அக்னிப்புரட்சி இன்றைய (30.05.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.05.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.05.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனா தொற்று:
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,26,375 ஆக அதிகரிப்பு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,66,418 ஆக உயர்வு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 26,56,144 ஆக அதிகரிப்பு.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,74,496 ஆக அதிகரிப்பு

குணமடைந்தோர் எண்ணிக்கை 82,945 ஆக அதிகரிப்பு.

சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 86,568 ஆக அதிகரிப்பு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 ஆக உயர்வு.

*தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 938 பேர் 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரிப்பு

சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 616 பேருக்கு கொரோனா பாதிப்பு சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 687 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இவர்களோடு சேர்த்து 12,000 பேர் குணமடைந்து உள்ளனர். சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 9,021 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 6 பேர்  உயிரிழந்துள்ளனர் கொரோனா வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக அதிகரிப்பு

*புழல் சிறையில் கொரோனா வார்டு அமைப்பு...!: சென்னை புழல் சிறையில் தண்டனைக் கைதிகள், தூய்மைப் பணியாளர் என 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சிறப்பு வார்டு அமைப்பு.

*60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி:
நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற அறிவுறுத்தல். மற்ற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த ஆட்சியர்களிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.

*பள்ளிக்கல்வி தொடர்பாக ஆலோசனை தரும் குழுவில் கூடுதலாக உறுப்பினர்கள் நியமனம்:
ஏற்கனவே குழுவில் 12 பேர் இருந்த நிலையில், புதிதாக 4 உறுப்பினர்களை நியமித்தது பள்ளிக்கல்வித்துறை.
கொரோனா பொதுமுடக்கத்தால் பாடத்திட்டத்தில் குறைப்பு உள்ளிட்டவை பற்றி குழு ஆராயும்.

*‘திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி. காவல்துறையின் கோரிக்கையை ஏற்று போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

*சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு:

பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசம், கை உறை அணிய வேண்டும். பணியாளர்கள் கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும். 1,775 பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளதால் பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவு.

*2 நாளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 50 % பணியாளர்கள் உடனடியாக பணிக்கு வர மேலாண்மை இயக்குநர் உத்தரவு.

* தமிழகத்தில்  ஊரடங்கு மீறல்  ரூ.8.84 கோடி அபராதம் வசூல்:
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,53,543 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு; இதுவரை 4,33,101 வாகனங்கள் பறிமுதல்.
பொதுமுடக்க உத்தரவை மீறியதாக 5,18,391 வழக்குகள் பதிவாகின. - காவல்துறை.

*சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய  பெண் போலீசார் 12 பேர் உள்பட 62 ஆயுதப்படை போலீசாருக்கு உற்சாக வரவேற்பு பணிக்கு திரும்பிய 62 பேரை காவல் ஆணையர் விஸ்வநாதன் பூங்கொத்து, சான்றிதழ் வழங்கி வரவேற்றார்.

*தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளித்திறப்பு சாத்தியம் இல்லை:
10,12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்.
- அமைச்சர் செங்கோட்டையன்.

*சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி-வங்கி நிர்வாகிகளோடு முதலமைச்சர் ஆலோசனை.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் தமிழகத்தில் தான் அதிகம்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம்.

3 முக்கிய துறைகள் குறித்து இன்று ஆலோசனை. விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வங்கிகளை கேட்டுக்கொள்கிறேன்.

*சென்னை புளியந்தோப்பில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின் பேட்டி. - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னையில் கொரோனா சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 10 இடங்களில் பரிசோதனை.

1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைப்பு.

சிசிடிவி கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு. சிகிச்சை மையத்தில், சிறப்பு மருத்துவ குழு முழுநேரமும் செயல்படும்.

காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்களில் பரிசோதனை. சமூக பரவல் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு தொடர் நடவடிக்கை.

*அரசு மருத்துவமனை பிணவறைகளில்; உரிமை கோரப்படாமல் உள்ள சடலங்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு:

ஜூன் 27ம் தேதிக்குள் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி.

*சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில்; கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்; முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

*மாஸ்கோ புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானிக்கு கொரோனா இருந்ததால் மாஸ்கோ செல்லாமல் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.

*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குநர் பிரதீப் கவுர் செய்தியாளர் சந்திப்பு.

இது ஒரு புதிய வைரஸ் - அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகிறோம்.

ஒட்டு மொத்த இந்தியாவில் 70 சதவீத பாதிப்பு 30 மாவட்டங்களில் மட்டுமே இருக்கிறது.

பாதிப்பு அதிகமாக அதிகமாக கொரோனா வார்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் முக கவசம் அணிய வேண்டும்.

கொரோனா அதிகம் உள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும். முதல்வர் பழனிசாமி யுடனான ஆலோசனைக்கு பின் மருத்துவ குழு பேட்டி. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.

*வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

*இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

*தமிழக உளவுத்துறை ஐ.ஜி.,யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்.
தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்.

*போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை போராட்டம்.
அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பு நாளை காலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். போக்குவரத்து  ஊழியர்களுக்கு மே மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய திட்டமிட்டிருப்பதால் ஆர்ப்பாட்டம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages