மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது தமிழக முதல்வர் பழனிச்சாமி பேச்சு - Agnipuratchi

மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது தமிழக முதல்வர் பழனிச்சாமி பேச்சு

Share This

மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது தமிழக முதல்வர் பழனிச்சாமி பேச்சு

கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா சிறப்பு மையங்கள் மூலம் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன.

கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்படுகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.

பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆக.5 முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages