அக்னிப்புரட்சி இன்றைய (20.06.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87,57,748ஆக உயர்வு.
வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46,25,445ஆக உயர்வு.
வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,519ஆக உயர்வு.
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 22,97,190ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,407ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,80,532லிருந்து 3,95,048ஆக உயர்வு:
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,04,711 லிருந்து 2,13,381 ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,573ருந்து 12,948ஆக உயர்வு. - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,254 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 39,641 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 38 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 704 ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரே நாளில் 1,045 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 31, 316 பேர் குணமடைந்துள்ளனர்.
*கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதியை தருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல்.
பல்கலைக்கழகம் சம்மதத்தை அடுத்து மாணவர் விடுதியில் சிகிச்சை முகாம் அமைக்க ஏற்பாடுகள் தீவிரம்.
விடுதியில் உள்ள மாணவர்களின் உடமைகளை ஒரே அறையில் பத்திரமாக வைக்க திட்டம். 600 படுக்கைகளை 1600 படுக்கைகளாக அதிகரிக்க அதிகாரிகள் முடிவு.
*புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு.
நாளை இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
*காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,070 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 514 பேர் குணமடைந்துள்ள நிலையில் 546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனவால் பாதிக் கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1009 ஆக அதிகரிப்பு
*புதுச்சேரியில் ஓரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.
புதுச்சேரியில் இதுவரை மொத்தம் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு.
கொரோனாவுக்கு புதுச்சேரியில் மொத்தம் 7 பேர் உயிரிழப்பு.
*புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் MD, MS,MDS படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு நாளை திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள 5 தேர்வு மையங்களில் ஆன்லைன் நுழைவுத்தேர்வு எழுதும் 16,357 மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு நெறிமுறைப்படி தேர்வு நடைபெறும் என ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
*ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்வா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல். இந்திய ராணுவமும் அதற்கு தக்க பதிலடி கொடுத்ததாக தகவல்.ஸஇந்த துப்பாக்கி சூடு சம்பவத்தினால் 4 பேர் காயம்.
*நோய் தொற்றும் ஆபத்து இல்லை.. கொரோனா பாதித்த தாய்மார்கள் தயக்கமின்றி தாய்ப்பால் கொடுக்கலாம். உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்
கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான தாயின் தாய்பாலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் படவில்லை
நோய் தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமுடக்க பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம்.
*அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, சீனா தங்களின் பிரச்னைகளை தீர்க்கும் என நம்புகிறோம் பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேபாளம் என்றும் துணை நிற்கும்-நேபாள வெளியுறவுத்துறை அறிக்கை.
*ஐஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேர்வுக்கான அனுமதிச் சீட்டு இருந்தாலே அனுமதிக்கலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் டி.ஜி.பிக்கு தமிழக அரசு கடிதம்.
*ராகுலுக்கு, ராணுவ வீரரின் தந்தை பதிலடி!:
இந்திய ராணுவம் வலிமைமிக்கது, சீனாவை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது. இதில் ராகுல்காந்தி அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசு மீதான ராகுலின் குற்றச்சாட்டிற்கு கல்வானில் காயமடைந்த இந்திய ராணுவ வீரரின் தந்தை பதிலடி!
*எல்லைப் பிரச்னை: ப.சிதம்பரம் சரமாரி கேள்வி?:
1. இந்திய எல்லையில் எந்த சீனர்களும் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்; அப்படியானால், மே 5-6ல் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
2. ஜூன் 16ல் இருநாட்டு துருப்புக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது ஏன்?
3. இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது? - ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர்.
*‘சீன தயாரிப்புகளை வாங்க வேண்டாம்’ - மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
சீனாவிற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. பொருளாதார ரீதியாக நாம் சீனாவை தாக்க வேண்டும்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். - மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
*பாகிஸ்தானின் உளவு ட்ரோன் விமானம், எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது!:
காஷ்மீரின் கதுவா அருகே இன்று காலை 5 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டதாக தகவல்.
*சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:
சென்னையில் 11 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு:
அதிகபட்சமாக ராயபுரத்தில் 5981 பேருக்கு தொற்று.
தண்டையார்பேட்டை 4869 - தேனாம்பேட்டை 4652 -
கோடம்பாக்கம் 4149.
