இன்று (7.5.2020) சித்ரா பௌர்ணமி - மாமல்லபுரத்தில் பா.ம.க இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டசிறப்பும் இந்திர விழா, வசந்த விழா தமிழ் மன்னர்கள், மக்கள் கொண்டாடினர். - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி
இன்று (7.5.2020) சித்ரா பௌர்ணமி - மாமல்லபுரத்தில் பா.ம.க இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டசிறப்பு - இந்திர விழா, வசந்த விழா தமிழ் மன்னர்கள், மக்கள் கொண்டாடினர். மாமல்லபுரத்தில், பூம்புகாரில், மதுரையில் வெகு விமரிசை - வரலாற்றுச் சான்று சிலப்பதிகாரம், மணிமேகலை இலக்கியங்கள்
7.5.2020 இன்று சித்ரா பௌர்ணமி. இது வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. மாமல்லபுரத்தில் இந்திர விழா நடந்ததையொட்டி பா.ம.க சார்பில் இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டு வந்தது. பசி, பிணி, பகை இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதன் அடையாளமாக தமிழ்ப் பகுதியில் ஆண்ட மன்னர்களும் பொதுமக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வந்துள்ளதை பல்லவர் வரலாறும் சிலப்பதிகாசம், மணிமேகலை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும் சிறப்புற எடுத்துச் சொல்கின்றன.
தற்போதும் தமிழ்நாட்டில் பரவலாக கிராமப் பகுதிகளில் மாரியம்மன் திருவிழா உள்ளிட்ட அம்மன் திருவிழாக்கள் தேர்த் திருவிழாக்கள், மாமல்லபுத்தில், பூம்புகார் பகுதிகளில், மதுரையில் என சித்திரைத் திருவிழா, சித்ராபௌர்ணமி விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. தெருக்கூத்து, பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் போன்ற ஏராளமான கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இன்றளவிலும் நடைபெற்று வருவது சித்திரைக்கும் சித்ரா பௌர்ணமிக்கும் உள்ள பெருமைகள்.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதத்தையும் விட சித்ரா பௌர்ணமி கிரிவலம் பத்து மடங்குக்கு மேல் கூட்டம் வரும். ஆனால் கொரோனா என்னும் கொடிய உயிர்க்கொல்லி அரக்கன் இவற்றையெல்லாம் சிதைத்து பொது மக்களை வேதனையில் ஊடங்கில் முடக்கி வைத்துள்ள பெருங்கொடுமை. இந்த நிலை விரைவில் மாறும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment