அக்னிப்புரட்சி இன்றைய (06.06.2020) முக்கிய செய்திகள்.
*கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,97,140 ஆக உயர்வு.
உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 393,102 ஆக உயர்வு.
உலகில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 32,44,329 ஆக உயர்வு.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரானாவால் 1,924,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொரானாவால் இதுவரை 110,173 பேர் மரணம்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 7வது இடத்தை பிடித்தது இந்தியா.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,26,770லிருந்து 2,36,657 ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,348லிருந்து 6,642 ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462லிருந்து 1,14,073 ஆக உயர்வு.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,146 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 20,993 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 19 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 251 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 633 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 16,395 பேர் குணமடைந்துள்ளனர். தமிழக அரசு
*தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியவர்களிடம் ரூ.10.44 கோடி அபராதம் வசூல்:
4,50,479 வாகனங்கள் பறிமுதல்.
5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு.
5,48,842 வழக்குகள் பதிவு - தமிழக காவல்துறை.
*தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்திருப்பதாக தகவல்.
பொதுவார்டில் நாள் ஒன்றுக்கு ரூ.5,000 ரூபாய் முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் என தகவல்.
தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.15,000 கட்டணம் நிர்ணயம் என தகவல்.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வெட்டிக்கொலை.
இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழ்ச்செல்வனை மர்மநபர்கள் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோட்டம்.
*அமலாக்கத்துறை தலைமையகத்துக்கு சீல்: டெல்லி: கான் மார்க்கெட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமையகத்தில் 5 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
கிருமிநாசினியால் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் நாளை வரை அலுவலகத்துக்கு சீல் வைப்பு.
*சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்:
வீடுகளில் இருந்து தனியாக வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
தனி அறையில் வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு வேனில் அழைத்துச் செல்லப்படு வார்கள். சுகாதார துறை உதவியுடன் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறிப்பட்டு வருகின்றன.
*கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நிலை குறித்து மருத்துவ மனையில் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு.
*ஒளிரும் தமிழ்நாடு' என்ற மாநாட்டை
காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்: இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு' என்ற மாநாட்டை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.
*கொரோனா சிகிச்சை தனியார் மருத்துவமனை கட்டணம் - அரசு உத்தரவு:
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் பொது வார்டில் நாள் ஒன்றுக்கு நகர்புற மருத்துவ மனைகளில் ரூ.7500 கட்டணம்.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் பொது வார்டில் நாள் ஒன்றுக்கு கிராமப்புற மருத்துவமனைகளில் ரூ.5000 கட்டணம்.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ஐசியுவில் நாள் ஒன்றுக்கு ரூ.15000 வரை கட்டணம்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு.
* கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது; இயல்பு நிலையை நோக்கி தமிழகம் முன்னேறுகிறது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
- முதல்வர் பழனிசாமி.
*மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு விவகாரம் : முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை.
வரும் ஆண்டில் அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த முடிவு.
முதுகலை மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 1,800 இடங்கள் உள்ளன.
900 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குவதில்லை.
*இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை.
லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடக்கம்.
லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை.
*ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து
திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் ஆன்லைனில் வெளியான நிலையில் அமைச்சர் கருத்து
அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் என அமைச்சர் கருத்து
*சென்னையில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசார் 6 பேருக்கு கொரோனா.
பூட்டை உடைத்து கொள்ளையடித் தவருக்கு கொரோனா இருந்த நிலையில் போலீசாருக்கும் கொரோனா.
வண்ணாரப்பேட்டையை சேர்ந்த குற்றவாளிக்கு கொரோனா. குற்றவாளியை பிடித்த வடபழனி போலீசாருக்கும் தொற்று.
புழல் சிறையில் குற்றவாளிக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி. தனிப்படை போலீசாருக்கு நடத்திய சோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி.
*புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்.
நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் இலவசமாக செய்து தரப்பட்டுள்ளன.
ஜூன் 1ம் தேதி வரை ரயில்வே சார்பில், 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது.
*காவிரி டெல்டா பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது - தமிழக பொதுப்பணித்துறை.
நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.
தூர்வாரும் பணிகளால் 10 நாட்களில் தண்ணீர் கடைமடை சென்று சேரும்.
டெல்டா மாவட்டங்களில் இவ்வாண்டு கூடுதலாக 1 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி மேற்கொள்ள திட்டம் - பொதுப்பணித்துறை.
* உதகைக்கு பேருந்து சேவை ரத்து
கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் பேருந்துகளில், உள்ளூர் பயணிகள் என சுற்றுலா பயணிகள் உதகைக்கு அதிகளவு வரும் தகவல் அறிந்த போக்குவரத்து கழகத்தினர், பிற நகரங்களில் இருந்து உதகை இடையிலான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்துள்ளனர்
தொழிலாளர்களை மட்டும் ஏற்றி வருவதற்காக தினமும் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு ஏழு பேருந்துகளும், மாலை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மூன்று பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
*கோவையில் விமானம் மூலம் வந்தவர்களில் 43 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது - கோவை ஆட்சியர் ராசாமணி செய்தியாளர் சந்திப்பு
*பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் தமிழகம் வந்தடைந்தது. தனி விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் மதியழகனின் உடல், சாலை மார்க்கமாக சேலம் எடப்பாடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
No comments:
Post a Comment