அக்னிப்புரட்சி இன்றைய (23.07.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.53 கோடியாக அதிகரிப்பு.
உலகளவில் இதுவரை 93.43 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
6.29 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
*இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 29,557 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்- சுகாதார அமைச்சகம்.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 28,732லிருந்து 29,861ஆக உயர்வு.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,336 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 90,900 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 88 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 3,232 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,210 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,36,793 பேர் குணமடைந்துள்ளனர்.
*பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்-க்கு கொரோனா.
தஞ்சை: பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியான எம்எல்ஏவுக்கு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை.
*ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் அனுப்புகிறது ஏர் இந்தியா.
ஊழியர்களை 6 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு ஊதியமின்றி விடுப்பில் அனுப்பும் திட்டத்துக்கு ஏர் இந்தியா ஒப்புதல். 2 ஆண்டு விடுப்பு என்பதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்.
*சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.38,520 க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.42 அதிகரித்து ரூ.4,815க்கு விற்பனை. கடந்த 4 மாதங்களில் தங்கத்தின் விலை ரூ.8,000 வரை அதிகரித்துள்ளது.
வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.2,700 உயர்வு .
*கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 184 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,125-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
*அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.! அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களை பாதுகாப்பதில் தொடக்கம் முதலே கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
10 கோடி தடுப்பு மருந்துகளை உடனே தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
*விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு கொரோனா உறுதி*
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. விழுப்புரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2626 ஆக உயர்ந்துள்ளது.
*ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் அனுப்புகிறது ஏர் இந்தியா'
ஊழியர்களை 6 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு ஊதியமின்றி விடுப்பில் அனுப்பும் திட்டத்துக்கு ஏர் இந்தியா ஒப்புதல் 2 ஆண்டு விடுப்பு என்பதை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்
*கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், தனிமைப்படுத் தப்பட்டுள்ள மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை 30-ம் தேதிக்குள் பெறுவதில் இருந்து விலக்கு.
சூழல் சரியான உடன், பள்ளிக்கு சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு.
*புதுச்சேரி தட்டாஞ்சேரியை சேர்ந்த கொரோனா பாதிப்பு உறுதியான 40 வயது நபர் தலைமறைவாகியுள்ளார்.
தலைமறைவான நபரால் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக தாசில்தார் குமரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
*நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு 3 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த 63 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
*வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,642 ஆக அதிகரித்துள்ளது.
*தேனி மாவட்டத்தில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,069 ஆக அதிகரித்துள்ளது.
*தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 'கோவாக்சின்' பரிசோதனை இன்று தொடக்கம். சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் நடக்கிறது...!!
*கல்லூரிகளில் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து உத்தரவு
இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி
ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவு
*காட்டாங்குளத்தூர் SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு இன்று பரிசோதிக்க தொடங்குகிறது
முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு 14 நாட்கள் கண்காணிப்பு.
*நெல்லை புதிய பேருந்து நிலையப்பகுதியில் தற்காலிக மொத்த விற்பனை காய்கறி சந்தை செயல்பட்டு வந்த நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டு வந்த தூய்மைப்பணி மேற்பார்வையாளர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பேருந்து நிலையம் இன்று மூடப்பட்டது.
*ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்.
*இந்தியாவில் முதல்முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் மாநிலம் தமிழகம் தான்
சின்ன குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும், அவை அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
*சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு தகுதியில்லை, மத்திய பாஜக அரசுதான் அம்பேத்கரை கொண்டாடுகிறது - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
*ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன இடத்தில் ஊட்டி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
*தமிழகத்த்தில் 5137 கோடி ரூபாய் முதலீட்டில் 16 நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழக முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
இதன் மூலம் 6555 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தகவல்.
*இந்தியாவின் இயற்கை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு வடகிழக்கு இந்தியா ஒர் எடுத்துக்காட்டு
நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் - பிரதமர் நரேந்திர மோடி
*கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
*புதுக்கோட்டை மாவட்டம் போச்சம்பள்ளியில் மோதலை தடுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு சம்பவம் காவல் உதவி ஆய்வாளர் சரவணனிடம் கோட்டாட்சியர் விசாரணை சமூக வலைதள கருத்தால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது..
*சூர்யா தேவி கைது!!!
நடிகை வனிதாவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த சூர்யா தேவி என்பவரை சென்னை வடபழனி மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்
*வடகிழக்கு இந்தியா முன்னேற மற்றும் செழிப்படைய பிற பகுதிகளுடனான இணைப்பு மிக அவசியம்
பாதுகாப்பான மற்றும் தன்னிறைவான இந்தியா உருவாகவும் இது அவசியம்
மணிப்பூர் நீர் விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் நரேந்திர மோடி உரை
*அம்பேத்கரை போற்றும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுவது -
பாஜக தமிழக தலைவர் முருகன்
சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை கந்த சஷ்டி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாமதமாக கருத்து தெரிவித்து உள்ளார் - முருகன்..
*தமிழக ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பாதுகாப்பு, தீயணைப்பு படை வீரர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
*பள்ளி பாடத்திட்டங்கள் குறித்த 18 போ் கொண்ட குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்..
*நடிகைகள் கஸ்தூரி, லட்சிமி ராமகிருஷ்ணன் மீது நடிகை வனிதா வடபழனி காவல்நிலையத்தில் புகார்
தன்னை பற்றியும் 3 திருமணம் பற்றியும் சமுக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு
*திருவண்ணாமலையில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பாதிப்பு எண்ணிக்கை- 4,482
*தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.7 வரை இடைத்தேர்தல் இல்லை
கொரோனா சூழலால் மக்கள் நலன் கருதி தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - இந்திய தேர்தல் ஆணையம்
*ஆகஸ்ட் 17 ம் தேதி முதல் நடக்க இருந்த முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைப்பு
கொரோனா பணியில் மருத்துவர்கள் மும்முரமாக இருப்பதால் அரசு நடவடிக்கை மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிவிப்பு..
*கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், டியூஷன் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க இயலாது - உச்சநீதிமன்றம்
*ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரம் - மாநகராட்சி ஆணையர் விளக்கம்
கேளம்பாக்கம் பண்ணை வீடு செல்ல இ-பாஸ் பெற்றாரா ரஜினிகாந்த்?
நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்று வரும் நிலையில் கேள்வி எழுந்துள்ளது
ஒன்றரை லட்சம் இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன - அனைத்தையும் ஆய்வு செய்தே விளக்கம் கூற முடியும்
*கொரோனாவை தடுக்க அனைவரும் மாஸ்க் அணிவதை கடைபிடிக்க வேண்டும் கூட்ட நெரிசலை தடுக்க வேண்டும் இதுதான் தற்போது மருந்து
- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
*கொரோனா காரணமாக குவைத்தில் சிக்கியுள்ள 2000 தமிழர்களை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கின் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
*கொரோனா காலகட்டத்தில் வேலையின்றி சம்பளம் அளிக்கக்கூடாது என்பதற்காகவே உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன் மீண்டும் வேறு மண்டலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து தனிக் கமிட்டி விசாரணை மேற்கொண்டு வருகிறது. -சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
*யோகாவை பள்ளிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு
- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
யோகாவினால் ஏற்படக்கூடிய பலன்களை நீதிமன்றம் நன்கு அறியும்
இருப்பினும் அதனை பள்ளிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக்குவது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய முடியும்
நீதிமன்றம் அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது
- நீதிபதிகள்
*எஃப் ஐ ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை பிரதியை, கேட்ட 24 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபி க்கள் மற்றும் உள்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு
- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
*அரியலூர் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடல்.: கிருமி நாசினி தெளிப்பு
அரியலூர் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுவலக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
*என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலருக்கு கரோனா
புதுச்சேரியில் வசித்து வரும் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் அவர்களுக்கு கரொனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகஇருப்பவர் பாலன் (வயது 67). இவர் கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நியமன எம்எல்ஏவாகவும், ஏஎப்டி மில் சேர்மனாவும் பதவி வகித்தார்.
தற்போது இவர் முதலியார்பேட்டையில் உள்ள உழந்தைகீரப்பாளையம், தியாகி அன்சாரி துரைசாமி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவு இன்று காலை வெளியானது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவர் தனியார் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
*சென்னையிலேயே அதிக அளவில் நோய்த் தொற்று இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் தற்போது சென்னையின் குறைந்த எண்ணிக்கை கொண்ட மண்டலமாக மாறியுள்ளது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
*பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்துவது தொடர்பான யுஜிசி இன் சமீபத்திய சுற்றறிக்கை எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
இரண்டு மூன்று தினங்களில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உறுதி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
*ரஷ்யாவில் வெளியாகும் அப்துல் கலாம் குறித்தான படம்..!
அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு தினமான வருகின்ற 27ம் தேதி, அவரை சந்திக்க வேண்டும் என கனவு காணும் நாளிதழ் விநியோகம் செய்யும் சிறுவனின் கதை குறித்து 'ட்ரீம்ஸ்' என்ற குறும்படம் ரஷ்ய தொலைக்காட்சிகளில் வெளியாக உள்ளது
*சென்னை மேற்கு மாம்பலத்தில் 840 மதுபாட்டில்கள் பறிமுதல்
சென்னை மேற்கு மாம்பலத்தில் சட்டவிரோத விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 840 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2 கார்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து செல்வம் மற்றும் லோகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
*கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. நடிகர் ரஜினி இ -பாஸ் வாங்கவில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்.
*அரியலூர் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடல்.: கிருமி நாசினி தெளிப்பு
அரியலூர் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுவலக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
*இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பாக 3 வது வீடியோ.! ராகுல்காந்தி வெளியீடு
இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பாக 3 வது வீடியோவை ராகுல்காந்தி வெளியிட்டார்.
சீனாவை எதிர்கொள்வதற்கு தொலைநோக்கு பார்வை வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்பதை உறுதியாக கூறுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
*கொரோனாவுக்கு திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் ஆய்வு நிலை என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி
கொரோனாவுக்காக சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் ஆய்வு என்ன நிலையில் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் ராஜஸ்தான் சபாநாயகரின் கோரிக்கை நிராகரிப்பு
சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் ராஜஸ்தான் சபாநாயகரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வரும் 24 ம் தேதி திட்டமிட்டபடி உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று நீதிபரிகள் கூறியுள்ளனர்.
24-ம் தேதி வரை 19 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பதை எதிர்த்து சபாநாயகர் மேல்முறையீடு செய்தார்.
*தங்கக் கடத்தல் கும்பலுடன் அமைச்சர்களின் 8 தனி உதவியாளர்களுக்கு தொடர்பு என தகவல்
தங்கக் கடத்தல் கும்பலுடன் கேரள அமைச்சர்களின் 8 தனி உதவியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்வப்னா கூட்டாளிகளின் செல்போன் லேப்டாப்பில் பதிவான விவரங்களை அறிய என்.ஐ.ஏ.தீவிரம் காட்டி வருகிறது.
*தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
*கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 நபர்களும் நலமுடன் உள்ளனர்.: எஸ்.ஆர்.எம். தகவல்
கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பரிசோதனை சுமார் 6 மாதம் வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
*இதுவரை கொரோனா பாதித்த அதிமுக & திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விபரம்
1)அன்பழகன்..(மரணம்)- சேப்பாக்கம் தொகுதி
2)அரசு- செய்யூர் தொகுதி
3)கார்த்திகேயன்- ரிசிவந்தியம் தொகுதி
4)மஸ்தான் -செஞ்சி தொகுதி
5)கணேசன்- திட்டக்குடி தொகுதி
6)தங்கப்பாண்டியன்-ராஜபாளையம் தொகுதி
7)செங்குட்டுவன்- கிருஷ்ணகிரி தொகுதி..
8)காந்தி- ராணிப்பேட்டை தொகுதி
9)கார்த்திகேயன்-வேலூர் தொகுதி
10)கீதா ஜீவன்-தூத்துக்குடி தொகுதி
*அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விபரம்
11)பழனி- ஸ்ரீபெரும்புதூர் தொகுதி
12)சதன் பிரபாகர்- பரமக்குடி தொகுதி
13)குமரகுரு- உளுந்தூர்பேட்டை தொகுதி
14)அம்மன் அர்ச்சுணன்- கோவை தெற்கு தொகுதி
15)கோவிந்தராசு- பேராவூரணி தொகுதி
*அம்மைச்சர்கள்
16)கே.பி.அன்பழகன்-பாலக்கோடு தொகுதி
17)செல்லூர் ராஜூ-மதுரை மேற்கு தொகுதி
18)தங்கமணி- குமாரபாளையம் தொகுதி
19)நிலோபர் கபில்- வாணியம்பாடி தொகுதி
உட்பட மொத்தம் 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..
No comments:
Post a Comment