அக்னிப்புரட்சி இன்றைய (12.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.07.2020) முக்கிய செய்திகள்.

*உலக அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் -  1,28,39,566

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் -  5,67,574

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள்- 7,47,7,683

அமெரிக்காவில் 3,355,646 -பேருக்கும் பிரேசிலில்  1,840,812 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,20,916லிருந்து 8,49,553ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,15,386லிருந்து 5,34,621ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123லிருந்து 22,674ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,168 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 77,338 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 89,532 பேர் குணமடைந்துள்ளனர்.

*தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது வாரமாக தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டும், சாலைகள் வெறிச்சோடியும் காணப்படுகிறது

*இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 28,637 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  8,49,553ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 8,49,533ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,34,620 பேர் குணமடைந்துள்ளனர். 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 2,80,151 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மொத்த எண்ணிக்கை 8,49,533ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,34,620 பேர் குணமடைந்துள்ளனர். 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 2,80,151 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல், 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,34,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,898 பேர் உயிரிழந்துள்ளனர்.3வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,10,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,334 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 40,941, ராஜஸ்தானில் 23,748, மத்திய பிரதேசத்தில் 17,201, உத்தரப்பிரதேசத்தில் 35,092, ஆந்திராவில் 27,235, தெலங்கானாவில் 33,402, கர்நாடகாவில் 36,216, கேரளாவில் 7,438 புதுச்சேரியில் 1,337 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

*கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் உத்தரவு:
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கணக்கிட ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது.

43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை.
இதுவரை 23,000 கருவிகள் வாங்கப்பட்டுள்ளன மீதமுள்ள கருவிகள் ஒரு சில தினங்களில் வாங்கப்படும்.- அமைச்சர் விஜயபாஸ்கர்.

*புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் நியமனம்.

சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ்-ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில்,
அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். நான் இந்திய மருத்துவர்களை நம்புகிறேன். இருவரும் உடல் நல பிரச்சினைகளை கடந்து விடுவார்கள். அவர்கள் மீண்டும் நல்ல உடல் நிலையுடன் தேறி வலம் வலம் வந்து சாதனையாளர்கள் என நிரூபிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

*நடிகர் ரஜினி காந்த் அமிதாப்பச்சனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். மேலும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்..

*மதுரை: பொதுமுடக்கம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு.
மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 14ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.
ஜூலை 15ஆம் தேதி முதல் ஏற்கெனவே இருந்த பொதுமுடக்கம் தொடரும்.

*கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் நாளை முதல் 26ம் தேதி வரை முழு கடை அடைப்பு

மருந்துகடை, பாலகம்  தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும்
காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறிகள் விற்பனைக்கு அனுமதி
- கூடலூர் நகராட்சி

*கடலூர்:என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்(50) என்ற தொழிலாளி உயிரிழப்பு.

*சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு!
சென்னையில் 17,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!
கோடம்பாக்கம்-2481, அண்ணா நகர்-1941, தேனாம்பேட்டை-1760,
தண்டையார்பேட்டை-1407, ராயபுரம்-1304, அடையாறு-1224
திரு.வி.க.நகர்-1211, வளசரவாக்கம்-1059, அம்பத்தூர்-997, திருவொற்றியூர்-776 பேருக்கு சிகிச்சை

*கொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார் ஸ்வப்னா.
தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியது என்.ஐ.ஏ கொச்சி அலுவலகத்தில் ஸ்வப்னாவிடம் விசாரணையை தொடங்குகிறது என்.ஐ.ஏ.

*கொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போலீசார் தடியடி,
கேரளா: கொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி. தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக காங்., பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

*மதுரையில் பொதுமுடக்கம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 14ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
ஜூலை 15ஆம் தேதி முதல் ஏற்கெனவே இருந்த பொதுமுடக்கம் தொடரும்

*புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் எஸ்.பியாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக இருந்த ஸ்ரீநாத் நியமனம்

*திருப்பூரில் இன்று முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

*மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 5,977 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,134 பேர் குணமடைந் துள்ளனர்.

*விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் 1,483 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எனவும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்கவேண்டும் என்று சோனியா காந்தியிடம் அக்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

*திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,638-ஆக உயர்ந்துள்ளது.

எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆகவும், சிகிச்சை பெறுவோர் 2642-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3874-ஆக உள்ளது.

*பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவரது கணவர் மற்றும், மாமனாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

*சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக கைதான மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்: எஸ்.பி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக கைதான மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவலர்கள் வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், ஆகியோரையும் எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் இதுவரை 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

*செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,024-ஆக உயர்ந்துள்ளது.

எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154-ஆகவும், சிகிச்சை பெறுவோர் 3,360-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,357-ஆக உள்ளது.

*தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,729-ஆக உயர்ந்துள்ளது.

எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆகவும், சிகிச்சை பெறுவோர் 1,136-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 572-ஆக உள்ளது.

*திமுக என்றாலே வன்முறைக் கலாச்சாரம்தான் - அமைச்சர் ஜெயக்குமார்.

நில அபகரிப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அதிகம் இருந்தது.
துப்பாக்கிக் கலாச்சாரமும் தற்போது திமுகவில் தலைதூக்கிவிட்டது.
சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது.

திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்.

*திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்தது.

*தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14  நாட்கள் நீதிமன்ற காவல். இருவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தகவல்

*கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு-விருத்தாச்சலம் நகராட்சி அறிவிப்பு.

பால், மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவு.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடவடிக்கை.

*திருப்பத்தூர்: ஆம்பூரில் ஊரடங்கை மீறி இயக்கிய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் இளைஞர் முகிலன் தீக்குளித்தார் - மருத்துவமனையில் அனுமதி.

*கர்நாடகாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் உயிரிழப்பு!
இன்று மேலும் 2,627 பேருக்கு கொரோனா உறுதி. மொத்த பாதிப்பு 38,843 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 684 பேர் உயிரிழப்பு.

*நாகலாந்தில் நாய் இறைச்சிக்கு தடை விதித்து மாநில அரசு ஆணை

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages