சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளரும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளருமான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் மறைவுக்கு - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி ஆழ்ந்த இரங்கல். - Agnipuratchi

சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளரும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளருமான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் மறைவுக்கு - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி ஆழ்ந்த இரங்கல்.

Share This

சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளரும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளருமான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் மறைவுக்கு - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி ஆழ்ந்த இரங்கல்.            
        
ஜாக்டோ - ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாருமான ஆசிரியர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும்அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். க.மீனாட்சிசுந்தரம் அவர்களை நீண்ட காலமாக நான் நன்கு அறிந்தவன். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்கு நீண்ட காலமாக குரல் கொடுத்தும் போராடியும் வந்தவர்.                 
       
ஜாக்டோ - ஜியோ (அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு)வின் பிரச்சினைகளுக்கு போராட்டங்களுக்கு என்னிடத்தில் நேரிலும் தொலைபேசியிலும் பேசுவார். அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பிரச்சினைகளை ஜாக்டோ - ஜியோ கோரிக்கையை சட்டமன்றத்தில் நான் தான் நிறைய பேசுவேன். போராட்டங்களில் நிறைய முறை பா.ம.க சார்பில் கலந்து கொண்டுள்ளேன். மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறுவார். நீண்ட அனுபவம் மிக்கவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், அவரது நண்பர்கள், அவரது அமைப்பினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages