அக்னிப்புரட்சி இன்றைய (21.06.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.06.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.06.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89,14,787ஆக உயர்வு;

வைரஸில் இருந்து குணமடைந்தோர்
எண்ணிக்கை 47,38,542ஆக உயர்வு;

வைரஸால் உயிரிழந்தோர்
எண்ணிக்கை 4,66,718ஆக உயர்வு.

பிரிட்டனில் 3.03 லட்சம் பேருக்கு கொரோனா; 42,589 பேர் பலி

பிரேசிலில் 10.70 லட்சம் பேருக்கு கொரோனா; 50,058 பேர் பலி

அமெரிக்காவில் 23.30 லட்சம் பேருக்கு கொரோனா; 1,21,980 பேர் பலி
கொரோனாவிலிருந்து 47.33 லட்சம் பேர் மீண்டனர்

*இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,10,461 ஆக உயர்வு.

கொரோனா பாதிப்பில் இருந்து 2,27,756 பேர் குணமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,254 ஆக உயர்வு.

*தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,532 பேர். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 59,377
சென்னையில் இன்று 1,254 பேருக்கு கொரோனா

*ஊரடங்கு மீறல் தமிழகத்தில் ‌இதுவரை ரூ. 14.10 கோடி அபராதம் வசூல்.

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,81,952 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு.

இதுவரை 4,98,193 வாகனங்கள் பறிமுதல்; 6,31,260 வழக்குகள் பதிவாகின- காவல்துறை.

*சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தளர்வுகளின்றி இன்று முழு ஊரடங்கு.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஊரடங்கு முழுமையாக எந்தவிதத் தளர்வும் இல்லாமல் கடைபிடிக்கப்படுகிறது. இன்று மருந்துக் கடைகள் தவிர வேறு எந்த கடையும் திறக்கப்படாது .

*சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடலூரில் யோகா ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ஒரு மணிநேரம் ஐஸ் கட்டிகள் மீது யோகா செய்து சாதனை படைத்தார்.

*சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்ந்து 82.58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 51 காசுகள் அதிகரித்து 75.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

*சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரை:

சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்கான நாளாக யோகா தினம் அமைந்துள்ளது.

அனைவரும் குடும்பத்துடன் வீட்டிலிருந்தே யோகா செய்யுங்கள்.
சில ஆசனங்கள் உடல் வலிமையை அதிகரிக்கும், நமது உடலில் எதிப்பு சக்தியை யோகா அதிகரிக்கிறது.

*எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் பேசி வருகிறோம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்.

எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது - அதிபர் டிரம்ப்.

*புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு இன்று தொடங்கியது.

*புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு.

* விழுப்புரத்தில் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு.

*மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் புதிய மனு தாக்கல்.

*இந்திய எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு:

சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

*கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு.
கடலூர்: ஜோதிநகரை சேர்ந்த 61 வயது நபர் கொரோனாவுக்கு உயிரிழப்பு, கடலூர் மாவட்ட உயிரிழப்பு 4 ஆக உயர்வு.

*திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு (திமுக) கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது! கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

*நகராட்சி ஆணையருக்கு கொரோனா.
திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள் ளதை தொடர்ந்து அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு. கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடல்.

*தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அவரது பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியாக தெரியவந்துள்ளது.

*டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்.

கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையில் முன்னேற்றம்.

பிளாஸ்மா சிகிச்சைக்குப்பின் அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையில் முன்னேற்றம்- டெல்லி சுகாதாரத்துறை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages