அக்னிப்புரட்சி இன்றைய (17.06.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.06.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.06.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனா தொற்று
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,56,257 ஆக அதிகரிப்பு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,937 ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 43,06,089 ஆக அதிகரிப்பு.

*இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 11903ஆக உயர்வு.

24 மணி நேரத்தில் 2003பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவுக்கு 3,54,065 பேர் கொரோனாவால் பாதிப்பு.

*ஜம்மு-காஷ்மீர்: நவ்காம் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

*கொரோனா பாதிப்பு - புதிய உச்சத்தை தொட்ட தமிழகம்

தமிழகத்தில் மேலும் 2174 நபர்களுக்கு கொரானோ தொற்று உறுதி.
தமிழகத்தில் 50 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,153 அதிகரிப்பு.
சென்னையில் 1276 நபர்களுக்கு உறுதி.

ஒரே நாளில் மேலும் 48 நபர்கள் உயிரிழப்பு. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 576 ஆக உயர்வு.

*சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 11வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
சென்னையில் லிட்டர் பெட்ரோல் 49 காசுகள் உயர்ந்து 80.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 52 காசுகள் அதிகரித்து 73.69 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த 11 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.32, டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.47 உயர்த்தப்பட்டுள்ளது.

*சீனா தாக்குதல்: மேலும் 4 ராணுவ வீரர்கள் கவலைக்கிடம்.
லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம். ஏற்கனவே 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், மேலும் 4 வீரர்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.

*சீனா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்..? எதை மறைக்கிறார்..? லடாக் எல்லையில் என்ன நடந்தது என்பதை பிரதமர் அறிவிக்க வேண்டும்-ராகுல் காந்தி.

*வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் தொடங்கப்பட்டது.
tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனங்கள் தங்கள் காலிப் பணியிடங்களை தளத்தில் பதிவேற்றி தகுதியான நபர்களை தேர்வு செய்துகொள்ளலாம்.

*புதுச்சேரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா. புதுச்சேரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 242 ஆக அதிகரிப்பு.

*சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட நீதிபதிகள் ஜூன் 30 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.

4மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தால் போதும் எனஅறிவிப்பு.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு.

*முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

*பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.

மீண்டும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் குறித்த விவரங்களை 24-ம் தேதிக்குள் பெற்று ஒப்படைக்க  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

*வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:

கொரோனா பாதிப்பு காலத்தில், வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம். தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

*லடாக் பகுதியில் நடந்த மோதலில் சீன ராணுவத்தின் உயரதிகாரி உயிரிழப்பு என தகவல். சீன ராணுவ குழுவிற்கு தலைமை தாங்கிய அதிகாரி மோதலில் உயிரிழந்ததாக தகவல்.

*ராணுவ வீரர் வீரமரணம் குடும்பத்தினருக்கு; ஆட்சியர் நேரில் ஆறுதல்: வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆறுதல்...

*எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பை அதிகரிக்க; அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு.
எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தல்.

*நடிகர் சுஷாந்த் சிங் மரணம் - நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்கு:
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்கு!

*லடாக் எல்லையில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை நாடு மறக்காது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல். எல்லையில் வீரர்களின் மரணம் வேதனையளிக்கிறது. தியாக வீரர்களை இழந்த குடும்பங்களுக்கு நாடே துணை நிற்கும்.
- ராஜ்நாத் சிங்.

*கொரோனா தடுப்பு பணியில் இருந்து 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விடுவிப்பு:
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை. 15வது மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன், 14வது மண்டல சிறப்பு அதிகாரி வெங்கடேஸ், 12வது மண்டல சிறப்பு அதிகாரி எம்.எஸ்.சண்முகம் விடுவிப்பு.

*ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 50,000 ரூபாய் அபராதம் இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கை அபராதம் விதித்து; தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

*இந்தியா - சீனா விவகாரம்:
19 ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு.

*லடாக் எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா முடிவு:
இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை.
- சீன வெளியுறவுத்துறை.

*தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர் களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

*இந்தியா, சீனா இடையிலான மேஜர் ஜெனரல் அளவிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
இரு நாட்டு எல்லைகளிலும் அமைதியை நிலைநாட்ட முயற்சி.

தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

*உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி,
எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத் திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம்.

*லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது. வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - பிரதமர் மோடி.

*20 ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அந்த துணிச்சலான வீரர்களுக்கு எனது இதயப்பூர்வ அஞ்சலி. இந்த வலியை எதிர்கொள்ள அவர்களின் குடும்பங்களுக்கு பலம் அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

*அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று பொருட்களை விநியோகிக்க முடியாது. தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு.

*தனிச்செயலர் மறைவு - ஸ்டாலின் இரங்கல்.
முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல். அனைத்து அரசு அலுவலக அதிகாரிகள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

*முழு ஊரடங்கு இந்த முறை கடுமையாகவே இருக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

*கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கவே முழு ஊரடங்கு 38,000 க்கும் மேற்பட்ட களப்பணியாளர் கள் பணியாற்றி வருகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்

*சென்னையில் 12, 14, 15 மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சண்முகம், கருணாகரன், வெங்கடேசன் ஆகியோருக்கு பதிலாக நிர்மல் ராஜ், அனீஸ் சேகர், விஷ்ணு ஆகியோர் நியமனம்!

* கள்ளக்குறிச்சி மாவட்டம் கட்டுப்படுத் தப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அஷ்ட லட்சுமி நகரில் கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியின் பாதுகாப்பை மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

*லண்டன் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்ட நீலகிரி மாணவி!!!
இந்திய குடியரசு தலைவர்
ராம்நாத் கோவிந்த்திடம் சிறந்த மாணவிக்கான பரிசுப் பெற்ற மலை கிராமத்தைச் சேர்ந்த படுக இன மாணவி லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு மேற்கல்வி பயில அழைக்கப்பட்டுள்ளார்.

*எல்லையில் உயிர் தியாகம் செய்த வீர‌ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வியாபாரிகள் சீன பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - விக்கிரம‌ராஜா

*கர்நாடகாவில் வரும் 25ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு - உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது

இந்த தேர்வு எழுதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பிருப்பதாக மனுதாரர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்

அதனை நிராகரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த அனுமதி வழங்கியது

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages