கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி: உரிய அனுமதி கிடைத்தவுடன் வர்த்தக ரீதியான உற்பத்தி...இஸ்ரேல் அரசு அறிவிப்பு:
_கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நப்தாலி பென்னட் கூறுகையில், 'பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான ஐ.ஐ.பி.ஆர் உருவாக்கியுள்ள மோனோக்ளோனல் நியூட்ரலைசிங் ஆன்டிபாடி, நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கரோனா வைரஸை அழிக்கக்கூடியது. இந்த மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு காரணமான இந்நிறுவன ஊழியர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் யூத மனம் இந்த அற்புதமான சாதனையைக் கொண்டு வந்தது' எனக் கூறினார். மேலும், இந்தத் தடுப்பு மருந்துக்கு விரைவில் காப்புரிமை பெறப்படும் என ஐஐபிஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் இந்த மருந்து உற்பத்தியைத் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment