லடாக் பகுதியில் பிரதமர் மோடி ஆய்வுக்கு பின் இராணுவ வீரர்கள் மத்தியில் - பிரதமர் மோடி பேச்சு.:
எல்லையில் நரேந்திர மோடி!
இந்தியா - சீனா படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் திடிர் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது!
பதட்டம் நிறைந்த இந்திய எல்லைப் பகுதியான லே பகுதிக்கு தற்போது திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
லடாக் பகுதியில் பிரதமர் மோடி ஆய்வுக்கு பின் இராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்
இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது.
இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது.
நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது.
இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு வீர அஞ்சலி.
கல்வான் பள்ளாத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன்!'லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி சூளுரை.
இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் விரும்புகிறோம்.
இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோசத்தை எதிரிகள் பார்த்துள்ளனர். அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப்போவதில்லை.
நாடு பிடிக்கும் காலம் என்பது மலையேறிச் சென்றுவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி.
பேசும்போது திருக்குறள் சொன்ன பிரதமர் மோடி...
No comments:
Post a Comment