தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி-5 - Agnipuratchi

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி-5

Share This

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணியின் அனுபவங்கள் பகுதி -5

பாட்டாளி மக்கள் கட்சி துவங்கும் முன் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடந்த 7ஆண்டுகால போராட்ட வரலாறு. இறுதியில் ஏழு நாட்கள் நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டம் தமிழ்நாடே ஸ்தம்பித்தது. இந்தியாவே திரும்பிப் பார்த்தது. உலகில் உயர்ந்த நாடு எனும் அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகையும் மிகப்பெரிய செய்தி வெளியிட்டது. இது சமூக விடுதலைப் போராட்ட வரலாறு.அதில் 21பேர் இன்னுயிர் நீத்தது நெஞ்சை உருக்கி,கண்ணீர் வடியச்செய்யும் சோகம் நிறைந்தது. ஒரு லட்சம் பேர் மீது வழக்கு, சிறைக்கொடுமைகள்.
   
இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் தொடர்ச்சியாக 20சதவித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி 1989ஆம் ஆண்டு நடைபெற்ற 9வது சட்டமன்ற பொதுத்தேர்தலில் யாரும் பங்குபெற கூடாது என தேர்தல் புறக்கணிப்பு செய்தது நாடே அதிர்ச்சியுற்றது. தேர்தலில் ஏராளமான வாக்குச்சாவடி (பூத்)களில் ஒரு வாக்கு கூட போடவில்லை.நிறைய வாக்குச்சாவடி களில் ஒன்று,இரண்டு, ஐந்து வாக்குகள் மட்டுமே போடப்பட்ட நிலை. இப்படி வாக்கு (ஓட்டு) போடாமல் புறக்கணித்தது நாட்டில் எப்போதும் நடக்காத வரலாற்று நிகழ்வு. இவற்றுக்கான ஏற்பாடுகள், மாநாடுகள் பற்றி பின்னர் குறிப்பிடுகின்றேன். 
   
1989 சூலை 16ம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி துவங்கப்பட்டது.நான்கு மாதத்திற்குள்ளேயே 1989 நவம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க எல்லாத்தொகுதிகளிலும், தனித்தே யானை சின்னத்தில் போட்டியிட்டது.தருமபுரி மிக அதிகமாக வாக்குகளும் மற்ற 7 தொகுதிகளிலும் அதிக வாக்குகளைப் பெற்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் பாராட்டினர். அந்தத் தேர்தலில் கட்சிக்கு நிதி இல்லாததால் "ஓட்டு ஒன்று தாரீர்"  "ரூபாய் நோட்டு ஒன்று தாரீர்" என்ற கோரிக்கை முழக்கம் முன்வைக்கப்பட்டு ரூ 25 லட்சம் நிதி கிடைத்தது.
     
தமிழ்நாட்டின் 10வது சட்டமன்ற பொதுத்தேர்தலான 1991ஆம் ஆண்டு  பா.ம.க முதன்முதலாக போட்டியிட்ட சட்டமன்றத்தேர்தலாகும்.இத்தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்து வேட்பாளர்கள் யானை சின்னத்தில் நிறுத்தப்பட்டனர்.பா.ம.க முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் போட்டியிட்டனர்.நானும்(ஜி.கே.மணி) போட்டியிட்டேன்.பா.ம.க முதன்முதலில் போட்டியிடும்  சட்டமன்ற தேர்தல் என்பதால் மக்கள் மத்தியில் நிறைய தொகுதிகளில் அமோக வரவேற்பு இருந்தது.25தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு என உறுதியாக சொல்லப்பட்டது. அதில் நானும் வெற்றி பெறுவேன் என பத்திரிகை எழுதியது.ஆனால் எதிர்பாராத விதமாக மே21தேர்தல் பரப்புரை(பிரச்சாரக்)கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்,தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.பின்னர் தேர்தல் பரப்புரை(பிரச்சாரம்) செல்லச்செல்ல ராஜீவ்காந்தி அனுதாப அலை நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்தது.

1991 ஆண்டு சூன் 24ம்தேதி நடைபெற்ற இத்தேர்தலில் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ராஜீவ்காந்தி அனுதாப அலையால் அமோக வெற்றி பெற்றது.பா.ம.க சார்பில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். தி.மு.க 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.பா.ம.கவில் வெற்றிபெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் மருத்துவர் அய்யா அவர்கள் அவரை யானையின் மீது அமர வைத்து ஊர்வலமாக சட்டமன்றம் அனுப்பி வைக்கப்பட்டார்.பா.ம.கவிற்கு நல்ல மரியாதை இருந்தது.பண்ருட்டி எஸ்.ராமசந்திரனை சட்டமன்றத்தில் தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர்(MLA) தாக்கினார் என்பதை கண்டித்து மருத்துவர் அய்யா அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இது வரலாறு.ஆனால் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் பா.ம.க வில் நீடிக்கவில்லை.                      
    
அடுத்து தமிழ்நாட்டின் 11வது சட்டமன்ற பொதுத்தேர்தல்: 1996 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுதேர்தலில் பா.ம.க எல்லா தொகுதிகளிலும் தனித்து யானை சின்னத்தில் போட்டியிட்டது.இந்தத் தேர்தலில் தி.மு.க - ஜி.கே.மூப்பனாரின் த.மா.கா கூட்டணி ஆதரவு அலை அதிகமாக இருந்தது.இக்கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ம.க 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அ.தி.மு.க 2 இடங்களில் வெற்றிபெற்று. பின்னர் இருவர் சேர்ந்ததால் அ.தி.மு.க எண்ணிக்கை 4 ஆனது.1996 சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க - த.மா.க கூட்டணி அலை வீசியதால் அமோக வெற்றி என்று பத்திரிகைகள் எழுதின. அந்த அமோக அலையிலும் பா.ம.க நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் "அலையில் தப்பிய தலைகள்" நான்கு பேர் என எழுதப்பட்டன. 
1.ஜி.கே.மணி- பென்னாகரம்தொகுதி
2.பேராசிரியர் தீரன் - ஆண்டிமடம் தொகுதி
3.ஐ.கணேசன்- எடப்பாடி தொகுதி 4.ப.கோவிந்தன்- தாரமங்கலம் தொகுதி. இந்த நால்வரில் 3 பேர் பா.ம.கவில் இல்லை. வெளியேறிவிட்டனர். நான் (ஜி.கே.மணி) மட்டுமே இருந்து வருகிறேன். அதன்பின்னர் கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி மருத்துவர் அய்யா அவர்களின் முத்து விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் பேராசிரியர் தீரன் அவர்களை அழைத்தோம். அவரும் வருகைதந்து கலந்து கொண்டார். பின்னர் அவர் மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து பா.ம.க வில் மீண்டும் இணைந்துள்ளார். இது நமக்கும் மகிழ்ச்சி.அவருக்கும் மகிழ்ச்சி.     
     
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி(BSP)அகில இந்திய கட்சியாக அங்கீகாரம் பெற்றதால் பா.ம.க வின் "யானை"சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.க முக்கிய நிர்வாகிகளும்  கலந்தாலோசித்து பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்து வந்த தேர்தல்களிலிருந்து பா.ம.க "மாம்பழம்" சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
    
