புதுச்சேரியில் வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அனைத்து கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மதுபான கடைகள் இரவு 8 மணி வரை திறக்க உத்தரவு -புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்
புதுச்சேரியில் போராட்டம் பொதுக்கூட்டம் ஊர்வலத்திற்கு தடை நீட்டிக்கப்படுகிறது பொது இடங்களில் 5 பேர் வரை கூடுவதற்கும் ஜூலை 31 வரை தடை
இரவு பத்து மணியிலிருந்து 5 மணி வரை ஊரடங்கு முழுமையாக கடுமையாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்
மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் கட்டாய அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
அனைத்து கடைகள் கோவில்கள் தொழிற்சாலைகளில் தேர்மல் ஸ்கேன் மூலம் மக்களை பரிசோதித்த பின்பே அனுமதிக்க வேண்டும்
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தடை இல்லை. அவர்கள் முழுமையாக பரிசோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப் படுவர்
மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த படி மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச அரிசி பருப்பு வழங்கியதற்கு பாரத பிரதமருக்கு நன்றி
உயர்ந்த வரும் விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசல் உயர்வு இலிருந்து தொழிலாளர்கள், பொது மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு 5 ஆயிரம் வழங்க வேண்டும்
கடந்த நான்கு மாதங்களாக புதுச்சேரியின் வருவாய் பலவாறாக பாதிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு மாநில அரசுக்கு உதவும் ஒரு நிலையை உருவாக்க முன்வரவேண்டும்
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
No comments:
Post a Comment