அக்னிப்புரட்சி இன்றைய (25.07.2020) முக்கிய செய்திகள்.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,87,945லிருந்து 13,36,861ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,17,209லிருந்து 8,49,432ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,601லிருந்து 31,358ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
இன்று ஒரே நாளில் புதிதாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06737 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,329 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 93,535 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 89 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 3,409 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 7758 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,51,055 பேர் குணமடைந்துள்ளனர்.
*சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் நடிகர் ரஜினிக்கு ரூ. 100 அபராதம்-தாழம்பூர் காவல்துறையினர் நடவடிக்கை.
ஜூன் 26 ஆம் தேதி அபராதம் செலுத்தியதற்கான ரசீது விவரங்கள் வெளியானது. போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்றபோது போலீசார் அபராதம் விதித்ததாக தகவல்.
*விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கையெழுத்து இயக்க போராட்டத்திற்கு ஆதரவு.
மின்சார சட்டத்திருத்தம் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு- திமுக.
ஜூலை 27 இல் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கும் திமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின்.
*அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை : சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு:
https://t.co/bPaKTWyGAN என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம். சான்றிதழ் பதிவேற்றம் நாளை தொடங்க இருந்த நிலையில், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, இதுவரை 2.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்.
*திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்திருப்பேன். கொரோனா நெருக்கடியிலும் புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது - நாராயணசாமி.
*புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா.
என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் அதிர்ச்சி. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எம்எல்ஏ ஜெயபால் பங்கேற்றார். 20ம் தேதி தொடங்கிய கூட்டத் தொடரில் 3 நாட்களுக்கு ஜெயபால் பங்கேற்றார்.
புதுச்சேரி மாநிலத்தில் முதன் முறையாக எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
*புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து; சட்டபேரவை மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
*2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை:
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் புறநகர் பகுதியான ரன்பிர்கர்க் பகுதியில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
*இ-பாஸ் இன்றி கொடைக்கானலுக்கு சென்ற நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
*சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு:
சென்னையில் சிகிச்சை பெறுவோர் -13,743. அதிகபட்சமாக
கோடம்பாக்கத்தில் 2,189 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்ணா நகர்-1756,
திரு.வி.க. நகர்-1221,
அடையாறு-1155,
தேனாம்பேட்டை-1136
அம்பத்தூர்-996,
வளசரவாக்கம்-846,
ராயபுரம்-817,
தண்டையார்பேட்டை-591,
ஆலந்தூர்-536
பெருங்குடி- 417,
திருவொற்றியூர்- 413,
மாதவரம்- 407,
சோழிங்கநல்லூர்-309,
மணலி-196 பேருக்கு சிகிச்சை.
*மூத்த திமுக நிர்வாகிகள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கட்சிப் பணி, மக்கள் சேவை ஆற்ற முடியும். திமுக எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் அறிவுரை.
*சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,232க்கு விற்பனை.
*புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்:
குற்றவாளியை கைது செய்து போலீஸ் விசாரணை. பாதிக்கப்பட்ட சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
*மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று.
மருத்துவர்களின் ஆலோசனை படி தனிமைப்படுத்திக் கொண்டேன் - சிவராஜ் சிங் சவுகான்.
*ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் பொறுப்பு. சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமனம் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.
*தமிழக எல்லையில் ஜ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா-கர்நாடகாவில் 150 முதல் 200 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
பெரிய அளவில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரில் இருந்து ஊடுருவி இந்திய கூட்டாளிகளுடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
*திறந்தவெளியில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் - எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நடவடிக்கை.
*சேலம்: கெங்கவள்ளி கம்பராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா?:
ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*மரத்தடி பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு:
புதுச்சேரியில் மதுபான விற்பனைக் கொள்கையில் அரசுக்கு வருமானம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
இந்த கோரிக்கையின் மீது பேச வாய்ப்பு அளிக்காததால் மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
*புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பேரவையை கூட்டி சட்டமாக்கப்படும்- அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் நாராயணசாமி பேரவையில் தகவல்.
*புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடஒதுக்கீடு வழங்க விரைவில் சட்டம்: 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
- முதல்வர் நாராயணசாமி.
*தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்; குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி- முதல்வர் பழனிசாமி.
*ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா தொடர்பான பணிகள் குறித்து அயோத்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை:
கொரோனா அச்சத்தால் 50 பேர் வரை மட்டும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு.
*சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு: புதுச்சேரியில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைப்பு.
என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பேரவை கூட்டம் மரத்தடியில் நடைபெற்றது.
*கொரோனாவை பரப்பியதாக வழக்கு:
பெங்களூரில் இருந்து இ-பாஸ் பெறாமல் சேலம் செவ்வாய்பேட்டை வந்த 5 பேரில், 2 பேருக்கு கொரோனா தொற்று. கொரோனா தொற்றை பரப்பியதாக 5 பேர் மீது வழக்கு பதிவு.
*புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத் திக்கொள்ள வேண்டும். எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி. அறிவுறுத்தல்.
*ஜெயலலிதா உயில் எழுதிவைக்காதது குறித்து ஜெ.தீபா புதிய விளக்கம்:
ஆபரணங்கள் உள்ளிட்ட ஜெயலலிதா பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் பட்டியலிடவில்லை.
கையகப்படுத்தும் பணிகளை அரசு முறையாக செய்யவில்லை.
எங்களுடைய பூர்வீக சொத்தை அரசு எடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
இந்த வழக்கில் எங்களுடைய தரப்பு நியாயத்தை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.
கல்வி, சேவை நிறுவனங்கள் நடத்த ஜெயலலிதா நினைத்திருக்கலாம்.
அறக்கட்டளை அமைக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் அங்கமாக நாங்கள் இருந்துள்ளோம்.
சமூக சேவை நிறுவனங்களை ஜெயலலிதா பெயரில் அதிமுக தொடங்காதது ஏன் ?
தேர்தல் பிரசாரத்தில் மட்டும்தான் ஜெயலலிதா பெயரை உச்சரித்தார்கள்.
ஜெயலலிதாவின் வாரிசுகளான நாங்கள் மிகவும் எளிய வாழ்க்கையே வாழ்கிறோம்.
அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்தே வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குகிறார்கள்.
வேதா இல்லத்தை விட்டுவிடுங்கள் ஜெ. இல்லத்தை கையகப்படுத்தியது அடக்குமுறை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்வோம்.
*பழைய நிலையே தொடர வேண்டும் சச்சின் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் அசோக் கெலோட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
கொறடா உத்தரவை அடுத்து தகுதிநீக்கம் தொடர்பான இந்த நோட்டீசை எதிர்த்து சச்சின் ஆதரவாளர்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பழைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், சச்சின் தரப்பு கோரிக்கையை ஏற்று மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.
*இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு சென்ற நடிகர்கள் - உரிய விசாரணை நடத்தி வழக்குபதிவு என தகவல்
முன்னதாக ஊடரங்கு காலத்தில் பேரிஜம் ஏரியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக, இருவருக்கும் வனத்துறை சார்பில் தலா ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் விமல் மற்றும் சூரி உட்பட இயக்குனர்கள் அனைவரும் இ-பாஸ் இல்லாமல் கடந்த 15 ஆம் தேதி வந்தததும் உள்ளூர் நபர் ஒருவர் உதவியுடன் அவர்கள் கொடைக்கானலில் தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறியுள்ளதாகவும் கோட்டாட்சியர் சிவகுமார் தெரிவித்தார்.
*கோவையில் முழு ஊரடங்கு - ஆட்சியர் அறிவிப்பு இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராசமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில், கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை எட்டியுள்ளதால் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மாலை 5 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிப்பு போன்ற தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
*மோடி உருவம் பொறித்த ராக்கி கயிறு தயாரிப்பு - 'மோடி சகோதரன்' என இஸ்லாமிய பெண்கள் உற்சாகம்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், பிரதமர் மோடி படத்துடன் இஸ்லாமிய பெண்கள் ராக்கி கயிறு தயாரித்து அசத்தி வருகின்றனர்.
இசை வாத்தியத்துடன் ஒன்றாக கூடியுள்ள அவர்கள், மோடி சகோதரன் என உற்சாகமாக பாடினர்.
மோடியின் முகம் பொதிந்த ராக்கி கயிறில், கல் பதித்த வேலைபாடுகளுடன் தயாரித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் முகம் பொதிந்த ராக்கி கயிறுகளும் தயார் செய்யப்படுகின்றன.
முத்தலாக்கை ரத்து செய்ததால், மோடி தங்கள் சகோதரன் என இஸ்லாமிய பெண்கள் பெருமிதம் தெரிவித்தனர்.
*கொரோனா நோயாளிகள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் ?: பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் மாயமானார்.
இதையடுத்து தன் தந்தையை மீட்டுத்தரக்கோரி அவரது மகன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
காய்ச்சல் முகாமிலிருந்து ஒருவரை கண்டறிந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதுடன் தங்கள் பணி முடிந்துவிடுவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா?
என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
*தமிழக எல்லையில் ஜ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா-கர்நாடகாவில் 150 முதல் 200 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
பெரிய அளவில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரில் இருந்து ஊடுருவி இந்திய கூட்டாளிகளுடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
*திருவேற்காடு அருகே கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை
திருவேற்காடு அருகே கீழ்அயனம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கீழ்அயனம்பாக்கத்தில் 37 வயதான தேநீர் கடை உரிமையாளர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
No comments:
Post a Comment