அண்ணா நகர் 3972 -
திருவிக நகர் 3356 -
அடையாறு 2204.
*சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
➤ யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு.
➤ கொரோனா புதிய நோயாக இருப்பதால் உலகளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
➤ கொரோனா நோய் எப்போது குறையும் என்பது கடவுளுக்குதான் தெரியும்.
➤ வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மூலமே கொரோனா தொற்று பரவியது; தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது.
*சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு.
காமராஜ், ஞானசேகரன், மணிகண்டன் ஆகிய 3 அதிகாரிகள் விடுவிப்பு.
விடுவிக்கப்பட்டோருக்கு பதில் புதிதாக 3 அதிகாரிகள் நியமனம்.
ஏற்கனவே 6 அதிகாரிகள் கொரோனா பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 அதிகாரிகள் விடுவிப்பு.
*”கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதிகளை தர முடியாது" - சென்னை மாநகராட்சிக்கு அண்ணா பல்கலைக் கழகம் பதில்.
கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதிக்கு பதில் ஆடிட்டோரியத்தை சென்னை மாநகராட்சிக்கு தர தயார் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்.
*அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பாக சில தவறான தகவல் பரப்புகிறார்கள் -பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தகவல்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி உட்புக முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றே பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கட்டமைப்புகளை அகற்ற சீன தரப்பு கோரியது, இந்தியா மறுப்பு தெரிவித்தது. ஜூன் 15ஆம் தேதி மோதல் சம்பவம் குறித்து மத்திய அரசு விளக்கம்.
*ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணையில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு.
*ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் அக்.1 முதல் அமல்படுத்தப் படும் -அமைச்சர் காமராஜ்
தூத்துக்குடி, நெல்லையில் சோதனை முறையாக ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருந்த திட்டம், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
*கோவையில் பிரபல நகைக் கடைக்கு சீல்; சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் 39 பெண் ஊழியர்களை அழைத்து வந்ததால் நடவடிக்கை.
*கோவை ஆனைகட்டி பகுதியில் வாயில் காயம் ஏற்பட்டு உடல் சோர்வுடன் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை - வாயில் காயம் எப்படி ஏற்பட்டுள்ளது என வனத்துறையினர் விசாரணை
பலா, வாழை , தர்பூசணி பழங்களில் மருந்து மாத்திரை வைத்து சிகிச்சை அளிப்பு
*நெருப்பு வளைய சூரிய கிரகணம்... விண்ணில் ஓர் அதிசயம்..!
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணில் தோன்றும் அபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம், நாளை தமிழகத்தின் சில நகரங்களிலும் காண முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அரிய நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம் என பொது மக்களுக்கு, வானியல் ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
*கொடுமணல் அகழாய்வு பணியில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய கல்லறை, கொல்லுப்பட்டறை கண்டுபிடிப்பு
*தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு நாட்களுக்கு மூடல். கிருமி நாசினி கொண்டு அலுவலகம் சுத்தம் செய்யப்படும் என தகவல் ; ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிர்வாகம் நடவடிக்கை
*11ஆம் வகுப்புக்கு வேதியியல் இல்லாமல் புதிய அறிவியல் பாடத் தொகுப்பை தமிழக அரசு அறிமுகம் செய்ததற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு
*அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, சீனா தங்களின் பிரச்னைகளை தீர்க்கும் என நம்புகிறோம்! - நேபாளம்!
பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேபாளம் என்றும் துணைநிற்கும் எனவும் நேபாள வெளியறவுத்துறை அறிக்கை!
* மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை மருத்துவர், அவரது மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
*மதுரையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டத்தின் இரண்டு எல்லைகளில் ‘செக்போஸ்ட்கள்’ அமைத்து 24 மணி நேர தொடர் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது
*சென்னையில் முழு ஊரடங்கு எதிரொலி அரக்கோணம் இன்டர்சிட்டி ரயிலில் 77 பேர் மட்டுமே பயணம் : அதிகாரிகள் தகவல்
*ஹைதராபாத்தில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் இருந்து காணாமல்போன நபர் பிணவறையில் அடையாளம் காணப்பட்டார்
* நாகை சீர்காழி வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அலுவலகம் மூடப்பட்டது!
No comments:
Post a Comment