மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறோம்.சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் பேட்டி
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரணம் குறித்து ஆய்வு செய்தார்.
குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் பொது மக்களுக்கு தடையின்றி செல்ல வேண்டும்.
கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டம் உருவாகி உள்ளது.
அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் யாருக்கும் நோய் தொற்று இல்லை. சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரணம் குறித்து ஆய்வு.
67 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன
ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை.
குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு. டெல்டாவில் கடைமடை விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி நீர் கிடைக்க ஏற்பாடு.
பொது விநியோக திட்டத்தின்படி அனைவருக்கும் அத்தியாவசிய பொருள் விநியோகம்.
வெளி மாநில தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
சேலத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு.
சிறு,குறு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட பணியாளர்களுடன் அனுமதி.
வேளாண் பணிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறோம். பொது மக்களும் அரசின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
No comments:
Post a Comment