அக்னிப்புரட்சி இன்றைய (24.06.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93,45,569ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,36,723ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,78,949ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனா தொற்று:
பாதிப்பு எண்ணிக்கை 4,40,215லிருந்து 4,56,183 ஆக அதிகரிப்பு.
குணமடைந்தோர் 2,48,190லிருந்து 2,58,685 ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,011லிருந்து 14,476 ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் பாதித்த 1,83,022 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
*தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்:
இன்று ஒரே நாளில் புதிதாக 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,654 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 45,814 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 33 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 866 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 2,424 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 37,763 பேர் குணமடைந்துள்ளனர்.
*ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.14.95 கோடி அபராதம் வசூல்.
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,14,850 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு.
இதுவரை 5,26,426 வாகனங்கள் பறிமுதல்; 6,57,112 வழக்குகள் பதிவாகின- காவல்துறை.
*சென்னையில் விஸ்வரூம் எடுத்து வரும் கொரோனா கடந்த சில நாட்களாக மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் தீவிரம அடைந்து வருகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை தொடர்ந்து மதுரை, தேனியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாகவும் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
*வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பெருமிதம்!
கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்த சென்னை, திரு.வி.க நகர் மண்டலம் ஆறாம் இடத்திற்கு சென்றதால் அதிகாரிகள், பொது மக்கள் மகிழ்ச்சி!
*கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய உத்தரவு:
கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு; உடற்கூடாய்வை வீடியோவாக பதிவு செய்யவும் உத்தரவு.
*தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்.
கோவில்பட்டி ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி வேண்டி போராட்டம்.
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் தமிழகம் முழுக்க கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளார்.
*பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கரோனா பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறும் நிலையில் அதுபற்றி தகவல்களை அளிக்க வேண்டும் எனவும், அதுபற்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம் எனவும் ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
*சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 83.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76.77 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
*மாணவர்களின் நலன்கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம்.
ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம்.
e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
*இம்மாத இறுதிக்குள் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பி மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை.
- அமைச்சர் செங்கோட்டையன்.
*மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை:
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்துவது, முழு ஊரடங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை.
*டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது, மத்திய அமைச்சரவை:
வரும் 30 ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய ஆலோசனை.
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை என தகவல்.
*புதுச்சேரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 461 ஆக உயர்வு.
*சாத்தன்குளத்தில் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை வாங்க மறுப்பு -உறவினர்கள் போராட்டம். தனது தந்தை, சகோதரனை தாக்கிய போலீஸ் மீது கொலைவழக்கு பதிய சகோதரிகள் வலியுறுத்தல். தனது தந்தை, சகோதரனை தாக்கிய போலீசுக்கு உரிய தண்டனை வழங்க சகோதரிகள் கோரிக்கை.
*இந்தியாவில் கொரோனாவுக்கு 2-வது எம்.எல்.ஏ. பலி. மேற்கு வங்கத்தின் திரிணாமுல் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் கொரோனாவால் மரணம்.
*சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து 37,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
*சென்னையில் போலி இ பாஸ் தயாரித்து கொடுத்ததாக அரசு ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது:
ரூ. 3,000 முதல் 5,000 வரை பணம் பெற்றுக்கொண்டு தயாரித்து கொடுத்ததாக குற்றச்சாட்டு"
*ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மே மாதம் நடைபெற வேண்டிய அணிவகுப்பு தற்போது நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டுள்ளார்.
*வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்- சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல். வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்பு - மத்திய அரசு.
*லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
முற்றுப்புள்ளி வைக்க காவல் துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தந்தை, மகன் மரண விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படும். உரிய நீதி வழங்கப்படும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
*தமிழகத்தில் தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்ய முடிவு?- முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு என தகவல். அந்தந்த மாவட்ட எல்லைகளை மூடவும், மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்.
*கூடுதலாக 1.5 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.
தமிழக அரசு கொடுத்த ஆர்டர் பேரில் தென்கொரிய நிறுவனம் அனுப்பியது.
ஆர்டர் செய்த 15 லட்சம் பி.சி.ஆர். கருவிகளில் 1.5 லட்சம் கருவிகள் தற்போது வந்துள்ளன. தமிழகத்தில் தற்போது 6. 77 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பு உள்ளன - தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம்.
*கொரோனா சிகிச்சை: மதுரையில் மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு.
மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு. முதற்கட்டமாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது- மதுரை சிறப்பு அதிகாரி சந்திரமோகன்.
*ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு?
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எனத் தகவல்.
ஆட்சியர்கள், தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்கும் முடிவுகளை எடுக்க அனுமதி எனத் தகவல்.
*ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்- மத்திய அமைச்சரவை முடிவு.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர மத்திய அமைச்சரவையில் முடிவு- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
*தமிழகத்தில் தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து. - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
நாளை முதல் 30 தேதி வரை அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கவேண்டும்.
மதுரைக்கும் ரூ.1000. முழு ஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000
இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடாது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றால் கண்டிப்பாக இ-பாஸ் அவசியம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
*மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு. ஊரடங்கை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டித்து மேற்குவங்க அரசு அறிவிப்பு.
*பல்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து: யுஜிசி பரிந்துரை.
பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி குழு மத்திய அரசுக்கு பரிந்துரை.
முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி குறித்து முடிவு எடுக்கலாம். புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை அக்டோபர் மாதத்திற்கு முன்பாக தொடங்க வேண்டாம் எனவும் பரிந்துரை.
*சாத்தான்குளம் சம்பவம்: இறந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.
உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.
*இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு.
கடலூர்: மங்கலம்பேட்டை அருகே பள்ளிப்பட்டு என்ற இடத்தில் வயல் வேலையை முடித்துவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி சின்னதுரை (58) மீது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
*அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கான சிகிச்சை அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர் களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு. ஜூன் 30ஆம் தேதியோடு நிறை வடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு - தமிழக அரசு.
No comments:
Post a Comment