தமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மதுபாட்டில்களை பறித்து சென்றதாக புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். - Agnipuratchi

தமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மதுபாட்டில்களை பறித்து சென்றதாக புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This

தமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மதுபாட்டில்களை பறித்து சென்றதாக புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் பகுதி சித்தலம்பட்டில் சிலர் மது குடித்துக் கொண்டு இருந்தனர், அப்போது அங்கு சென்ற புதுச்சேரி காவலர்கள் மணிகண்டன், கோகுல், பிரசன்னா, செல்வம் ஆகியோர் மதுகுடித்தவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறித்து விரட்டி அடித்ததனர்.

புதுச்சேரி போலீஸ் தலைமையகத்திற்கு புகார் சென்றது, இதில் காவலர்கள் 4 பேரும் தவறாக நடந்து இருப்பதும், மதுபாட்டில்களை தங்களது சொந்த தேவைக்கு எடுத்து சென்று இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 காவலர்களையும் சஸ்பெண்டு செய்து சீனியர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார்.

4 பேர் மீது திருக்கனூர் போலீசார் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்தவுடன், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் காவலர் பிரசன்னாவை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages