அக்னிப்புரட்சி இன்றைய (07.06.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.06.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.06.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது.

கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டியது.

கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளது.

53,587 பேர் மருத்துவமனைகளில் மோசமான நிலையில் உள்ளனர்.

*இந்தியாவில் கொரோனா தொற்று
பாதிப்பு எண்ணிக்கை 2,36,657 லிருந்து 2,46,628 ஆக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,642 லிருந்து 6,929 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 1,14,073 லிருந்து 1,19,293 ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,155 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 22,148 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 269 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 16,999 பேர் குணமடைந்துள்ளனர்.

*உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்கு முன்பே “எட்டுவழிச்சாலைப் பணிகள் நடைபெறும்” என அமைச்சர் கருப்பண்ணன் கூறியிருப்பது அகங்காரத்தின் வெளிப்பாடு - திமுக தலைவர் ஸ்டாலின்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனை, சேது சமுத்திரத் திட்டம் போன்ற திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை - ஸ்டாலின்.

*கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு எம்.பில் மற்றும் பி.எச்.டி முடிக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு ஆண்டு, கால அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித்துறை.

*தனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருந்தால் ரூ.2500 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

காப்பீடு அட்டை இல்லாதவர்களிடம் அதிகபட்சமாக ரூ.3000 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

வீட்டிற்கு வந்து சோதனை செய்தால் கூடுதலாக ரூ.500 வசூலிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

*ராணுவ வீரர் மதியழகன் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் மதியழகன் நேற்று முன்தினம் வீரமரணம் அடைந்தார்.

*ஹோட்டல்கள் திறப்பு : அரசு வழிகாட்டுமுறை வெளியீடு:

ஹோட்டல் வாசலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருத்தல் வேண்டும்.
கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும்.

ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்.

50% இருக்கைகள் மட்டுமே அனுமதி - தமிழக அரசு. ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

கொரோனா தொற்று அறிகுறி, உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.

*34 நாட்களுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு:
சென்னையில் பெட்ரோல் 53 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 75.54 ஆகவும், டீசல் 52 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 68.22 ஆகவும் உள்ளது.

*சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகளை தவறுதலாக ஜாமீனில் விடுவித்ததாக ஜெயிலர் சஸ்பெண்ட்.

கஞ்சா வழக்கில் கைதான ஆந்திராவை சேர்ந்த 2 கைதிகளை விடுவித்ததாக ஜெயிலர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

*காணொளி வாயிலாக முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

கடலூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகளை காணொளி மூலம் நடத்த துணைவேந்தர் முருகேசன் உத்தரவு.

முதல் காணொளி வாய்மொழித் தேர்வு வருகின்ற ஜூன் 9ஆம் தேதி நடைபெறும். இந்த மாதத்தில் 12 வாய்மொழித் தேர்வுகள் நடத்தப்படும் என துணைவேந்தர் அறிவிப்பு.

*10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து அரசாணை வெளியீடு.

மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும்.

அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் அரசாணை வெளியீடு.

*முகக்கவசம் இல்லை என்றால் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது.

கடைக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
வணிக நிறுவனங்கள், கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை.

*தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும்-ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.

நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் தகவல்.
உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் விளக்கம்.

*10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

மாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் என அறிவிப்பு.

மாணவர்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவிப்பு.

பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேருந்துகள் நாளை முதல் 13ஆம் தேதி வரை இயக்கப்படும்.

தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, ஒரு பேருந்தில் 24 பேருக்கு மட்டுமே அனுமதி. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்.

*புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.

உணவகங்கள், ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் உணவருந்த அனுமதி.
பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்- முதல்வர் நாராயணசாமி.

*பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கடைசி செமஸ்டர் தேர்வு:

ஆன்லைன் வழியாக நடத்த அண்ணா பல்கலை கழகம் திட்டம். ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் நடவடிக்கை.

கிராமப்புற மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்.

*தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை
- தமிழக அரசு. நாளை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.

*புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா. புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 119 ஆக அதிகரிப்பு.

*புதுச்சேரி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை தூக்கிவீசிய விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து அதிகாரி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோருக்கு ஆட்சியர் நோட்டீஸ்.

*அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்-தமிழக கல்வித்துறை உத்தரவு.

பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை.
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு நடவடிக்கை.

*மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது.

வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும்; தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம்.

கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு.

மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான்  அதிக கொரோனா சோதனை மையங்கள் உள்ளன.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.- முதல்வர் பழனிசாமி.

*ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள்  உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்க நடவடிக்கை.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல்.

சமூக இடைவெளியுடன் எவ்வாறு பள்ளிகளை நடத்துவது என்பது தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து, எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தான் முன்னுரிமை - மத்திய அமைச்சர்.

*தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி-மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பு.

*ஜம்மு - காஷ்மீர்: ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப்படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.
பாதுகாப்புப் படையினர், போலீசார் இணைந்து நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

*சென்னையில் சமூக பரவல் வந்துவிட்டதா..? இல்லையா...? என்பதை ஆய்வு செய்து, அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்.

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை, இனி மாநிலக் கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும். சென்னை மருத்துவ மனைகளில் உள்ள படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் எண்ணிக் கையையும் கட்டுப்பாட்டு அறையே வெளியிட வேண்டும் - ஸ்டாலின்.

*தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். வகுப்பறைகளில் கிடைக்கும் தெளிவையும், புரிதலையும் ஆன்லைன் வகுப்புகளால் வழங்க முடியாது - மருத்துவர் இராமதாசு அய்யா.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages