10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்ற முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கு வரவேற்பு பாராட்டுக்கள் - பாமக தலைவர் ஜி.கே. மணி
10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்ற முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு
மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது.
மாணவ - மாணவிகளுக்கும் பெற்றோர் களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவ - மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டுமென்று பா.ம.க சார்பில் மருத்துவர் அய்யா வலியுறுத்தி வந்தார்கள். மருத்துவர் அன்புமணி அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நானும் இது குறித்து சொல்லியிருந்தேன்.
இந்த நிலையில் இன்று (09.06.2020) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்,கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகளை ஆலோசித்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் 11 ஆம் (+1) வகுப்பின் விடுப்பட்ட தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியிட்டி ருப்பதை பா.ம.க சார்பில் வரவேற்று முதலமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மற்று முள்ளவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண்களில் 80% மற்றும் வருகையில் 20% எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இந்த அறிவிப்பு மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சைபேசியில் பேசினார். நல்ல அறிவிப்பை வரவேற்று,மருத்துவர் அய்யா அவர்கள் சார்பிலும் மருத்துவர் அன்பு மணி அவர்கள் சார்பிலும் பா.ம.க சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.
No comments:
Post a Comment