அக்னிப்புரட்சி இன்றைய (05.07.2020) முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.07.2020) முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.07.2020) முக்கிய செய்திகள்

*உலகளவில் 1.13 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,72,004 ஆக உயர்வு.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,32,861 ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,33,942 ஆக அதிகரிப்பு.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை - 29.35 லட்சம்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 35,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை - 15.78 லட்சம்.

*உலகளவில் கொரோனா பாதிப்பில் 3ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவை நெருங்கியது இந்தியா.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,48,315லிருந்து 6,73,165 ஆக உயர்வு.

இந்தியாவில் 4.09 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணம்.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,94,227 லிருந்து 4,09,083 ஆக அதிகரிப்பு.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: இன்று ஒரே நாளில் புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,713 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 68,254 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 60 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 62,778 பேர் குணமடைந்துள்ளனர்.

*தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிப்பு.

*புதுச்சேரியில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 946ஆக உயர்வு.

*இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 244வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்திருந்தார்.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக அமெரிக்காவும் இந்தியாவும் சுதந்திரத்தை கொண்டாடுவதாகவும் மோடி தெரிவித்திருந்தார்.

இந்த டிவிட்டர் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், மோடியை தமது நண்பர் என்று குறிப்பிட்டு இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக தெரிவித்துள்ளார்.

*தமிழகத்தில் இன்று முழு முடக்கம் அமல். பால், மருந்து, மருத்துவ சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை.
ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமை களில் முழு முடக்கம் அமலாகிறது. இன்று காய்கறி, மளிகை பொருட்களின் கடைகள் இயங்காது. இன்றைய தினம் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.

*ஏடிஎம்-இல் ரூ.6 லட்சம் பணம் எரிந்து நாசம். நாமக்கல்: ராசிபுரம் அருகே பாச்சலில் தனியார் ஏடிஎம் மையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் எரிந்து நாசம்

*சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த மிரட்டலை அடுத்து விஜய் வீட்டில் சோதனை நடந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது.

*பீகார் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் மேலும் 23 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் மின்னல் தாக்கியதில் 137 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

*விழுப்புரம் மாவட்டத்தில் காவல்பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப் படுவார்கள் - எஸ்.பி ராதாகிருஷ்ணன்.

*6 மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு தடை:
திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு தடை.ஸ-திருச்சி சரக DIG ஆனி விஜயா தகவல்.

*விழுப்புரம்: திண்டிவனம் அருகே கொல்லியங்குனம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று. கொரோனா உறுதியான 57 பெண் காவலர்களும் பயிற்சி பள்ளியிலேயே தனிமைப்படுத் தப்பட்டுள்ளனர்.

*கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா.
கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

*மகாராஷ்டிராவில் மும்பை கொரோனாவால் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 7,074 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,00,064- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 295 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 8,671-ஆக அதிகரித்துள்ளது.

*தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் கோழிக்கடை உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அம்மாப்பேட்டையில் இரவு கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பும் போது உதயா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உதயாவை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை  போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணங்கள் குறித்தும் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

*🪀விழுப்புரம்: திண்டிவனம் அருகே கொல்லியங்குனம் பயிற்சி பள்ளியில் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று

கொரோனா உறுதியான 57 பெண் காவலர்களும் பயிற்சி பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

* என்.எல்.சி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்த நிதியுதவியை நேற்று நெய்வேலியில்  மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.#எம்‌.சி.சமபத் எம்.எஸ்.சி.. அவர்கள் தலா ₹3 லட்சம் வீதம் 6 பேருக்கு ₹18 லட்சத்தை  வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.#சந்திரசேகர் சகாமுரி இ.ஆ.ப அவர்கள் மற்றும் என் எல் சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

*🪀மதுரை மாவட்டத்தில் ஒரேநாளில் 315 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 4,091ஆக உயர்வு
மதுரை மாவட்டத்தில் இதுவரை 994 பேர் குணமடைந்துள்ள நிலையில் 57 பேர் உயிரிழப்பு

*திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தற்காலிக தடை - திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை

திண்டுக்கல் மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை'

தமிழகத்தில் 7 ஆவதாக திண்டுக்கல் மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடைவிதிப்பு

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்தை தொடர்ந்து திண்டுக்கல்லிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை

*விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,167 ஆக அதிகரிப்பு

*கடலூர்-நெல்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர்-நெல்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-வது உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் என்பவர் உயிரிழந்தார்.

*மெல்ல மெல்ல டெல்லியில் கட்டுக்குள் வரும் கொரோனா - பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 70% பேர் குணமடைந்தனர்!

இந்திய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தலைநகர் டெல்லி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை டெல்லியில் மொத்தம் 97 ஆயிரத்து 200 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 68 ஆயிரத்து 256 பேர் குணமடைந்து உள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்களில், 70 சதவீதமாகும். 

*10,11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், முகாம் அலுவலர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

*சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? - ஸ்டாலின்’:

நகராட்சி நிர்வாக ஆணையகரத்தின் தலைமை பொறியாளர் மாற்றம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா?

தலைமை பொறியாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சி பொறியாளரை நியமிக்கக்கூடாது என விதி உள்ளது.
- மு.க.ஸ்டாலின்.

*தென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் 10 லட்சம் பிசிஆர் கருவிகளுக்கு ஆர்டர் தரப்பட்டது
தமிழக சுகாதாரத்துறையிடம் தற்போது 5.60 லட்சம் பிசி ஆர் கருவிகள் இருப்பில் உள்ளன.

*முதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை'-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தற்போது சிபிஐ விசாரணை தேவையில்லை என திமுக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே முதல்வர் நடவடிக்கை எடுத்துவருகிறார். -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

*டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 106 வயது முதியவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் தகவல்

கொரோனாவால் இருந்து மீண்ட 106 வயது முதியவர் 4 வயதாக இருந்தபோது 1918ல் ஸ்பானிஸ் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவர் என்பத குறிப்பிடத்தக்கது

*தமிழகம் முழுவதும் நாளை 25 ஆயிரம் ஓட்டல்கள் திறப்பு - தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என அரசு அறிவித்து உள்ளது. கடைகள் செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம்  முழுவதும் நாளை 25 ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கட சுப்பு  தெரிவித்துள்ளார்.  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஓட்டல்கள் இயங்கும் என்றும், 

பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.  வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும் வெங்கடசுப்பு தெரிவித்தார்.

*புதிய கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் தாஜ்மஹால்...!!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அதை காண அனுமதி - தொல்லியல் துறை

*மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம்
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 4 நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

*'வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு. காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.
கோவை, ஈரோடு, சேலம், தேனி மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு. - வானிலை மையம்.

*தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு. -வானிலை மையம்.

*அனைத்து துறை அதிகாரிகளையும் இணைத்தது போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணி நடைபெறுகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி

அனைத்து துறை அதிகாரிகளையும் இணைத்தது போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணி நடைபெறுகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் தான் அதிக பாதிப்பு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் எனவும் கூறினார்.

*உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

மோடி நகரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்த 4 தொழிலாளர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

*டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 106 வயது முதியவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் தகவல்

டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 106 வயது முதியவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட 106 வயது முதியவர் 4 வயதாக இருந்த போது 1918-ல் ஸ்பானிஸ் காய்ச்சலில் இருந்து மீண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages