புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புதல்வரும் தமிழறிஞருமான மன்னர்மன்னன் அவர்கள் முதுமை காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல். - Agnipuratchi

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புதல்வரும் தமிழறிஞருமான மன்னர்மன்னன் அவர்கள் முதுமை காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

Share This

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புதல்வரும் தமிழறிஞருமான மன்னர்மன்னன்  அவர்கள் முதுமை காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

கோபதி என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தமது பெயரை மன்னர்மன்னன் என்று மாற்றிக் கொண்டார். தந்தை வழியில் இளம் வயதிலேயே இலக்கியப் பணிகளில் ஈடுபட்ட இவர் எண்ணற்ற கவிதை நூல்களையும், வானொலி நாடகங்களையும், உரைநடை நூல்களையும்  எழுதியுள்ளார். தந்தை பாரதிதாசனின் இயக்கப்பணிகளுக்கும், இலக்கியப் பணிகளுக்கும் பின்புலமாக இருந்தவர்.

பாரதிதாசனின் குடும்பப் பொறுப்புகளையும், பதிப்பகப் பணிகளையும் மன்னர்மன்னன் பொறுப்பாக கவனித்துக் கொண்டதால் தான் புரட்சிக் கவிஞரால் இலக்கியப் பணிகளில் முழு மனதுடன்  ஈடுபட முடிந்தது. பாவேந்தரின் மறைவுக்குப் பிறகு,‘கருப்புக் குயிலின் நெருப்புக் குரல்’ என்ற தலைப்பில்   தமது தந்தையின் சிறப்புகள் குறித்த நூலை எழுதி வெளியிட்டார். ஆய்வுக்கட்டுரைகளில் பாரதிதாசன்  குறித்து பிழையான தகவல்கள் இடம்பெற்று இருந்தால் உடனடியாக தலையிட்டு திருத்தம் செய்தவர்.

என்னுடன் நட்பு பாராட்டியவர். தமிழ் வளர்ச்சி குறித்து இருவரும் பல நேரங்களில் விவாதித்துள்ளோம். தமிழ் ஓசை நாளிதழுக்காக, மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற பாவேந்தரின் பாடலை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட விளம்பரப் பாடலில் விருப்பத்துடன் நடித்துக் கொடுத்தவர். தமிழ் ஓசை நாளிதழ், மக்கள் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களின் தமிழ்ப் பணிகளை பல்வேறு தருணங்களில் மன்னர்மன்னன் பாராட்டியிருக்கிறார்.

மன்னர்மன்னன் மறைவினால் தமிழ்த்தாய் அவரது மகன்களில் ஒருவரை இழந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages