அக்னிப்புரட்சி இன்றைய (12.06.2020) முக்கிய செய்திகள்.
*உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டியது.
ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில் தொடர்ந்து முதலிடம்.
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா பாதிப்பு.
அமெரிக்காவில் ஒரே நாளில் 23,225 பேருக்கும் இந்தியாவில் 11,128 பேருக்கும் கொரோனா பாதிப்பு.
பெரு, சிலி, பாகிஸ்தானிலும் ஒரே நாள் கொரோனா பாதிப்பு கிடுகிடு அதிகரிப்பு.
பெருவில் 5,965, சிலியில் 5,596, பாகிஸ்தானில் 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தென்னாப்பிரிக்காவில் 3,733 பேருக்கும் வங்கதேசத்தில் 3,187 பேருக்கும் கொரோனா பாதிப்பு.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,97,535 ஆக உயர்வு.
1,47,195 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,41,842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கொரோனாவுக்கு 8,498 பேர் பலியாகியுள்ளனர்.
உலக அளவிலான மொத்த பாதிப்பில் 4 ஆம் இடத்தில் இந்தியா. கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று.
*உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் 4வது இடத்திற்கு சென்றது இந்தியா.
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக கொரானா பாதிப்பு பட்டியலில் உள்ளது இந்தியா.
இதுவரை இந்தியாவில் 2.97 லட்சம் நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,479 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 28,924 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 367 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 1342 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.
*நாகப்பட்டினம்: சுருக்குமடி, இரட்டைமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க தடை, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - நாகை ஆட்சியர் பிரவீன் நாயர்.
*தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம். - தமிழக அரசு.
சுகாதாரத் துறை செயலாளர் பொறுப்பில் இருந்து பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக மாற்றம்.
ஜெ.ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். - தமிழக அரசு.
*சம்பள பிரச்சினையை நிறுவனங்களும் ஊழியர்களும் பேசி முடிவெடுக்க வேண்டும்: - உச்சநீதி மன்றம்
ஊரடங்கு காலத்தில் முழு ஊதியம் தர உத்தரவிட்ட அரசின் அறிவிக்கைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
*முடிவு எட்டப்படாத பட்சத்தில் தொழிலாளர் நலத்துறை அல்லது நீதிமன்றத்தை நாடலாம்.
தொழிலாளர்கள் இல்லாமல் எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்க முடியாது - உச்சநீதிமன்றம்.
*கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.- இராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளர்.
தொற்று பரவலைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். நோயாளி களுக்கு சிகிச்சையளிக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது:
சுகாதாரத்துறை செயலாளராக மாற்றப்பட்டது நீங்கள் சொல்லிதான் தெரியும். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, கைகழுவுவதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். - ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளர்.
*மாஸ்க் தயாரிப்பு தொடர்பாக உற்பத்தி நிறுவனங்களுக்கு என்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன?
மாஸ்க் பயன்படுத்துதல், அப்புறப் படுத்துதல் தொடர்பாக என்ன வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட் டுள்ளன?. - சென்னை உயர்நீதிமன்றம்.
*ஊரடங்கு காலத்தில் ரத்தான விமான பயணச்சீட்டு தொகையை முழுமையாக திரும்ப அளிக்கக்கோரிய மனு-மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. மத்திய அரசு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்.
*கடன் தவணைக்கு கூடுதலாக வட்டி விதிப்பதா?
ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி விதிப்பது கவலை அளிக்கிறது. 3 நாள்களுக்குள் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
*10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார்.
அதிக மதிப்பெண் வழங்க 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்பதாக புகார்.
10 ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பெண் கணக்கிடும் பணி தீவிரம்.
காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருந்தது அரசு. மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை இன்று மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில் பரபரப்பு.
*சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. சென்னைக்கு இபாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலும் தவறானது - தமிழக அரசு.
*கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்து அறிகுறி இருந்தால்தான் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.
*ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.- உச்சநீதிமன்றம்.
டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
*இணையவழி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்தக்கூறி பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது.
அரசாணை விதிகளை மீறி கல்விக்கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை - தனியார் பள்ளிகள் இயக்குநர்.
*கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்களை அடக்கம் செய்தல் தொடர்பான வழக்கு.
மத்திய, மாநில அரசுகள் நிலையை அறிக்கை யாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.
இறந்த கொரோனா நோயாளிகள் உடல்களை அடக்கம் செய்வது
தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு. கொரோனாவால் உயிரிழந்தோர் உடல் அடக்கம் தொடர்பான வழக்கில் ஜூன் 17-ல் உத்தரவு.
*புதுக்கோட்டையில் விமான விபத்து ஏதும் நடைபெறவில்லை: மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி விளக்கம்.
*'சென்னையில் நடமாடும் வாகனங்களில் கொரோனா டெஸ்ட்'
சென்னையில் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் நாளை முதல் கொரோனா பரிசோதனை
15 மண்டலங்களிலும் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு ஆம்புலன்ஸ் போன்ற நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் கொரோனா பரிசோதனை
*தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.- உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. கே.பி.அன்பழகன் அவர்கள் பேட்டி
*சென்னை: பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*மாநில குழு உத்தரவிட்டும் சாதி சான்றிதழ் வழங்காத ஆர்.டி.ஓ.வுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
ஜூன் 15ம் தேதி சாதி சான்றிதழோடு காணொலி மூலம் ஆஜராகவும் உத்தரவு. இவர்களை போன்ற அதிகாரிகளை அரசு காப்பாற்ற நினைக்கக்கூடாது, இவர்களால் அரசின் நற்பெயர் கெடுகிறது - சென்னை உயர்நீதிமன்றம்.
*சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோர் வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாநகராட்சி ஆணையர்.
சென்னையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 40 பேர் மீது வழக்குப் பதிவு - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
*தேர்வுத்துறை இயக்குநர் பணியிடத்தை தொடக்க கல்வி இயக்குநரான பழனிசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு:
தேர்வுத்துறை இயக்குநராக இருந்த உஷாராணி விடுப்பில் சென்றுள்ளதால், நிர்வாக நலன் கருதி ஒப்படைப்பு - தமிழக அரசு.
*தமிழக சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார்.
*மருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு.
*ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது. வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது- நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்.
*சேலம்: எடப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7,038 பேருக்கு ரூ.36.44 கோடி கடனுதவி வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
*இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
பேருந்துகள், லாரிகள் போன்றவை தவிர பிற வாகனங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்- மத்திய உள்துறை அமைச்சகம்.
*கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டம்.
வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக காணொலி மூலம் ஆலோசனை.
No comments:
Post a Comment