இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு 200 கோடி ஆர்டர் - Agnipuratchi

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு 200 கோடி ஆர்டர்

Share This

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு  200 கோடி ஆர்டர்

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது.

இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்த சோதனை முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்னர் நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் அட்ரியன் ஹில் கூறியிருப்பதாவது.

இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலும் அனைவரிடமும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கண்டுள்ளோம். அதாவது தொற்றுநோயைத் தடுக்கும் மூலக்கூறுகளான நடுநிலையான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அத்துடன் உடலின் டி-செல்களில் ஒரு எதிர்வினையையும் இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது. இந்த செல்கள் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டி-செல்லின் எதிர்வினை மற்றும் ஆன்டிபாடிகள் இருப்பது மிகவும் முக்கியமானது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனையில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கலாம்.

மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்கும்.

*chAdoX1ncov-19 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசிக்கு 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது. இவ்வாறு அட்ரியன் ஹில் தெரிவித்தார்.

இதைப்போல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனையின் தலைமை ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்டு கூறுகையில்

இந்த தடுப்பூசி பரிசோதனையில் நம்பகமான முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது என்பதை அறிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையும் ஏற்கனவே தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 2 வாரத்திற்குள் இதற்கான முழு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages