கடும் வருவாய் இழப்பால், ஏர் இந்தியா ஊழியர்களுக்கான சலுகைகள் 50 சதவீதம் வரை ரத்து
ஏர் இந்தியா ஊழியர்களுக்கான சலுகைகள் 50 சதவீதம் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால், விமான சேவை நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.
இதைதொடர்ந்து, சமீபத்தில் இண்டிகோ நிறுவனம் 10 சதவீதப் பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில். ஏர் இந்தியா நிறுவனம் வெளிட்டுள்ள சுற்றறிக்கையில், விமானிகளுக்கான பல்வேறு படிகளை 40 சதவீதம் வரையிலும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 30 முதல் 50 சதவீதமும், கேபின் குழுவினருக்கு 20 சதவீதமும் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment