தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி-2
சட்டமன்றத்தின் விதிகள்,மரபு, கண்ணியம் இவைகளையெல்லாம் கடைபிடித்து கட்டுப்பாட்டுடன் எடுத்துக்காட்டாக செயல்பட்டது பா.ம.க என்ற பெருமை உண்டு. மக்களுக்கு அல்லது சில எதிரான, தேவையற்ற அறிவிப்புகள், செய்திகள் வெளியிடும்போது, இதை பாமக நாங்கள் ஏற்கமாட்டோம், இன்று விதியை மீறுவோம்,வரம்பு மீறுவோம் என்று சொல்லிவிட்டே சில காரசாரமான,கடும் விவாதங்களையும் மேற்கொண்ட சில நிகழ்வுகளும் நடந்துள்ளது. அதிலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் கட்சித் தலைவராக இருந்து செயல்பட்டது மிகுந்த எச்சரிக்கையையும் பொறுப்புணர்வையும் சமயோசித விவரத்தையும் அளித்தது. விவாதங்களில் பா.ம.கவுக்கு பாராட்டும் கிடைக்கும். சிலநேரம் பா.ம.க மீது கடும் விமர்சனங்களும் முன்வைப்பார்கள். அதற்கு சரியான பதிலடியும் கொடுப்போம்.வெளி நிகழ்ச்சிகளில் நாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால் சட்டமன்றத்தில் அப்படியல்ல,சில வரன்முறைகள் உண்டு.பொறுப்புமிக்கது. உடனுக்குடன் மற்றவர்களிடமிருந்து எதிர் வாதமும் வரும். அதையறிந்தே மிகுந்த எச்சரிக்கையுடன் வாதிட வேண்டும்.
மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடு பா.ம.க நாங்கள் பேசும்போது முன்னாள் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களும், முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களும் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் உன்னிப்பாக கவனிப்பார்கள். சில நேரங்களில் கலைஞர் அவர்களும் அம்மையார் ஜெயலலிதா அவர்களும் மற்றவர்களும் குறிப்பெடுத்துக் கொள்வார்கள், பதில் சொல்வதற்கு. காரணம் நான் எந்த பொருள் குறித்து பேசினாலும் தேவையை உணர்ந்து, ஆதாரங்களுடன், புள்ளிவிவரங் களுடன் பேசுபவன் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.பா.ம.க என்றால் ஆதாரங்களுடன் புள்ளிவிவரங்களுடன் வாதாடும் கட்சி,என்ற பெயர் இருந்தது. பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து மிகத் திறமையாக, சிறப்பாக செயல்பட்டு வந்தார்கள்.
15 ஆண்டுகாலம் மருத்துவர் அய்யா அவர்களின் ஆலோசனையின் பேரில் சட்டமன்றத்தில் வாதாடி உடனே சட்டமாக்கப்பட்டவை, சட்டங்கள் திருத்தப்பட்டவை, கோரிக்கைகள் நிறைவேற்றபட்டவை, வாக்குறுதிகள் அளிக்கப்பட்டவைகள் ஏராளம்... ஏராளம்... அப்பொழுது வாக்குறுதியளிக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தற்போதும் சில திட்டங்கள் நிறைவேறி வருகின்றது.பா.ம.க சாதனை படைத்த சிலவற்றை இங்கே சுருக்கமாக குறிப்பிடுகின்றேன். அதை நிறைவேற்றுவதற்கு நடைபெற்ற விவாதங்களை பின்னர் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன்.
பா.ம.க வின் உயிர்மூச்சுக் கொள்கை சமூகநீதி_ இட ஒதுக்கீடு. கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குரிய இடம், அதேபோல் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இடம் என மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து வழங்குவது தான் சரியான முறை. உதாரணம் கர்நாடக,கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலுள்ள தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறைபோல் (COMPARTMENTAL RESERVATION) வேண்டும் என்பதே நோக்கம்.
முதன்முதலில் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்,மஞ்சள் வணக்கம் செலுத்தி,இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை அங்கீகரிக்கவும், உயிர்நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கு,மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்குவதுபோல் மாதந்தோறும் ஓய்வூதியம் அரசு வழங்க வேண்டுமென வாதாடி பெற்றுக்கொடுத்தோம்.தொடர்ந்து பெற்றும் வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் I.A.S, I.P.S, உள்ளிட்ட உயர் அதிகாரிகள், உயர் நீதிமன்ற_மாவட்ட நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள்_ பதிவாளர்கள்,அரசு பணியாளர் தேர்வாணைய (TNPSC) தலைவர்_ உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், அரசு துறைகளின் தலைவர்கள் போன்ற உயர் பதவிகளில் மேலும் பல பதவிகளில் வன்னியர்கள் எத்தனை பேர்? இல்லையே. இது அநீதி இல்லையா? இதை சட்டமன்றத்தில் கேட்காமல் எங்கே முச்சந்தியில் போய் நான் கேட்கட்டுமா என கடுமையாக வாதாடினேன். அதன் பிறகுதான் ஒருசில வன்னியர்கள் மேற்கண்ட பதவிகளில் நியமிக்கப்பட்டது மருத்துவர் அய்யா அவர்களின் சாதனையே.
தற்போது கல்வி, வேலைவாய்ப்பில் மிகப் பிற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும்,மற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தற்போது உள்ள இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள், கோளாறுகள், மோசடிகள் நிறைந்துள்ளதை நான் சுட்டிக்காட்டிய போது எனக்கு கடுமையான எதிர்ப்பே அவையில் வெடித்தது. அதற்கும் உரிய விளக்கமளித்து இட ஒதுக்கீட்டை மட்டுமே விவாதிப்பதற்கு தனியாக சட்டமன்றத்தை கூட்டவேண்டுமென வாதாடி,தனியாக சட்டமன்றம் கூட்டி விவாதித்த வரலாறு,பெருமை பா.ம.கவையே சேரும். இட ஒதுக்கீட்டு நிறை குறையை ஆராய்ந்திட என்னையும் உள்ளடக்கி, அமைச்சர்,அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு நீண்ட நாட்களாக கூட்டம் கூட்டி விவாதிக்கப்பட்டது. அதில் குறைகளை சுட்டிக்காட்டி உரிய தீர்வையும் முழுமையாக பேசியது பா.ம.க (ஜி.கே.மணி) மட்டுமே. தற்போதைய இட ஒதுக்கீட்டின் நிலவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமன்று வாதாடி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதும் பா.ம.கவால் தான். அதில் வன்னியர்களுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி,பாதிப்பை கண்டறிந்து,அந்த உரிய வேலைவாய்ப்பிடங்களை பின்னடைவு காலிப்பணியிடங்கள் முறையில் (BACKLOCK VACANCIES) நிரப்ப வேண்டும் என்றும் கேட்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இட ஒதுக்கீட்டு முறையின் குறைகளை அதிக நாட்கள் வழியுறுத்தி பேசினேன்.நான் இட ஒதுக்கீட்டை பேச ஆரம்பித்தாலே ஜி.கே.மணிக்கு ஜாதி வெறி அதிகம் என்பார்கள் சிலர். உடனே நான் இது ஜாதி வெறியில்லை, கல்வி,வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு உரிய இடத்தையும் அதே போல் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய இடத்தையும் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து வழங்குவது தானே சரியான சமூகநீதி. பெரும்பான்மை மக்களாக இருக்கின்ற வன்னியர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்க பெறாமல், இவர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு எப்படி முன்னேறும்? இது இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்டு போராடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இப்படிப்பட்ட அநீதியா? கர்நாடகா,ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் தொகுப்பு இட ஒதுக்கீட்டு (COMPARTMENTAL RESERVATION) எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்,இதோ அதனுடைய சட்ட நகல் என் கையிலே இருக்கிறது என்பதை ஆதாரங்களை சுட்டிக்காட்டி வாதாடினேன். பெரியார் போராடாத அந்த மாநிலங்களிலுள்ள நடைமுறை பெரியார் வழியில் ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் ஏன் இல்லை? அதன் விவரங்கள் ஒன்றிரண்டை மட்டும் பின்னர் குறிப்பிடுகிறேன். நிறைவேற்றப்பட்ட சாதனைகள் ஒரு சில மட்டும்
பகுதி -3 நாளை தொடரும்.
தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி-2
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment