாமி.
*அம்பத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் கை முறிந்தது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு.
சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.
காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளனவா?
2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
*அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆன இன்றே தமிழ் ராக்கர்ஸ் (Tamil rockers) இணையதளத்திலும் சட்டவிரோதமாக பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியிருப்பது சினிமா உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எழுந்த பிரச்னைக்கு மத்தியில் அந்த படம் இன்று அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட்டது. அவ்வாறு ரிலீஸ் ஆன சில நிமிடங்களில் அதே ஹெச்.டி தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் சட்டவிரோதமாக வெளியானது.
திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் திரைப்படங்கள் வெளியாகும். இந்நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது.
*மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும். ஜூன் 8 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
*ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா, தீபக் அறிவிப்பு.
இரண்டாம் நிலை வாரிசுகள் என்பதை வாரிசுகள் என மாற்றம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஜெயலலிதா வீட்டிற்கு தீபா சென்றது குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் நீதிபதிகள் முன்பு புகார்.
தீபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என அரசு எச்சரிக்கை.
*இந்தியா- சீனா எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அறிவிப்பு.
இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என ட்ரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில்.
*OTT-யில் திரைப்படம் வெளியீடு: அரசுக்கு இழப்பு - அமைச்சர்கடம்பூர் ராஜூ
OTT-யில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.
OTT-யில் திரைப்படம் வெளியிடுவதை அரசால் நேரடியாக தடுக்க முடியாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ
*ஜூன் 10ஆம் தேதி வரை திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்.
*மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரான கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ், பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக நியமனம்.
மத்திய அமைச்சரவை செயலகத்தின் இயக்குநரான மீரா மொஹந்தி ஐஏஎஸ், பிரதமர் அலுவலக இயக்குநராக நியமனம்.
*தமிழகத்தில் முதலீடுகள் செய்ய பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு!
உலகளவில் முன்னணியில் உள்ள 13 மின்னியல் ( Electronics ) நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்.
*'ஜூன்.01 முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்'
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி ஆகிய வழித்தடங்கள்.
No comments:
Post a Comment