நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக துவங்க வேண்டும் - விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனையும் பாதிப்பு விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல். - Agnipuratchi

நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக துவங்க வேண்டும் - விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனையும் பாதிப்பு விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல்.

Share This

நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக துவங்க வேண்டும் - விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனையும் பாதிப்பு விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல்.       
    
மேட்டூர் அணை ஜூன் 12ஆம் நாள் பாசனத்திற்கு திறக்கப்படும் முன்னரே தஞ்சை, நாகை, திருவாரூர்,கடலூர், அரியலூர், திருச்சி,கரூர்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆழ்துளைக்கிணறு பாசனம் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி நெல் நட்டு, தற்போது அறுவடை செய்து கடந்த சில நாட்களாக மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.தற்போது பெய்து வரும் மழையினால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின்றன. விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.கடந்த சில நாட்களாக விவசாயிகள் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.எனவே டெல்டா மாவட்டப் பகுதிகளில் அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க வேண்டும். அப்பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மழையில் நெல் மூட்டைகள் நனைவதை கருதி விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
       
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நெல் விளைவித்துள்ள பகுதிகளில் விவசாயிகள் நலன் கருதி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages