அக்னிப்புரட்சி இன்றைய (29.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.07.2020) முக்கிய செய்திகள்.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் புதிதாக 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,117 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 97,575 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 82 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 3,741 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர்.

*லாக்டவுனை நீடிக்கலாமா? வேண்டாமா - மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை.

மாவட்டவாரியாக கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் பற்றி முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை.

வியாழக்கிழமை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் பழனிச்சாமி.

*தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருச்சி, நாகை, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் கனமழை.
நாமக்கல், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை.

*சென்னையில் பெட்ரோல் விலை 31வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

டீசல் விலை 4வது நாளாக மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

*மேற்கு வங்க மாநிலத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு. ஆகஸ்ட் 31 வரை வாரத்தில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்
ஆக. 1 பக்ரீத் தினத்தில் ஊரடங்கு இல்லை என அறிவிப்பு.

*ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கிதான் கேளம்பாக்கம் சென்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ரஜினி இ-பாஸ் வாங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

*சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி. கிண்டி கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

*திருச்சி மாநகரில் இன்று முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

*போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் போலீசாரும் கைகோர்த்து செயல்படுவதாக கேள்விப்படும் போது வருத்தமளிக்கிறது.

வேலியே பயிரை மேயலாமா எனவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம்-வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு.

*அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்.
தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.

*"சாதி பிரச்சினையை காரணம் காட்டி பணி மாறுதல் கேட்டால், எந்த கிராமத்திலும் மாற்று சாதியினர் பணிபுரிய முடியாது.

அரசு ஊழியர்கள் குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்து. அரசு ஊழியர்கள் அனைத்திலும் முன்களப் பணியாளராக இருந்து உழைக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் தன் குடும்ப நலனை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

*சுற்றுச்சூழலை காக்க மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு:

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து நடிகர் சூர்யா கருத்து.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்துள்ளார்.
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மெளனம் ஆபத்தானது - நடிகர் சூர்யா.
காக்க... காக்க... சுற்றுச்சூழல் காக்க... என சூர்யா கருத்து.

*தமிழக ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு:
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல்.
38 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. மருத்துவரின் அறிவுரைப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைபடுத்தி கொண்டார்.

*தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும்-சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 பெண் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட பெண் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு. கல்வி நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும் என 2010ல் தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி.

*மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தல்.

மத்திய அரசுக்கு அழுத்தம் தர சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை.

தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார், திமுக தலைவர் ஸ்டாலின். மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 13 பேருடன் ஸ்டாலின் பேச்சு.

*தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

6 மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் , தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தகவல்.

*புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்:
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,  கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம்.

*பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது.
மறு தேர்வு நடைபெற்ற பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகும். பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியாகும்.

*பிரான்ஸிடம் இருந்து வாங்கிய 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன:

ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறங்கின.
ரபேல் விமானங்களை விமான படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.

தண்ணீரை பீய்ச்சி அடித்து ராஜ மரியாதையுடன் ரஃபேல் விமானங்களுக்கு வரவேற்பு.
23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விமான படைக்கு இறக்குமதியான போர் விமானங்கள்.

மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனிநபர் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு "இ பாஸ்" அனுமதி தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages