அக்னிப்புரட்சி இன்றைய (02.06.2020) முக்கிய செய்திகள்.
* உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டியது.
பலியானோர் எண்ணிக்கை 3,77,152 ஆக உள்ளது.
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 29 லட்சமாகும். 53,407 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர்..
*இந்தியாவில் கொரோனா தொற்று
பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரிப்பு.
கொரோனா பாதித்த 97,581 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
இறப்பு விகிதம் உலகிலேயே மிக குறைவாக 2.82 சதவீதமாக உள்ளது - சுகாதாரத்துறை.
கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73% பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது.
நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24586 ஆக உயர்வு.
சென்னையில் மேலும் 809 பேருக்கு கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட் டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 16585 ஆக உயர்வு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு. இதோடு சேர்த்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். - தமிழக சுகாதாரத்துறை.
*18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
ஜூன்.19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்-தேர்தல் ஆணையம்.
*வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்.
ஒவ்வொரு வகையான பள்ளியிலும் ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.
மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும் கருத்து கேட்க உத்தரவு.
தலா ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்டு சமர்ப்பிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.
நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவு.
*10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு. தெர்வு மையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதா..? சானிடைசர் உள்ளதா...? எனவும் ஆய்வு செய்ய வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை.
*அரபிக்கடலில் 12மணி நேரத்தில் நிசர்கா புயல் உருவாகிறது:
நிசர்கா புயல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
- இந்திய வானிலை ஆய்வு மையம்.
*வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்- தமிழக அரசு. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
*புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்:நொடியூர் கிராமத்தில் 13 வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பம்.
மந்திரவாதி பேச்சை கேட்டு 13 வயது மகளை கொலை செய்த தந்தை கைது.
தண்ணீர் பிடிக்க சென்ற போது, சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம், அவரது நண்பர் கைது.குளக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
*புதுச்சேரியில் இருந்து மேற்குவங்கத்திற்கு நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கம்.
மேற்கு வங்கம் செல்ல விரும்புவோர் welcomeback.py.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம் - ஆட்சியர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
*வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து உத்தரவு.
எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது.
தமிழகத்தில் எந்தஒரு விற்பனை கூடங்களிலும் வேளாண் பொருட்களை விற்பனை செய்யலாம்.
*சென்னையில் கொரோனா தடுப்பு பணி குறித்து முதலமைச்சர் ஆலோசனை.
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.
தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைப்பு.
சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, முதலமைச்சர் ஆலோசனை,
சென்னையில் கடந்த 10 நாட்களில் 5,781 பேர் பாதிப்பு, 4,130 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்பு.
*திருச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி உயிரிழப்பு.
*கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும்; அதேநேரம் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும் - சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை.
நாம் இழந்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்போம். நாட்டின் திறமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்தியா சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் இந்தியா சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அரசின் முதல் நோக்கம். தொழிலதிபர் களால் இந்தியா வளர்ச்சி பெறும்.
தொழிலதிபர்களின் திறமையால் இந்தியா, மீண்டும் முழு வளர்ச்சி பெறும்.
25 ஆண்டு கால வரலாற்றில் இந்திய தொழில் கூட்டமைப்பு பல சவால்களை சந்தித்துள்ளது.
எண்ணம், கண்டுபிடிப்புகள், முதலீடு, உள்கட்டமைப்பு ஆகியவை பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் காரணிகள் - பிரதமர் மோடி பேசினார்
*சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீடு மற்றும் தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் மிரட்டல்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நடைபெற்ற விசாரணையில் புரளி என தெரியவந்தது.
*அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுக்க, ரொக்கமில்லா பரிவர்த்தனை நடைமுறைகள் வெளியீடு.
Paytm ஆப் மூலம் கட்டணம் செலுத்தும் வழிகள் குறித்து விளக்கம்.
பேருந்தில் ஒட்டப்பட்டிருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு.
*தமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கினாலும், பயணிகள் வரத்து குறைவு: வழக்கமாக 12 லட்சம் முதல் 13 லட்சம் பேர் பயணிக்கும் பேருந்துகளில் நேற்று 1,58,000 பேர் மட்டுமே பயணித்துள்ளனர்.
*சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லுபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில், வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை குறித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையுறை மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கவும், நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது கைகளை கழுவதற்காக வசதி ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தடுக்க ஆன்லைன் மூலம் நேரம் நிர்ணயித்து சேவை வழங்கவும், ஒருமுறை பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்களை சுகாதார முறையில் அப்புறப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
*நாளை (03.06.2020) கருணாநிதி பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும்.
கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம்.
அவரவர் இடங்களிலேயே சமூக ஒழுங்கை கடைப்பிடித்து கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும்- மு.க.ஸ்டாலின்.
*கொரோனா ஊரடங்கு காரணமாக தலைவி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு என சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் தரப்பில் விளக்கம்.
தலைவி படத்துக்கு தடை கோரிய வழக்கு ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
*சென்னை: ஐ.ஐ.டி-யில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை அறிவிக்க கோரிய வழக்கு:
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உயர் கல்வி செயலாளர், சென்னை ஐஐடியின் செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோர் ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
*புதுக்கோட்டை சிறுமி நரபலி விவகாரத்தில் கைதான பன்னீரின் 2வது மனைவியும் மர்ம மரணம்.
கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னீரின் 2வது மனைவி மூக்காயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சிறுமி நரபலிக்கு மூக்காயியும் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தகவல்.
*திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி!
திருப்பதி கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு. 6 அடி இடைவெளியுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படு வார்கள் என ஆந்திர அரசு அறிவிப்பு.
*தமிழக சிறைகளில் உள்ள கைதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று?
தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
இதுவரை எத்தனை கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது?
ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு. எத்தனை கைதிகள் குணமடைந்துள்ளனர் எனவும் கேள்வி.
*தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் நாளை அறிவிப்பு-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார் எதிரொலி. தமிழக அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் நாளை அறிவிப்பு.
*10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு:
வரும் 15ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் 2 மாதங்கள் தள்ளி வைக்கக் கோரி மனு.
*டெல்லி மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தாவை நியமித்து, ஜெ.பி.நட்டா உத்தரவு
பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆதேஷ் குப்தா வடக்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் மேயராவார்.
No comments:
Post a Comment