மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை: - Agnipuratchi

மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை:

Share This

மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை:

பொருளாதாரத்துறையின் அங்கமான தொழில்துறை தற்போது திறக்கப்பட் டுள்ளது. இதுபோன்ற சூழலில் நாம் கூடுதல் கவனத்தோடு இன்னும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர்.

பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக் காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது.

மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு தந்தார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பாராட்டுகள்.

கூடுதல் எச்சரிக்கையுடன் தொழில்துறை தற்போது சகஜ நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

தனிநபர் இடைவெளி, முக கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

நகரங்கள், கிராமத்தில் நமது சகோதரிகள் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான முக கவசங்களை தயாரித்து வருகின்றனர்.

கொரோனாவிற்கு எதிரான செயல்பாட்டில் பங்கேற்றுள்ளவர் குறித்து பிரதமர் பெருமிதம்.

கொரோனாவிற்கு எதிராக 130 கோடி மக்களும் போரிட்டு வருகின்றனர்.

கொரோனாவிற்கு எதிரான போர் வெற்றி பெறுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது.

கொரோனா துயரம் எந்த ஒரு பிரிவினரையும் விட்டு வைக்கவில்லை.
சாமானியர்கள், ஏழைகளின் துயரம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக  பணியாற்றி வருகின்றன. அனைவருக்கும் சோதனை, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வடகிழக்கு மக்களின் துயரங்களை தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு.

இந்தியாவை பார்த்து பிற நாடுகள் ஆச்சரியப்படுகின்றன. கொரோனா போர்- மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை.

கொரோனாவிற்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா எதிரான போரில் இந்திய ரயில்வே சிறப்பாக பணியாற்றி வருகிறது.

யோகா, ஆயுர்வேதாவை நோக்கி மக்கள் நடைபோட்டு வருகின்றனர்.
சுயசார்பு பாரதம் திட்டம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். யோகா மூலம் சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் முயன்று வருகின்றனர்.

பிராணயாமம் உள்ளிட்ட சில பயிற்சிகள் நமக்கு மிகச்சிறந்த தீர்வை அளிக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவங்கப்பட்டது என்றார் - பிரதமர் மோடி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages