தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத் தப்பட்டுள்ளது தமிழகத்தில் சென்னை யில் தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது.ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை சந்தித்த பின்னர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அரசின் முயற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் சோதனை கள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தான் அதிகம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சரியான சிகிச்சையின் மூலம் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு.
தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.80% ஆக உள்ளது.
பிசிஆர் கருவி சோதனை குறித்த ஸ்டாலினின் குற்றச்சாட்டு தவறானது.
நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார்.
தமிழகத்தில் 4,51,800 பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளன. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான், அதிகளவில் சோதனை செய்து வருகிறோம்.
தமிழகத்தில் வெண்டிலேட்டர்களின் தேவை குறைவாகவே உள்ளது.
வென்டிலேட்டர்கள் தொடர்பான ஸ்டாலினின் குற்றச்சாட்டு தவறானது.
சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு
இந்தியாவிலேயே அதிகம் பேர் குணமடைவது தமிழகத்தில் தான்
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.
வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அறிகுறி தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
No comments:
Post a Comment