அக்னிப்புரட்சி இன்றைய (13.06.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.06.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.06.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,31,673ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,25,273ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,28,210ஆக உயர்வு.

*இந்திய பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535லிருந்து 3,08,993ஆக உயர்வு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,47,195 லிருந்து 1,54,330ஆக உயர்வு
 
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498லிருந்து 8,884ஆக உயர்வு

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,01,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

குணமடைந்தோர் எண்ணிக்கை 47,796ஆக உயர்வு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,717ஆக உயர்வு. - மத்திய சுகாதார அமைச்சகம்

மகாராஷ்டிராவில் 1,01,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது;

குணமடைந்தோர் எண்ணிக்கை 47,796ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,717ஆக உயர்வு.

*தமிழகத்தில்இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதாரத்துறை.

சென்னையில் ஒரேநாளில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 30 உயிரிழப்பு.

இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 397ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 40,698ல் இருந்து 42,687ஆக அதிகரிப்பு.

சென்னையில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது..! - தமிழக சுகாதாரத்துறை.

*சென்னையில் பெட்ரோல் 52 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 78.99 ரூபாயாகவும், டீசல் 50 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 71.64 ரூபாயாகவும் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலை 3.98 ரூபாயும், டீசல் விலை 3.94 ரூபாயும் உயர்வு.

*மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை. வரும் திங்கட் கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஆலோசனை. 17ஆம் தேதி பிரதமர் உடன் ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அறிவிப்பு.

*வாசனை, சுவை தெரியவில்லை எனில் கொரோனா அறிகுறியாக இருக்கலாம். அதேபோல் காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் - மத்திய சுகாதாரத்துறை.

*புதிய மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஸ்டான்லி  மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் - விஜய பாஸ்கர்.

*அகில இந்திய மருத்துவ சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி. சண்முகம் மனுதாக்கல்.

*கோவை அரசு மருத்துவமனையில் கடலூரை சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை கடத்தல். இரட்டை ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தையை கடத்திச் சென்ற இளம்பெண்ணை போலீஸ் தேடுகிறது.

*தமிழகத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் மீறல்: ரூ.12.14 கோடி அபராதம் வசூல்.
4,66,666 வாகனங்கள் பறிமுதல்.
6,27,096 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு. 5,81,495 வழக்குகள் பதிவு - தமிழக காவல்துறை.

*பெங்களூரு பெல்லாரி எஃகு தொழிற்சாலை ஊழியர்கள் 10000 பேர் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு.
95 பேருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி.

*கொரோனா பாதிப்புள்ள நிலையில் தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாது.
சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்- டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார்.

*நிர்வாக நடவடிக்கை காரணமாகவே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார்.- அமைச்சர் ஜெயக்குமார்.

சூழலை பொறுத்து உரிய நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.
கொரோனா விவகாரத்தில் யார் அரசியல் செய்தாலும் மக்களால் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
- அமைச்சர் ஜெயக்குமார்.

*சென்னை கொளத்தூரில் முன்விரோதத்தால் ஒருவர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை கொளத்தூரில் முன்விரோதம் காரணமாக ரமேஷ்(23) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அபி, சரண் ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. கொலையில் ஈடுபட்ட சரவணன், பாரதி, சுரேஷ், அலி ஆகியோரை கொளத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

* நாமக்கல் முட்டை விலை 30 காசுகள் குறைப்பு

நாமக்கல்: நாமக்கல் முட்டை விலை 30 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. முட்டையின் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  முட்டை சில்லறை விற்பனை நாமக்கல் ரூ.4.30 ஆகவும், சென்னையில் ரூ.4.50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*தேனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டம் கோட்டூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதி, கோபால் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சின்னமனூர் சென்றுவிட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக் கப்பட்டது.

*விழுப்புரம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் (29) உயிரிழந்துள்ளார். மும்பையில் இருந்து விழுப்புரம் வந்த இளைஞருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 28 ம் தேதி முதல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

*சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் COVID19 வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு மேலும் 81 விரைவு நடமாடும் மருத்துவ குழுக்களை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2,000 செவிலியர்கள் கூடுதலாக நியமனம்

தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிராவை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது. சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது - அமைச்சர் விஜயபாஸ்கர்

*144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து  495 வழக்குகள் பதியப்பட்டுள்ளது

6 லட்சத்து 27 ஆயிரத்து 096 பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டதுடன் 4 லட்சத்து 66 ஆயிரத்து 666 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன - தமிழக காவல்துறை தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 12 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரத்து 099 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
- தமிழக காவல்துறை தகவல்

*தலைமைச் செயலகத்தைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அலுவலகங் களும் மூடல்

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது
கிருமி நாசினி தெளித்து வளாகத்தை சுத்தப்படுத்தும் பணிக்காக அனைத்து அலுவலகங்களும் மூடல்

*தமிழகத்தில் முதலீடு செய்ய 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்ய சாதகமானஅம்சம், சிறப்பான சூழல் இருப்பதாக கடிதத்தில் தகவல்

*தமிழகத்தில் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் தந்ததில் முறைகேடு என உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு

*தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,22,867 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 6,27,096 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

5,81,495 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 12,14,30,099 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படும், என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் CBSE பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் முதல் வாரம் வரை நடைபெற்றது.

ஊரடங்கு 12-ம் வகுப்பில் 29 பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வுகள் நடைபெறும் போதே விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெறும் என்றும், ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, ஆகஸ்ட் 15-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதன் பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும், என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

*சென்னையில் 23 போலீசாருக்கு நோய் தொற்று சென்னை மாநகரில் கொரோனா பாதித்த பகுதிகளில் பாதுபாப்பு பணிகளில் ஈடுபட்ட 23 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

அதைதொடர்ந்து 12 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐஐடி மற்றும் அரசு மருத்துமனைகளில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்துள்ளனர்.

சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை கொரோனா தொற்றால் 582 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் புருஷோத்தமன், போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சண்முகய்யா ஆகியோர் நோய் தொற்றில் இருந்து குணமாகி நேற்று பணிக்கு திரும்பினர்.

*தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. மத்திய கிழக்கு, மேற்கு அரபிக்கடல், ஆந்திர, கர்நாடக கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம்.

*ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

*கொரானா தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்.

*டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ஹர்ஷ்வர்தனுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை.

டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் மருத்துவ நிபுணர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு. டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.

*திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பெண்கள், பிறந்து ஒரு நாள் ஆன குழந்தை உட்பட 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வந்த 16 பேர் உட்பட 50 பேருக்கு கொரோனா பாதிப்பு-மாவட்ட நிர்வாகம்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 636 ஆக அதிகரிப்பு.

*செயலாளரை மாற்றியதுபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும். பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை - மு.க.ஸ்டாலின்.

*நேபாளத்தின் வரைபடத்தை மாற்றியமைத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.

இந்திய பகுதிகளை சேர்த்து தனது வரைபடத்தை நேபாளம் மாற்றி அமைத்துள்ளதற்கு இந்தியா கண்டனம்.
வரைபடம் மாற்றம் பற்றி இந்தியா தனது நிலையை அதிகாரப்பூர்வமாக நேபாளத்துக்கு தெரிவிக்கும் - அதிகாரிகள்.

*திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலியில் நடைபெறுகிறது.

*அவசரக் காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க, மத்திய சுகாதரத் துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

மாநில சுகாதர துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து போதிய சிகிச்சை வசதிகளை உறுதி செய்ய அறிவுறுத்தல்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை.

தயார் நிலையில் இருக்கும்படி பிரதமர் அறிவுறுத்தினார் மாவட்ட மற்றும் நகர அளவில் படுக்கைகள், தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய உத்தரவு.

மொத்த கொரோனா பாதிப்பில் 3ல் 2 பங்கு 5 மாநிலங்களிலேயே உள்ளது - பிரதமர் அலுவலகம்.

*சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக் கைகளுக்காக ‘மைக்ரோ திட்டம்’

15 மண்டலங்களில் 200 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைப்பு. சென்னையில் 11,500 பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று ஆய்வு செய்வர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages