அக்னிப்புரட்சி இன்றைய (28.06.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.06.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.06.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,00,75,115ஆக உயர்வு.

கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,53,247ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,00,626ஆக உயர்வு.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953லிருந்து 5,28,859ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881லிருந்து 3,09,713ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685லிருந்து 16,095ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம் இன்று ஒரே நாளில் புதிதாக 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,275 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,992 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 52,762 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு  பலியானோர் எண்ணிக்கை 1,083 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 1,443 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 45,537 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் 35,656 பேர். தமிழக சுகாதாரத் துறை.

*சென்னையில்  மண்டல வாரியாக  கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு:

ராயபுரம் - 7455, தண்டையார்பேட்டை - 6221, தேனாம்பேட்டை - 5758 பேருக்கு தொற்று.

அண்ணா நகர் - 5506, கோடம்பாக்கம் - 5432, திரு.வி.க. நகர் - 4387 பேருக்கு பாதிப்பு.

அடையாறு - 3202, மாதவரம் - 1655, ஆலந்தூர் - 1300, அம்பத்தூர் - 2120 பேருக்கு கொரோனா.

வளசரவாக்கம் - 2310, திருவொற்றியூர்-2019 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தண்டையார்பேட்டையிலும் 6 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு.

*வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பு.

தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு உள்ளது.

52,234 வாகனங்கள் பறிமுதல், 60,131 வழக்குகள் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 வழக்கு.

இ.பாஸ் தவறாக பயன்படுத்தக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

*மதுரை அண்ணா நகர் பகுதியில் பிரபல செல்போன் விற்பனை கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான செல்போன் கள் திருட்டு.ஊரடங்கு காரணமாக கடை பூட்டி இருந்த நிலையில் செல்போன் களை கொள்ளையடித்தது யார் என விசாரணை.

*போலீஸ் தாக்கியதால் உயிரிழப்பு?
போலீஸ் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக புகார்.

தென்காசி - வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த குமரேசனை போலீஸ் தாக்கியதாக புகார்.

ஜூன் 12 அன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரேசன் உயிரிழப்பு.

தென்காசி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் குமரேசனின் தந்தை ஏற்கனவே புகார். குமரேசனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் ஊர் மக்கள் போராட்டம்.

*ஆட்டோ ஓட்டுநர் மரணம்-2 காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு.

தென்காசி: வீ.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ. சந்திரசேகர்,  காவலர் குமார் மீது வழக்குப்பதிவு.சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாக, உறவினர்கள் விடியவிடிய போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை.

*எச்சரிக்கை: கீழே கிடந்த மாஸ்க்கால் 5 பேருக்கு கொரோனா!!!!
வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு கடந்த 22ல் கொரோனா உறுதியானது. வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொற்று பரவியது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில் 20 வயதான வாலிபர் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்துள்ளனர். அபராதம் விதிப்பர் என போலீசாருக்கு பயந்த வாலிபர் அங்கு கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார். ‍வீட்டிற்கு சென்ற ‍ அவரால் வீட்டிலிருந்த அவரது பெற்றோர், தம்பி, தங்கைக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற விபரம் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

*சாத்தான்குளத்திற்கு புதிய  காவல் ஆய்வாளர் நியமனம்:
தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமனம். சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கெனவே ஆயுதப்படைக்கு மாற்றம்.

*மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா விழுப்புரம் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி.

*ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம்.
பேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பதிவிட்டதால் அதிரடி நடவடிக்கை. காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் - விசாரணைக்கு உத்தரவு.

*சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கினார் மாவட்ட நீதிபதி பாரதிதாசன்.

நேற்று கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை நடத்தினார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு போலீஸ் காரணம் என குற்றச்சாட்டு. காவல் நிலையத்தில்  நடந்தது என்ன என்பது குறித்து மாவட்ட நீதிபதி பாரதிதாசன் போலீசாரிடம் விசாரணை.

*காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்! இயக்குனர் ஹரி
சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்துவிட கூடாது. இதற்கு ஒரே வழி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறல் அந்த துறையையே களங்கப்படுத்தியுள்ளது. - இயக்குனர் ஹரி

*சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகன் மரணம் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கம்.- பாஜக மாநில தலைவர் முருகன்.

*சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது.

கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிரிழந்தனர். காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக்-அப் டெத் என்று பெயர். -அமைச்சர் கடம்பூர் ராஜூ.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages