பால் கொள்முதல் விலையை தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ10 , ரூ12 குறைத்துள்ளதால் விவசாயிகள் கடும் பாதிப்பு. பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

பால் கொள்முதல் விலையை தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ10 , ரூ12 குறைத்துள்ளதால் விவசாயிகள் கடும் பாதிப்பு. பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

பால் கொள்முதல் விலையை தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ10 , ரூ12 குறைத்துள்ளதால் விவசாயிகள் கடும் பாதிப்பு. பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி     
    
பால் கொள்முதல் விலையை தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ10 , ரூ12 குறைத்துள்ளதால் விவசாயிகள் கடும் பாதிப்பு - அதே நேரத்தில் நுகர்வோருக்கு விற்பனையில் பால் விலையும் குறையவில்லை லிட்டருக்கு ரூ 10, ரூ15 அதிகரித்துள்ளது. ஆவின் பால் விலை நிர்ணயம்போல் தனியார் பால் கொள்முதல் விலையை, விற்பனை விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் - ஜி.கே.மணி     
     
விவசாயிகளும் வீட்டில் மாடு வளர்ப்போரும் உற்பத்தி செய்யும் பால் அரசு நிறுவனமானஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களும் பால் கொள்முதல் செய்கின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 16% மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்றன.தனியார் நிறுவனங்கள் 84% பால் கொள்முதல் செய்கின்றன.         
        
கொரோனா பாதிப்பு காலத்தில் தீவனம் விலை உயர்ந்துள்ள நிலையில் ஆவின் நிறுவனத்தைவிட தனியார் பால் நிறுவனங்கள் பால் கொழுப்பு அடிப்படையில் சராசரியாக ஒரு லிட்டருக்கு ரூபாய் 10, ரூபாய்12 என கொள்முதல்முதல் விலையை குறைத்து வாங்குகின்றன.இதனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் கறவை மாடு வளர்த்து இதையே நம்பி பிழைப்பு நடத்துவோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

அதே நேரத்தில் வீடுகளில் பால்
பயன்படுத்தும் பொதுமக்களான நுகர்வோருக்கு பால் விலையை தனியார் நிறுவனங்கள் குறைத்து விற்பனை செய்யவில்லை.ஆவின் பால் விலையைவிட தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ 10, ரூ 12, ரூ 15 என கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றன. கொரோனா பாதிப்பு காலத்தில் பால் வாங்கும் பொதுமக்களான நுகர்வோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்களுக்கு கூடுதல் இலாபமே.
     
எனவே கொரோனா பாதிப்பு காலத்தில் பால் உற்பத்தியாளரகள் மற்றும் விவசாயிகளுக்கான பாதிப்பையும் பால் பயன்படுத்தும் பொதுமக்கள் நுகர்வோரின் கஷ்ட நிலையை உணர்ந்தும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விலை நிர்ணயம் செய்துள்ளதுபோல் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலையையும் விற்பனை விலையையும் அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இன்றைய நெருக்கடியான காலத்தில் இது மிக மிக முக்கியம். பால் உற்பத்தியாளர்களும் விவசாயிகளும் பொதுமக்களும் முன்வைத்துள்ள கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages