ஜூலை - 25 நாளை பசுமைத்தாயகம் நாள் நமது நிர்வாகிகள் அவரவர் வீட்டின் முன் ஒரு மரக்கன்று நடுங்கள் அப்போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து நடுங்கள். - பாமக தலைவர் ஜி. கே. மணி
ஜூலை - 25 நாளை பசுமைத்தாயகம் நாள் நமது நிர்வாகிகள், செயல்வீரர்கள் அவரவர் வீட்டின் முன் அல்லது வசிக்கும் பகுதியில் ஒரு மரக்கன்று நடுங்கள் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து நடுங்கள் படம் எடுத்து சமூக ஊடகம் மூலம் பதிவிடுங்கள் அனுப்புங்கள்
நமது இயக்கத்தினர் அனைவரும் ஆண்டுதோறும் ஜூலை 25 பசுமைத்தாயகம் நாளாகக் கடைபிடித்து வருகின்றோம். ஆங்காங்கே மரக்கன்றுகள் நடுதல், பள்ளி - கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்களுக்கு வெள்ளையடித்தல், சாலைகள் செப்பனிடுதல், பேருந்து நிலையங்கள் - தெருக்கள் சுத்தம் செய்தல், இரத்ததான முகாம் நடத்துதல், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை - நோட்டுப் புத்தகம் - பேனா - பென்சில் வழங்குதல், முதியோர்களுக்கு புடவை - வேட்டி வழங்குதல், முதியோர் இல்லங்கள் - ஆதரவற்றோர் இல்லங்களில் உணவளித்தல் போன்ற நற்செயல்கள் செய்துவந்தோம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு நெருக்கடி காலத்தில் ஊரடங்கு நடைமுறையைப் பின்பற்றி வெளியில் செல்லாமல் இருக்கும் சோதனை காலம் என்பதால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
நமது நிர்வாகிகள், செயல்வீரர்கள் நாளை ஜூலை-25ல் அவரவர் வீட்டின் முன் அல்லது வசிக்கும் பகுதியில் ஒரு மரக்கன்று நடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதில் கூட்டமாக சேராமல் ஒருவர் மட்டுமே அல்லது இருவர் மட்டுமே முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளியை பின்பற்றி மரக்கன்று நடுமாறு தெரிவித்துக்கொள்கின்றோம். மரக்கன்று நடுவதை படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிடுங்கள். அனுப்பி வையுங்கள்.
No comments:
Post a Comment