தமிழ்நாட்டின் 12வது சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2001 மே மாதம். இந்த சட்டமன்ற பொது தேர்தலில் பா.ம.க - அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது அதன் விவரம்:
1.ஜி.கே.மணி- பென்னாகரம் தொகுதி 2.மாவீரன் ஜெ.குரு- ஆண்டிமடம்             தொகுதி
3.திருக்கச்சூர்.கே.ஆறுமுகம்- செங்கல்பட்டு தொகுதி
4.டாக்டர் ஆர்.கோவிந்தசாமி-விருத்தாசலம் தொகுதி
5.டி.கே.இராஜா- திருப்பத்தூர் தொகுதி 6.கி.பாரிமோகன்- தர்மபுரி தொகுதி,7.மு.கார்த்தி- சேலம் இரண்டாவது தொகுதி
8.எஸ்.நடராஜன் - நாட்ரம்பள்ளி தொகுதி
9.காசாம்பு பூமாலை- சங்கராபுரம் தொகுதி
10.எஸ்.மலையப்பசாமி- கபிலர்மலை தொகுதி
11.எஸ்.உலகரட்சகன் - செய்யாறு தொகுதி
12.தி.வேல்முருகன்- பண்ருட்டி தொகுதி 13.கோ.இரவிராஜ் - திருத்தணி தொகுதி 14.எம்.எஸ். சண்முகம்- பூந்தமல்லி தொகுதி
15.ப.காமராஜ்- தாரமங்கலம் தொகுதி 16.ஐ.கணேசன்- எடப்பாடி தொகுதி 17.செல்வராஜ்- அச்சிறுப்பாக்கம் தொகுதி
18.முருகவேல்ராஜன் - வந்தவாசி தொகுதி
19.கிருஷ்ணன் - அந்தியூர் தொகுதி
20.சிவகாமி வின்சென்ட் - தாராபுரம் தொகுதி. மேற்குறிப்பிட்ட 20 பேரில் 8 பேர் பா.ம.கவில் இல்லை. 2 பேர் இறந்துவிட்டனர்.
  
தமிழ்நாட்டின் 13 வது சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2006 ஆம் ஆண்டு  மேமாதம் 8ஆம் நாள்.இதில் பா.ம.க - தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது, அதன் விவரம்:
1. ஜி.கே.மணி - மேட்டூர் தொகுதி 2.திருக்கச்சூர்.கே.ஆறுமுகம் - செங்கல்பட்டு தொகுதி 3.கோ.எதிரொலிமணியன் - பெரணமல்லூர் தொகுதி
4.டி.கே.ராஜா- திருப்பத்தூர் தொகுதி 5.இல.வேலுச்சாமி- தர்மபுரி தொகுதி, 6.கே.எல்.இளவழகன்- ஆற்காடு தொகுதி
7.ப.கண்ணையன் - தாரமங்கலம் தொகுதி
8.சக்தி கமலாம்பாள்- காஞ்சிபுரம் தொகுதி
9.டி.ஏ.மேகநாதன்- காவேரிப்பட்டினம் தொகுதி
10.க.பெரியசாமி - பூம்புகார் தொகுதி 11.தி.வேல்முருகன்- பண்ரூட்டி தொகுதி 12.அ.தமிழரசு - ஓமலூர் தொகுதி
13.காவேரி - எடப்பாடி தொகுதி
14.டாக்டர் நெடுஞ்செழியன் - கபிலர்மலை தொகுதி 15.ப.செந்தமிழ்செல்வன் - மேல்மலையனூர் தொகுதி, 16.இராமநாதன் - பவானி தொகுதி 17.டி.மூர்த்தி - திருப்போரூர் தொகுதி 18.வி.ஏ.டி.கலிவரதன் - முகையூர் தொகுதி. மேற்குறிப்பிட்ட 18 பேரில் தற்போது 8 பேர் பா.ம.கவில் இல்லை ஒருவர் இறந்துவிட்டார்.
    
தமிழ்நாட்டின் 14வது சட்டமன்ற பொதுத்தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள்.இதில் பா.ம.க - தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் விவரம்:
1.மாவீரன் ஜெ.குரு- ஜெயங்கொண்டம் தொகுதி
2.அ.கணேஷ்குமார் - செஞ்சி தொகுதி 3.கலையரசன் - அணைக்கட்டு தொகுதி.
இதில் மாவீரன் ஜெ.குரு நம்மை மீளாதுயரில் ஆழ்த்தி நம் நெஞ்சில் நிறைந்துள்ளார் மற்றோருவர் பா.ம.கவில் இல்லை.

நாளை தொடர்வது முக்கிய நிகழ்வுகள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages