அக்னிப்புரட்சி இன்றைய (13.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.07.2020) முக்கிய செய்திகள்.

*உலக அளவில் 571,518 பேர் பலி.

கொரோனாவுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த கொரோனாவால் 1,30,34,955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலகம் முழுவதும் கொரோனாவால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,71 லட்சத்தை தாண்டியது.

5,71,518 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

கொரோனா வைரசிலிருந்து 7,581,525 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,49,553லிருந்து 8,78,254ஆக உயர்வு:

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,34,621லிருந்து 5,53,471ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,674லிருந்து 23,174ஆக உயர்வு.- மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: இன்று ஒரே நாளில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,140 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 78,573 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 66 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 92,567 பேர் குணமடைந்துள்ளனர்.

*கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: ரஷ்யாவில் மனிதர்கள் மீதான சோதனை முடிவிற்கு வந்தது.

முழுமையாக மனிதர்கள் மீது சோதனை செய்து ரஷ்யா சாதனை.

உலகிலேயே முதல்முறையாக மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்துள்ளது ரஷ்யா.

எங்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனை பாதுகாப்பானது - மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி அறிவிப்பு.

*வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்தது

சிறப்பான ஆட்டம் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

*இனி வாரத்தில் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்கள் இயங்கும்.
காலை 10.30 மணிக்கு ஊழியர்கள் தவறாமல் வருகைதர வேண்டும்.
கோப்புகள் தேக்கமடைவது மற்றும் அரசுப் பணிகளில் தொய்வு ஏற்படுவதைத் தடுக்க அரசு சுற்றறிக்கை.

*திருப்போரூர் கோஷ்டி மோதல்  தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் கைது:

இமயம் குமார், எம்எல்ஏ இதய வர்மன் தரப்பினர் இடையே மோதலால் துப்பாக்கிச் சூடு.

எம்எல்ஏ இதயவர்மன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இமயம் குமாரும் கைது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை கைது செய்து விசாரணை.

*தீவிரவாதத்திற்கு தங்க கடத்தல் பணம்?:

கேரளாவில் தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தங்கக்ம் கடத்தல் குறித்த ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

*சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கு தொடர்பாக மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு:

நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைத்தார் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார்.

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி- சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை: சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான குழு சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை.

*பொது போக்குவரத்து பயன்பாடு குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார்.
நவம்பர் வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி மட்டுமே இலவசமாக வழங்கப்படும். - அமைச்சர் காமராஜ்.

*சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகின: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் cbseresults.nic.in  என்ற இணையதள முகவரியில் அறியலாம்.

*தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் கணினிமயமாகின்றன.
டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.

மதுபானங்களின் இருப்பு, விற்பனை விவரங்களை அறிக்கையாக தயாரித்து கணினிமயமாக்க டெண்டர் அறிவிப்பு.
அனைத்து கடைகளையும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தையும் தொழில்நுட்பம் மூலம் இணைக்க நடவடிக்கை.

*தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி.

*மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
உத்திரப்பிரதேச பெண் தொடர்ந்த வழக்கிற்கும்,  தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*பழனி தண்டாயுதபாணி கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் நிவாரணம் கோரி மனு. வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. மொட்டை அடிக்கும் தொழிலாளர் களுக்கு நாள்தோறும் ரூ.600 நிவாரணம் தேவை மனுதாரர்.
பெரிய கோவில்கள் திறக்கப்படாததால் வாழ்வாதாரம் இழப்பு -மனுதாரர்.

*காங். தலைவர்கள் வீடுகளில் ஐடி சோதனை!
ராஜஸ்தான் மாநில அரசியலில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், மாநில காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகள் உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

*போலி சான்றிதழ் பயன்படுத்தி அரசு துறையில் வேலைக்கு சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ்:
தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தகவல்.
12ஆம் வகுப்பு  படித்த ஸ்வப்னா அரசு உயர் பதவியில் சேர்ந்தது குறித்து என்ஐஏ விசாரணை.

கேரள தங்க கடத்தல் வழக்கு - என்ஐஏ விசாரணையில் பரபரப்பு தகவல்கள்.
பி.காம் சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்து பணியில் சேர்ந்தது அம்பலம்.

*கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்:

விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோரின் வாழ்க்கையில் தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்த விவாதம் ஆக்கப்பூர்வமாக இருந்தது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள்,தகவல் பாதுகாப்பு குறுத்தும் விவாதித்தோம். கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகுளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தேன்- பிரதமர் மோடி.

*உயர் வேகம் கொண்ட இணைய சேவையை வழங்கும் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களின் Platinum மற்றும்  RedX பிரீமியம் இணைய திட்டங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இடைக்கால தடை விதித்தது. சேவை விதிமுறைகளின் தரத்தை மீறியதற்காக  தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

*லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது. வேலூர்: மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய வேப்பங்குப்பம் இளநிலை மின் பொறியாளர் ஜெய்சங்கர் கைது.

*கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ₹75000 கோடி முதலீடு- :CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு.

*ஜூலை 31 வரை பொது போக்குவரத்து இல்லை-தமிழக அரசு.
தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு.
ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது - தமிழக அரசு.

*பயங்கரவாத நடவடிக்கைகளுக் காகவே ஸ்வப்னா சுரேஷ் தங்க கடத்தலில் ஈடுபட்டார். என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவில் என்ஐஏ குற்றச்சாட்டு

*தேர்தல் நடத்தும் விதிமுறை 2019-20 சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். அரசியல் கட்சிகளைக் கேட்காமல் சட்டத்திற்கு புறம்பாக திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.

*5 முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம். தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான பெடக்ஸ், யு.பி.எஸ் நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

*புதுச்சேரி, வில்லியனூர் வடமங்கலத்தில் உள்ள  இந்துஸ்தான் லீவர் கம்பெனி  எதிரே வேகமாக வந்த கார், சைக்கிள், பைக்கள் மீது  ஒன்றின் மேல் ஒன்றாக இடித்து விபத்து ஏற்படுத்தியதால் சம்பவ இடத்திலேயே 2 பேர் மரணமடைந்தனர்.

*தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது.
என்ஐஏ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

*கருப்பர் கூட்டம் இணைய தள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  வழக்குப் பதிவு.
சாதி, மத, இன- மொழி ரீதியான மோதலை தூண்டுவதாக வழக்கு.
சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

*வானத்தை நோக்கி சுட்டதற்கு பொய் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏவை கைது செய்துள்ளது திட்டமிட்ட சதிச்செயல். திமுகவை வன்முறைக் கட்சி எனக்கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு கண்டனம்.
திமுக எம்.எல்.ஏ சட்டத்தின் முன் நின்று நியாயத்தை நிலைநாட்டுவார்- ஆர்.எஸ்.பாரதி.

*கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம்: வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை பயணம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.

*இராமர் ஒரு நேபாளி: நேபாள அரசின் பிரதமர் சர்மா ஒளி
இராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது. இந்தியாவில் அல்ல....
நேபாள நாட்டின் பிரதமர் ஒளி

*போலந்து அதிபராக ஆண்ட்ரெஸ் டுடா மீண்டும் தேர்வு. போலந்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதை அதிபர் Andrzej Duda தொடர்ந்து இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆதரவாளரான  Andrzej Duda, 51 சதவீத வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வார்சா மாநக மேயரான Rafal Trzaskowski-ஐ விட 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி வாகை சூடினார்.

அதே சமயம், 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ள Rafal Trzaskowski பலம் வாய்ந்த எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சத்தை தவிர்த்து ஏராளமானோர் வாக்கு செலுத்த முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages