சமூகநீதி காக்க ஒரு வேண்டுகோள்! - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். - Agnipuratchi

சமூகநீதி காக்க ஒரு வேண்டுகோள்! - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

Share This

சமூகநீதி காக்க ஒரு வேண்டுகோள்! - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

சமநிலையற்ற, சமூகநீதியற்ற இந்திய சமுதாயத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இதுவரை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் பற்றியும்,  சமூக அநீதிகளை களைவதற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்கள் குறித்தும் முகநூலில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

ஆனாலும், மத்திய அரசு நம்மீதும் சமூகநீதி மீதும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டு தான் இருக்கிறது.

நமக்கு கடைசியாக இழைக்கப்பட்ட சமூக அநீதியும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின்  தலையில் விழுந்த கொடூரமான சம்மட்டி அடி எதுவென்றால் மருத்துவப் படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட  நீட் தேர்வும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு  27% இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதும் தான்.

இந்தியாவில் மொத்தம் 54% பிற்படுத்தப்பட்ட மக்கள் இருப்பதாக மண்டல் ஆணையத்தின் அறிக்கையில்  கூறப்பட்டிருக்கிறது. அந்த ஊமை சனங்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும்  சமூகநீதியை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகத் தான் உயர்நீதிமன்றத்தின் படிகளிலும், உச்ச நீதிமன்றத்தின் படிகளிலும் ஏறிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இன்னும் நமக்கு சமூகநீதி கிடைக்கவில்லை; விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற ஊமை சனங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகவும், சமூகநீதியைக் காக்க வேண்டும் என்பதற்காகவும்  தான் ‘‘சுக்கா.... மிளகா... சமூகநீதி’’ என்ற தலைப்பில் சமூகநீதித் தொடரை எனது முகநூல் பக்கத்தில் எழுதி வருகிறேன். அதை நீங்கள் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages